saranya selvaraj - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : saranya selvaraj |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-Jan-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 0 |
கருவறை முதல்
கல்லறை வரை
கருப்பு நிறத்தால்
பயணிக்கும்
எழுத்துக்களே இல்லா
புத்தகம்....!
இன்றோடு எல்லா கஷ்டங்களும்
முடிந்துவிடும் என்ற
கனவுடன் உறங்கபோகும் ஏழைக்கு
எல்லாம் முடிந்துவிடுகிறது
இரவோடு கனவில்.....
விடியலைப்போலவே
விஸ்வரூபமெடுத்து வருகிறது
வறுமை !!!
கவிதாயினி நிலாபாரதி
நிறமற்ற நிழல்களை
நேசிக்கிறேன் நான்
சோகத்திலும் சுகத்திலும்
வெளி வேஷம் போடாத
நிஜ நிழல்கள்
பல வண்ணங்களில்
மாறும் பச்சோந்திகள்
நிழல்களில் இல்லை
இடத்திற்குத் தக்கபடி
எந்தவொரு நிழலும்
இழிவு வண்ணம்
பூசிக்கொள்வதில்லை
சரிந்தாலும் உடையாத
சாய்ந்தாலும் வீழாத
உண்மையில் சாயம்
வெளுக்காத உயரிய நிழல்
நிறங்கள் தீண்டாவிட்டாலும்
நிஜங்களோடு வாழ்கின்றன
காதல் நிழல்கள்
நான் விரும்பிய வண்ணங்களைக்
குடித்து சில நேரம்
கனவின் நிஜங்களில்
நானாகின்றன நிழல்கள்!!
பிரிவென்பதின்றிப் பிறந்திட்ட
நிழல்களை நேசிக்கிறேன் நான் !!