சுருளிஸ்வரி- கருத்துகள்

வைர பாடல் வரிகள் தந்த கண்ணதாசன், கடைசி பாடல் கமல் மற்றும் ஶ்ரீதேவி அவர்களுக்கு எழுதிவிட்டு எம்.எஸ்.வி அவர்களுக்கு முன்பே புள்ளி ஆகிவிட்டார். கண்ணதாசன், டி.எம்.எஸ் மற்றும் எம்.எஸ். வி மூன்று பேரும் சேர்ந்து ஒரு பக்க காவியம் படைப்பார்கள்.

Super.

"நின்று விட்டது வருமானம்
நிற்கவில்லை செலவு
இன்னலில் ஏழைகள் !"

"தனி ஓவ்வொரு மனிதனுக்கும்
இன்று உணவில்லையே
என்ன செய்யலாம் பாரதி !"

இது இன்னும் தொடர்ந்தால்
இன்னல்களுக்கு ஏது
இறுதி!

இன்னல்களே இவர்கள் இறுதி!

இந்த வரிகள் புதிதாகவும் அருமையாகவும் இருந்தது.

"கதை என்றாலும் சரி
கற்பனை என்றாலும் சரி
நீயே என் நாயகன்
என்றும் நான் போற்றும் தலை மகன்"

"ஐந்தில் எனக்கு புரிந்த பாரதி
அப்போதே மக்களுக்கு புரிந்திருந்தால் எப்போதோ கிடைத்திருக்கும் இன்பச்சுதந்திரம்"

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

"முட்டு வரை நீண்ட கரம் சாமுத்திரிகா லட்சணங்களில் ஒன்று.
invisible சாமுத்திரிகா long handers அரசியலில் அதிகம்."
காந்தி அடிகள்.
காமராசர்.

ஐயா, நான் கடவுளை தவறாக ஏதும் சொல்லவில்லை. நான் பேருந்தில் செல்லும் போது ஒரு கோயில் முன் எல்லோரும் காசை தூக்கி போட்டார்கள். அது எனக்கு புதிதாக இருந்தது. இதற்கு முன் நான் அப்படி பார்த்ததில்லை. மனிதனுக்கு மனிதன் ஒரு பொருளை தூக்கிப் போட்டல், கோபம் கொள்கிறார்கள். இறைவனுக்கு தூக்கி போடுகிறார்கள். இது தெய்வ குற்றம் ஆகாதா? இதை தெரிந்துகொள்ள மட்டுமே இந்த கேள்வி. கடவுளை அவதூறாக பேசுவதும் (தூக்கி போடுவதும்) இப்படி தூக்கி போடுவதும் ஒன்றுதானே? எங்க ஊரில் கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் காணிக்கையை கோயிலுக்கு போகின்றவர்களிடம் கொடுத்துதான் விடுவார்கள். தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும் ஐயா.

தவறு செய்யாதவர்கள்
தண்டனை அனுபவிக்கிறார்கள்
இப்படி.

என். எஸ். கிருஷ்ணன் நகைசுவை போல அருமை.

"நாளைய நம் பிள்ளைகளுக்கு
நம்மை நடத்த‌
நாட்களை நகர்த்த
நாமே எழுதிவைத்த
நாட்குறிப்பின் முன்னுரை".

"வ‌ருபவனுக்கு
வசதியாய் இருக்கட்டுமென
வடிவமைச்ச
வாடகை சுடுகாடு;"

"அடையாள அட்டையை அணிந்த
நவீனக் கொத்தடிமைகளாக
இன்றைய உழைப்பாளர்கள்....".

அகரம் மட்டும் அல்ல,
ஆனந்தம்
இன்பம்
ஈகை
உண்மை
ஊமை
எழுத்து
ஏணி
ஐயம்
ஒசத்தி
ஓசை
ஒளவை
எஃகு


சுருளிஸ்வரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே