Selvam- கருத்துகள்

கோதையவள் கொண்டையிலே
கொஞ்சுதடி மல்லிகைப்பூ
நீலிமலை பறவையென
நீயிருக்கே ஏனடியோ !

கண்ணாடி உன்னழகை
கண்கள்தான் காட்டுதடி
துள்ளியாடும்உன்னழகை
தூக்கிச்செல்ல வரட்டுமாடி

தென்பொதிகை தென்றலிலே
தேரோட்டி போகையிலே
தாரோடுக் குலைவாழை
தாக்குதடி எம்மனசை

கைவளையல் தூதுவிடும்
கொலுசுசத்தம் மோகமிடும்
பானையில் பொங்கிவரும்
பச்சரிசி பல்லழகே

பாலூறும் கன்னத்தில்
பருவத்துப் பூக்களடி
தேனெடுக்கு. மாமனுக்கு
தென்பொதிகை சாரலடி

அத்திபழம் நானிருக்கேன்
அழகுக்கிளி நீயிருக்க
கோலவிழி உன்னழகில்
கொஞ்சம்மதி சிரித்திருக்க
கோலமயில் ஆடுதடி
காதலினால் தோகைவிரித்து
மோகமுள்ள உன்னழகில்
மோனமதில் நகைவிரிப்பேன்
துடுக்குத்தன நாணமதில்
துள்ளுகின்ற மானழகே
சாந்திமலைத் தோப்பினிலே
சாரலடி நீயெனக்கு

கருத்தாடை கட்டிக்கிட்டு
கல்யாணம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு மாமனுக்கு
மயிலாக வந்தவளே

சிங்காரம் கண்ணிரண்டும்
சிறுநாகம் போலிருக்க
அத்தானை பார்த்ததிலே
அணைத்துவிட்ட மாமயிலே

முல்லைப்பூ அரும்பெடுத்து
முழுகூந்தல் வைச்சிக்கிட்டு
முத்தாரம் மாமனுடன்
முடித்ததென்ன கட்டிலிலே

முகம்கோணா கொங்கையிலே
மலைமுகடு நின்றிருக்க
கண்டாங்கி சேலைக்குள்ளே
கண்ணிரண்டும் மேயுதடி

தைமாசம் மாமனுக்கு
தாசாங்க வாசமுடன்
தேன்நிலவு கட்டிலிலே
தேன்மழைகள் நீதானடி

தேன்மொழி தாயே நின்றன்
தாவியுன் பாதம் வீழ்ந்தேன்
சாதனை முயற்சி என்றன்
சரித்தி்ரம் படைக்கச் செய்வாய்
செவியில்லா உயிரை தாங்கி
சிந்தையில் நடந்துக் காப்பாய்!
தேன்தமிழ் கவிதை யாவும்
தோன்றிடும் பூவின் வாசம்
தூவிடும் பனியின் சாரல்!
தேன்றமிழ் தீண்டும் இன்பம்
தென்னிசை கொஞ்சும் நல்ல
தென்றலின் சுகமாய் தோன்றும்
வான்மதி உன்னைக் கண்டு
வாழ்வெலாம் ஏங்கும் நெஞ்சம்!
நான்தரும் பாடல் கேட்டு
நடமிட வருவாய் தாயே
ஊமைக்கே பொழியும் அன்னை
உறவென என்னை கொண்டு
வரும்பகை யாவும் நீக்கும்
வளர்மதி தாயே உன்னால்
இருவிழி மூடி என்றும்
இனிதென கவிதை கொள்வேன்

இந்த எழுத்து தளத்தில்
கவிதைகளை பதிவது எப்படி தான் என இதுவரை விளங்கவில்லை
படைப்புகளை பதிவிடுவது எப்படி


Selvam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே