படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

மீண்டுமோர் ரணகளம் காண தூண்டுவார் காண்கிறேன் இங்கே.... நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ! இனத் துவேசம்... மதத் துவேசம்... சாதித் துவேசம்... நிறத் துவேசம்... இவையெல்லாம் கருப் பொருளாய்க் கொண்டு கவி புனைவோருக்கு கலங்கமாய்த் தெரிகிறதோ கலையின் கோபம்....?????????? பட்டமும் பரிசும், பாராட்டுக் குறிப்பும் மட்டுமே நோக்கம் - அந்த பாவிகள் நெஞ்சம் அறியுமா பாதித்த நெஞ்சின் வீக்கம் ? ஏன்...ஏன்....ஏன்....??? நீ தமிழ்ச் சாதி நான் சிங்களச் சாதி என்று தொடங்கிய பிரிவினைவாதம் எரித்த சுடுகாட்டில் இருந்து ஒருத்தன் கத்தினால் சாதி வேண்டாமென்று... கத்திய சத்தத்தில் சுருதி குறைவு தாளம் பிறழ்வு என்று சத்தமிடும் சாமானியர்களே..... சிந்திக்க தொடங்குங்கள் கொஞ்ச நேரம்... புத்தியில் தட்டும் கத்திய சத்தத்தில் கலந்திருக்கும் ரத்தக் கொதிப்பு.... உறவுக்கு மதிப்பளித்து ஊருக்கு தீ வைக்கும் ஊன மனம் கொண்டவன் நானில்லை.... சாதி எரித்த சடலத்தின் முன்னிருந்து என் கருத்தில் இருக்கும் பிழை என்னவென்று நீதி கேளுங்கள்.... மதி இருந்தால் மதிப்பீர்கள்... மதிக் கெட்டால் மிதிப்பீர்கள்... மதித்தாலும் மிதித்தாலும் மழுங்காது என் புத்தி ! நான் மன்னிப்புக் கேட்டு மண்டியிட வரவில்லை.... வார்த்தை வெட்டிய காயத்திற்கு மருந்து போடத்தான் வந்தேன் ! சிலேடை கவிதைகளும் சில்லறைக் கருத்துக்களும் சொல்லி - என்னைச் சிதறடிக்க நினைக்கும் அற்பக் கவிஞர்களே..... சிந்தித்துப் பார்த்தால் சில பல ரணத் துளிகள் கன்னத்தை நனைக்கும் ! கலையின் கோபத்தில் கலந்திருந்த விடத்தின் முகவரி புரியும் ! இவன் அடங்கிப் போனது அறியாமையினாலா ? இவனை அடக்க நினைப்பது அறியாமையினாலா ? ஆற்றாமையின் முகவரி அறியாத பெரியோரே..... இளகிய மனம் எனக்குண்டு இலக்கியச் சுவையும் எனக்குண்டு ! இளையவன் எனது இறுகிய மனதின் கருகிய வாடை ஏனென்று... ஊனக் கண்கொண்டுப் பார்த்தால் தெரியாது... ஞானக்கண் கொண்டுப் பாருங்கள் பிழைக்காது ! மீண்டுமோர் ரணகளம் வேண்டுமா? வாருங்கள்........ ஆயிரம் காரணம் ஆயிரம் உதாரணம் சொல்லி விளக்குவேன்.... சோடைப் போகாமல் பாடைக்கட்டும் சாதி ஏன் வேண்டாமென்று தரமற்ற வார்த்தைகள் சரமாக வந்த சங்கதி என்னவென்று...! ------------------------------ கே.எஸ்.கலை


Close (X)

வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 78
2

புதுயுகம் தேடும் பெண்ணே நீ புதர்களில் விழவேண்டாம் ஏன் பெண்ணாய் பிறந்தோமென்று நீ கவலைப்பட வேண்டாம் கடவுள் கொடுத்த பாக்கியம் பெண்ணே கருவறை தானடி கருவை சுமக்கும் பெண்ணே நீ கடவுள் தானடி விழிகளில் வழிந்திடும் கண்ணீர் வலிகளின் அடையாளம் முயற்சிகளில்லா வாழ்க்கை முற்றிலும் அவமானம் வளையல் அணியும் கைகள் வானை எட்டிப் பிடிக்கிறதே கொலுசை அணியும் கால்கள் விண்ணில் நடக்க துடிக்கிறதே பட்டம் பெற்ற பெண்ணே சிறு வட்டம் அல்ல உலகம் சோம்பலை தூக்கி எறிந்தால் உன் சோதனை காலம் விலகும் அடுப்படி மட்டும் உலகல்ல அகிலமும் உந்தன் பெயர் சொல்ல எதிர்வரும் தடையை எதிர்கொள்ள எழுந்து வா நீ வெல்ல.


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 83
4

*******************பொய்*************** செய்யாத ஒன்றை செய்ததாய் சொல்லி பொய்யாக பேசுதல் பெருமையோ - மெய்யாக வீரம் யாதெனில் வாய்மையே ஆதலால் தீரம் வேண்டும் நெஞ்சத்து! *******************புறம்****************** இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதை மறந்தும் விரும்புமோ மனம் - புறமும் புன்சொல்லும் கொடும் புன்மதியே வாழ்வின் இன்பம் அகற்றும் இவை! ********************சாபம்**************** பொறுமையை இழந்து பொங்கும் கோபத்தால் சிறுமைபுத்தியால் சிதறும் சாபத்தால் - அருமை வாழ்வது அழிவில் வாடுமே பொருந்தாசாபம் தாழ்வில் செலுத்தும் உனை! ********************அவதூறு************ கண்ணாலே காணாததை கண்டதாய் கதைகட்டி புண்படும் வார்த்தைகள் பேசாதே - தன்னாலே அனுமானித்து பேசுதல் அவதூறே தவிர்ப்போம் கணித்தலை பிறர்நலம் நாடி! ............................................................................................


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 70
0

அன்புள்ள காக்கைக்கு.... மனிதனை புறக்கணித்து மாற்றுக்கிரகம் தேடு; இல்லையேல், இரண்டாம் இனமாய் தெரிந்தே பலியாவாய், மூன்றாம் இனமாய் முன்னேற்பாட்டுடன் முறி படுவாய்... கவனங்கள்; கவனியுங்கள்... கறைகொடியுடைய வீட்டில் மறந்தும் தரையிறங்காதே.., இறங்கினால் இனக்கலவரம்..!? கொக்கிற்கும் உங்களுக்கும்..! பறந்து விடு.. உயிரைத்தின்று உத்சவம் நடத்தும் பெருவிழா காண்பதெப்படி.? கற்பித்தாலும் கற்பிப்பான்.. பறந்து விடு.. நீதிக்கேட்டு வீதியில் பறந்தால் சாலைத்தேடி சட்டம் வரும்., வீடு தேடி தடியடி வரும்.. பின், சிட்டைப்போல் பட்டுப்போவாய்.. பறந்து விடு.. உன் பாட்டன் பறந்த வீதியில்லை; பரிவாய் பார்க்க நாதியில்லை; பின், பாதுகாப்புப்பெட்டகத்தில் பக்குவமாய் படமாவாய்...! பறந்து விடு.. மூழ்கி குளிக்க ஓடையில்லை; குளித்து அமர மரங்களும் இல்லை., கோவில் கோபுரங்கள் கூட அரசியல் அலுவலகமாய்....! பறந்து விடு.. நீ கல் போட்ட பானையும் இல்லை; கல் விழுந்த தண்ணீரும் இல்லை; கள்ளச்சாராயம் கூட பாலித்தீன் பைகளில்...! பானைத்தேடி பறந்து விடு.. விடிவதற்குள் பறந்து விடு; விமான நெரிசல் ஆரம்பம்…! மடிவதற்குள் பறந்து விடு; நாளை இரும்புமரம் கூட முளைக்கலாம்…! தொடுவதற்குள் பறந்து விடு; கதிர்வீச்சுகள் காத்திருக்கிறது...! நேற்று அரிசி விற்பனை; இன்று குழம்பு விற்பனை; நாளை கோழியும் அழியும்... நான்காம் நாள்.. நீ தான் இலக்கு..! பறந்து விடு.. இன்னும் சொல்லப்போனால்... ஆண் காக்கைகள் ஆயுதமெடுக்கும்…! பெண் காக்கைகளுக்கு பிரசவ வலி வரும்...!! எங்கள் ஆறாம் அறிவை உங்கள் வலப்பக்க மூளைக்குள் வலுக்கட்டாயமாய் திணிப்போம்..! பின், உங்களுக்குள்ளும் உளவாளி செய்வோம்...! உங்களையும் மதம் பிரிப்போம்..!! கடைசியில், காக்கைக்கும் மனிதனுக்கும் கலப்புத்திருமணமும் நடக்கும்...!! எங்கள் அறிவியலில் எதுவும் சாத்தியம்.. பறந்து விடு.. நாளடைவில் உங்கள் கூடுகளுக்கெல்லாம் வரி விதிப்போம்., வாதாடினால், விசாரணைக்கு கைதும் செய்வோம்., இரண்டு தலைமுறைக்கு இழுத்தடித்து தள்ளாடும் வயதில் தள்ளுபடியும் செய்வோம்.. பறந்து விடு.. முடிந்தவரை சொல்லி விட்டேன்.. உங்கள் முடிவையும் சொல்லி விட்டேன்.. சொல்லியதால், என் கவிதைக்கு எழுத்தடங்கு உத்தரவும் வரும்..! ம்ம்..... உங்கள் உலகத்தை கண்டறிய புறப்படுங்கள் சீக்கிரம்..... வானடங்கு உத்தரவும் வரப்போகிறதாம்...! --வரிகள்.. க.ஷர்மா.


