டாக்டர் நாகராணி மதனகோபால்- கருத்துகள்

பூவாசமே வண்டுக்கு கேட்பாஸ் ஆகி விடுகிறது. அதனால் வரும் வண்டை வலையில் அடைத்தால் மலரும் மலர் போன்ற பெண்ணும் கவலையால் மனதை அடைத்துக் கொண்டு போய்விடலாம்..
அவ்வளவுதான்.
நன்றி.

பூவா சம்ஒரு கேட்பா சானதில்
தாவா துதாவி வண்டுவரும்- தீர்வாய்
வலையடைத் தால்வண் டோடும லரும்
மலரா ளும்அடை பட்டே குவாரே

இது சிறு கதைங்க. பின்னுக்குப் போகும். கிளைமாக்ஸை முதலில் சொல்லிட்டு ஆரம்பத்தை கடைசியில் சொல்வது. இந்த ப்ரசன்டேஷனில் படிக்கிற போதே பதைபதைப்பும் மனதுக்குள் வலியும் வருவது தவிர்க்க முடியாதது. இன்னும் இருக்கு என்கிற உணர்ச்சியைக் கொடுக்கும். கனமான துன்பியல் முடிவுகளுக்கு இந்த ப்ரசன்டேஷன் நல்லாயிருக்கும். கதை அவ்வளவுதான் தோழமையே.

கதைப் பிரியன் அவர்களுக்கு நன்றி. தளத்தில் பாதிக் கதைதான் வந்திருக்கிறது என்று தெரிவித்ததற்கு..

அழகான கருத்து.. சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி நண்பரே. நல்ல கூர்ந்தாய்வு. ( excellent analysis ) தங்கள் திறமைக்குத் தீனி போடும் விதமாக இக்கதை அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

கொரோனா வரவிற்குப் பிறகு சித்த ஆயுர்வேத மருத்துவத் துறைகளின் மீது நம் நாட்டின் கவனம் பெருமளவு ஈர்க்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. ஆனால் அறிவியல் முறைப்படி ஆய்வுகள் செய்து நம் மூலிகைகளின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கு epidemiology என்கிற ஆராய்ச்சியியல் தெரிந்திருக்க வேண்டும். அதுப்படி சோதனைகள் செய்து ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மானிட சமூக ஆராய்ச்சியியல் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இக்கட்டுரை உபயோகமாக இருக்கலாம். மாணவ செவிலியர்கள், மாற்று மருத்துவ வல்லுநர்களுக்கு இக்கட்டுரை பயன்படும் என்று நம்புகிறேன். நன்றி.

அற்புதம்...
மிக்க நன்றி... பாராட்டுக்கள்.

சுகமாக தென்றல் வீசும்போது தார்ச்சாலையில் தேரில் பவனி வருவது போலிருக்கிறது உங்கள் பாக்கள். அற்புதம்.

பிரமாதம்...... பிரமாதம்... பல்வேறு துறைகளில் மனித குலத்தின் சாதனை . வரலாறு.. படிக்கப் படிக்க நேரம் நகராமல் நின்று விட்டது.

தலைப்பைப் படித்ததும் கேப்டவுன் மாதிரி தமிழகம் ஆகப் போகிறதோ என்று பதறிப் போய்ப் படித்தேன். தங்களுக்குக் குறும்பு ஜாஸ்தி.

இயல்பாகச் செல்கிறது கதை. பாராட்டுக்கள்.


டாக்டர் நாகராணி மதனகோபால் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே