எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழவைத்த மழை..!-Mano Red

சென்னை வந்தாரை வாழ வைத்தது!.
எத்தனையோ இளைஞர்களின் கனவை நிறைவேற்றி இருக்கு, நிறைவேற்றவும் காத்திருக்கிறது. இப்போது
சென்னை தத்தளிக்கிறது.



நல்லார் ஒருவர் உளரே
அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. இப்போ அந்த நல்லவன் எல்லோருக்கும் கெட்டவனா
தெரிகிறான். இதான் சார் நேரம். மழை விடாம பெய்யுது.



வழக்கம் போல வட இந்தியா
மீடியாக்கள் சென்னை மற்றும் தமிழக சோகத்தை கண்டு கொள்ளவில்லை. டிஆர்பி வடைக்காக ஏங்கும் அந்தக் காக்கைகள் கத்துவதற்கு கூட தயாரில்லை.



குழம்பிய குட்டையில்
எல்லா அரசியல்வாதிகளும் ஓட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்! மாண்புமிகு புரட்சிதலைவி
இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று தூபம் போட இங்கு நிறைய தொண்டரடிப்பொடிகள்!

உணவைக் கொடுத்து வாக்காளப் பெருமக்களே என ஓட்டு கேட்கவும் மறக்கவில்லை.



நடிகர்களும் உதவிப் போர்வையில்
மீண்டும் விளம்பரம் தேடவே போஸ்டரும் கையுமாக உலா வருகிறார்கள்.



இந்த மழையை மையமா வச்சு
நாலஞ்சு சினிமா எடுப்பானுக கோடம்பாக்க கிறுக்கனுக.



 



இதற்கிடையில்,



கரண்ட் இல்ல, வீடு இல்ல,
சாப்பாடு இல்ல, தண்ணி மட்டும் ரொம்ப இருக்கு குடிக்க முடில.



பாலம் உடையுது, ரோடு
குழியாகுது, மரம் முறிகிறது, தண்ணில கால் வைத்தால் கரண்ட் அடிக்குது,



நெட்வோர்க் இல்ல..போன்
போகல..எதும் மெசேஜ் அப்பா அம்மாட்ட இருந்து வந்துச்சா தெரியல. நரகத்தின் மாதிரிகள்
நகரமென புரிய வைத்தது மழை.



கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,
முதியவர்கள் முகத்தில் பரிதவிப்புகள்.



தெரு நாய்கள் உணவு இருக்க
இடமின்றி தவித்து அலைகின்றன



சந்து பொந்துல இருந்த
பாம்பு, தவளையெல்லாம் வெளிய வந்தாச்சு!!



மழை பெய்யலைன்னாலும்
புலம்புவோம். மழை பெய்ஞ்சாலும் புலம்புவோம்.



சென்னைக்கு ஒன்னும் ஆகாது, துப்புரவுபணியாளர்கள்
பஸ்ஓட்டுநர்கள்
தீயணைப்புவீரர்கள்
உதவிகுழுக்கள்
சமூகசேவை
 இருக்கும்வரை



சென்னை மாநகராட்சி துப்புரவு
ஊழியர்கள் கடவுளாக இருக்கும்போது, வெளியூர் சொந்தங்கள் சென்னை மக்களை நினைத்து வருந்த
வேண்டாம். உயிரைக் கொடுத்து உதவ ஓடி வருகிறார்கள்.



 வீட்டிற்குச்
செல்லாமல் பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள் இருப்பதால் கொஞ்சம் தைரியம் பிறக்கிறது.



சென்னையின் பலமுகங்களில்
இந்த முகம் கோரமானது. நேரில் பார்த்து அனுபவித்து தத்தளிதுவிட்டேன் என்பதால் என்னவோ புதுமையாக உணர
மனம் வரவில்லை. எங்கோ இருந்துகொண்டு, செய்திகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ’உச்’ கொட்டும்
நீங்கள் இருக்கும்வரை யாருக்கும் ஒன்று ஆகாது.

முடிந்தவரை உதவுவோம். சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும்

என்னதான் இருந்தாலும் சென்னை விட்டுச் செல்ல மனமில்லை.



இந்தமுறை மழை தன் இருப்பை
மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் தெரு தெருவாகப் பதிந்துவிட்டுச் செல்லும். பள்ளிகளுக்கு லீவு விட்டு, மக்களுக்கு பாடம் எடுக்கிறது மழை. படித்துக்கொள்வோம்.



மேலும்

நிறைய பாடங்கள் படிக்க வேட்டிய கல்லூரியாகிவிட்டது சென்னை மழை! அதுவும் கல்லூரி கல்லூரியாகப் போய் ' படி ' என்று சொல்லிவிட்டு வந்துள்ளது... இனிமேலாவது படிப்போம்! 06-Dec-2015 2:48 pm
அப்டியா...சரிங்க தேள் 05-Dec-2015 1:30 pm
சம்பதம் இறுக்குயா நாணும் மழில நனைச்சவன் ங்கற சம்பன்தம் நன்ட்ரி 05-Dec-2015 12:22 pm
பழம் விற்பவனும் பால் விற்பவனும் ஏழைதான் . இது தருணம் என்று நாலு காசு பார்க்கிறான் . நம்மிடம் பணம் இருந்தால் முன்நூரோ நூற்றைம்பதோ கொடுத்தாகிலும் வாங்கி தேவையானவர்களுக்கு கொடுக்க வேண்டும் . பால் அழுது கொண்டிருக்கும் குழந்தையின் பசியைத் தீர்க்கும். இரண்டு பழம் முதியவன் ஜீவித்திருக்க உதவும் . உங்கள் அளவில் எப்படி உதவ முடியுமோ அப்படி உதவுங்கள். வாழ்த்துகிறேன் மனோ ---அன்புடன்,கவின் சாரலன் 04-Dec-2015 3:35 pm

திருவாளர் கிருஷ்ணன் மகாதேவனே...


உங்களின் மனதை புண்படுத்தும் நோக்கம் தவிர வேறு எந்த எண்ணத்துடனும் இதை எழுதவில்லை.
தெரிந்தே ஒன்று கேட்கிறேன் உங்களுக்கும் மலத்துக்கும் என்ன தொடர்பு..? எதற்கெடுத்தாலும் மலம் மலம் என்றே சொல்கிறீர்களே.? மதம் பிடிக்கும் இந்தக் காலத்தில் உங்களுக்கு மலம் பிடித்திருக்கிறதா?

கவிதை பிடிக்கவில்லையெனில் மூடிக்கொண்டு இருக்கவும் ஐம்புலன்களோடு சேர்த்து எல்லாவற்றையும் 
அதைவிட்டு நக்கீரன் போல கொந்தளிப்பது ஏன்..? நெற்றிக்கண் திறக்கமாட்டார்கள் யாரும் கண்ணை குத்தி விடுவார்கள்.

மெடூல்லா ஆப்ளகேட்டாவில் பிரச்சனையா.?
உங்கள் வயதோ இல்லை வயது முதிர்ச்சியோ எதுவும் தெரியாது இருந்தும் மரியாதையுடன் பேசுகிறேன் ..நானும் உங்களைப் போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.. 

யாரையும் தட்டிக் கொடுத்து புகழ் பாடி மேல் ஏற்றிவிட வேண்டாம்..
தயவுசெய்து புண்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு நலம்..
எதோ பெயர் வைக்காத புதுவித மனநோய் உங்களுக்கு இருப்பது போலவும்,
மாமியார் தொல்லைக்கு ஆளானவராகவும் தெரிகிறது.
இப்படிப்பட்ட உங்களுக்கும் ஒரு குடும்பம் இருந்தால் அவர்கள் தெய்வங்கள்,
தயவுசெய்து உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் இந்த மாதிரி பார்வையுடன் அணுகாதீர்கள் பாவம் அவர்கள்,

பெயர் கிருஷ்ணன் என்பதற்காக உங்களின் வசை கீதை உபசாரங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது...
இதைப்பார்த்து தலைகுனிய வேண்டும் நீங்கள் அதுஅன்றி, உங்களுக்கு இந்நேரம் கோவம் வந்திருந்தால் உப்பையும் காரத்தையும் மலத்தையும் குறைத்துக் கொண்டு சாப்பிட முயற்சி செய்யுங்கள்..

கோவில் செல்லும் வழக்கம் இருந்தால் தயவுசெய்து நிறுத்திக் கொள்ளவும்,
ஒருவேளை கடவுள் அங்கிருந்தால் இன்னும் பரிதாபமாகிவிடும் கோவில்...
இருக்கப் போகும் கொஞ்ச நாளாவது உருப்படியாக வாழ வழி தேடுங்கள்..உதவிக்கு நாங்கள் இருக்கிறோம்..

இப்படிதான் இருப்பேன் என்று திமிருடன் சவால் விட்டால், எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை,
கேசம், முடி, சிகை போன்ற வார்த்தையின் இன்னொரு வார்த்தையை உங்களுக்காக சொல்லிவிட்டு நகர்வோம்

இதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை..யோசியுங்கள்

மேலும்

நன்றி தோழமையே தொடரட்டும் உங்கள் கவிதை பணி 26-Oct-2015 1:41 pm
ஆஹா..முன்னோருக்கான உங்கள் மரியாதை மெய்சிலிர்க்கிறது...நல்லது 26-Oct-2015 10:18 am
என்ன தோழமையே சும்மா கவியா குரங்குனு போட்டேன் குரங்கும் நம முன்னோர்தான் அசிங்கபட ஒன்றுமில்லை 26-Oct-2015 10:05 am
அப்படியில்ல..எழுத்தில் பெண் என்றால் ஊனமுள்ளவளா...ஒரு பெண் இப்படி சொல்லமாட்டாள்...மீண்டும் மீண்டும் சந்தேகத்திற்கு இடமாகவே பேசவேண்டாம்.... 26-Oct-2015 6:03 am

இதில் எது விபச்சாரம் ...??

யாருக்காகவோ அறிவை விற்கலாம்,
எவனுக்காகவோ திறன் மற்றும் வலிமையை விற்கலாம்,
ஊருக்காக கண்ணிலிருந்து கருப்பை வரை கூட விற்கலாம்,
ஆனால் ஒரு பெண் தன் உடல் அழகை விற்றால் அது மட்டும் விபச்சாரமா...???

மேலும்

நேரடி பதில் இதுவே. ஒரு பெண் தன் அழகை நீங்கள் சொல்லியப்படி தன் அறிவு, திறன், வலிமை மூலம் பெற்றிருப்பின் விற்கலாம். சொல்லுங்கள் அந்த பெண்ணிற்கு அழகு யார் கொடுத்தது. ? அவளின் பெற்றோர் , அல்லது நம்பும் இறைவன். இல்லையா ? மாற்றானின் பொருளை விற்றால் அது குற்றமே. 01-May-2015 10:48 am
அனைத்தும் விற்பனை பொருளாகி விடாது. அறிவுக்கொண்டு புனைந்த கவிதையை விற்கலாம். மானத்தை விற்கலாமா ? திறன்கொண்டு நெய்த நூல் சேலையை விற்கலாம். கண்ணியத்தை விற்கலாமா? தேசத் தயாரிப்புகளை விற்கலாம். நாட்டை , நாட்டின் சுதந்திரத்தை விற்க முடியுமா ? கேள்விகள் பிறப்பது தவறிலலை தோழர். சிந்திப்போம். 01-May-2015 10:43 am

facebook பெண்கள் ...!!

பொதுவாக பெண்கள் ரோட்டில் தான் followers -களை விரும்புவதில்லை...ஆனால் facebook -இல் மட்டும் followers எண்ணிக்கை கூடும்போது மகிழ்கிறார்கள்...!!முரண் கொண்ட தங்களின் சுய அறிவை நிரூபிக்க அதிக likes பெற வேண்டுகிறார்கள்...!!!

மேலும்

ஹ்ம்ம் 12-Oct-2014 12:59 pm
ஆமாம் அண்ணா இது எதோ சரியான நடைமுறையில் இல்லை ,,,. 12-Oct-2014 12:53 pm
anusa என்ன unlike ...??? 12-Oct-2014 12:53 pm
unlike 12-Oct-2014 10:54 am

எழுத்தின் புதிய வடிவம் மிகவும் கவர்கிறது...!!
தொலைபேசியில் கூட எளிதாக திறக்கிறது....
நிர்வாகத்திற்கு மிக்க நன்றி....
ஒரே ஒரு வேண்டுகோள்
எழுத்து நிர்வாகிகள் தங்கள் முகத்தை கொஞ்சம் உலகிற்கு காட்டலாம்...!!!

மேலும்

எழுத்து குழுமத்திற்கு எனது நன்றிகளும்.... 22-Jun-2014 7:30 pm
நல்ல எண்ணம். அவசிய கருத்து . கவனிக்க வேண்டிய வேண்டுகோள் . நன்றி மனோ அனைவரின் சார்பாக . 22-Jun-2014 2:26 pm

மேலே