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 67
1

காற்றே... உன் வருகைக் கண்டு மரக்கிளைகள் நடனமாடும்...! தனை மறந்து செடிக்கொடிகளெல்லாம் நயமாய் தலையாட்டும்...! புல்லாங்குழலுக்கு நீதானே புதுக்கவிதை...! குழந்தைகள் கையில் கொஞ்சி விளையாடும் பலூனும் நீதான்...! வெற்றுத்தாளையும் வானுயரப் பறக்கும் பட்டமாய் மாற்றுவதும் நீதான்..! சிமிலிக்குள்ளே ஒளிந்திருக்கும் முரட்டுக்கார நெருப்புக்கூட உன்னைக் கண்டு நடுநடுங்கும்...! நீயின்றி ஏது மின்சாரம்...? நீதானே அதற்கு சம்சாரம்...! காதலர்கள் மயக்கம்கொள்ள அழகிய தென்றலாய் வருவாய்... கட்டுக்கடங்கா வீரன் நீயென்று உலகெல்லாம் பறைசாற்றிட புயலாக நீ அவதரிப்பாய்...! உன் மார்பில் முட்டி முறிந்த மரங்கள் கோடி கோடி...! உன் சகவாசமின்றி இறந்த மனித உடல்கள் பல கோடி கோடி...! மனங்கொண்டு மனிதனோடு மணம்வீச நீ இல்லையென்றால் மறுநொடியே மன்னனாயினும் பிணம்தான்...! கற்பனை


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 59
0

சீருடை தரித்து சீராய் செல்லும் பள்ளி சிறுவர் சிங்காரித்து அலுவல் செல்லும் சீரிய மங்கையர் சரக்கு வாங்க சந்தை செல்லும் மாந்தர் சாரை சலிப்போடு விற்பனை தேடும் வியாபாரி வரிசை ஊரு விட்டு பிற ஊரு சேர பயணிகள் சேரும் ஊர்தியோட்டி ஓடி உந்தும் மனிதர் பலரும்..! நெடி வெடித்து கொல்லும் இந்த தீவிரவாதம் நொடியில் ஒடியும் ஓங்கி வளர்ந்த மனித நேயம் வெடிக்கும் கைகள் அறிவதில்லை கொல்லும் நீதி மடியும் மனிதன் அறிவதில்லை இறக்கும் நீதி ..! எந்த மதம் எக்காளமிடுது மனிதனை கொல்ல அந்த மதம் மடிய வேண்டும் மனிதன் வெல்ல..! மதத்தை இழுத்து மேடைபோடும் மனிதானில்லு மனிதநேயம் தூக்கில் போடாது நீயும் செல்லு..! மனிதா உன் மதம் பிடித்தால் நன்றாய் நீ படித்து செல்..! மனிதா உன் மதம் உனை பிடித்தால் நீ முடித்து செல்..! மனிதா உன் மதம், மதம் பிடிக்கா நீ அழைத்து செல்..! மனிதா உன் மதம், மதம் பிடித்தால் நீ விட்டு செல்..! மத நேயம் துறப்போம்..! மனித நேயம் காப்போம்..!


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 58
1

உக்கிர வன்மம் கொண்டு அக்கிரமங்கள் புரியும் மனிதவுரு நரமாமிச உண்ணி சுற்றி வருகுது நரபலியெடுக்க நாடகமாடுது! /-/ சத்தியக் கண்களையெல்லாம் அசத்திய அலகால் அசாத்தியமாக கொத்திக் குதறி கொக்கரிக்குது விசமதை வீரியமாய் கொப்பளிக்குது! /-/ ஆறாம் அறிவு மேதையென்று ஐந்தாம் அறிவிலே பாடம் நடத்துது சிந்தை சீர்தூக்கிப் பார்க்காமலே அகந்தையில் ஆட்டம் போட்டலையுது! /-/ நீதிக்குப் பின்னால் நிழல் காட்டுது ஆதிக்க வெறியால் தலை நீட்டுது போதிக்கு கீழமர்ந்து போதிக்குது பாதி பித்தினில் புத்தர் வேசம் கட்டுது! /-/ பிணம் தின்ன வாய் பிளக்குது இனம் பார்த்து ருசி பார்க்குது ருசி பார்த்தபின் ஏப்பம் விடுது பசியில் மீண்டும் மோப்பம் பிடிக்குது! /-/ உச்ச விழிப்புணர்வு இல்லாது போக மிச்ச உயிர்களும் இல்லாது போகும் பிணந்தின்னி கழுகை விரட்டிட இணக்கத்தில் இணைவது அவசியமே! உலக நடப்பு


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 57
1

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே