tameemidhayad- கருத்துகள்

கவிஜி கவிஜிதான்
கவிஞர் கபிலனைப்போல் சிந்திக்கிறீர்கள்

கற்பனை என்றால் எதார்த்தத்தின் முன்வடிவம் என்பதை பிரிந்துகொள்லாமலே எதை வேண்டுமானாலும் எழுதுபவர்களே அதிகமாய் இருக்க
இந்த கவிதை கவிதைக்கான சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியிருப்பதால் வாழ்த்துகள்

இதில் எழுதப்படும் அனைத்தும் அனுபவத்தில் எழுதப்படுபவை அல்ல .
சமூக எதார்த்தத்தை தொடர்ந்து அவதானிப்பதில்
கருப்பெற்று உருப்பெற்று
இலக்கிய அழகியலோடு எழுதப்படுபவையே
...இதயதுல்லா..












அழகியலோடு எழுதப்படுபவை

இந்த தளத்தில் எழுதப்படும் சில தரமான எழுத்துகளில்
உங்களின் நடை இலக்கியதரம் உடையவை

பிறந்த நாள் வாழ்த்துகள்

புரிதலில் அல்ல பிரிதலில் உள்ளது
காதல் என்பார் கவிஞர் சினேகன்
உணர்வை பதிவு செய்திருக்கிறீர் வாழ்த்துகள்

படைப்புக்கள் எப்போதுமே பன்முகத்தன்மை
உடையவை
அந்த வகையில் இது முற்றிலும்
ஒருவருக்கு உண்மையாக படலாம்
ஒருவருக்கு பொய்யாக படலாம்
உங்களைப்போல் சிலருக்கு உன்மைகலந்த
பொய்யாக படலம் .நன்றி ஜெபா

அண்ணன் அறிவுமதி கவிதை ஒன்று இப்படிவரும்
அணுஅணுவாய் சாவ முடிவுசெய்தபின்
காதல் சரியான வழிதான்

உங்களின் கருத்துகளுக்கு நன்றி மங்காத்தா
என்னுடைய சில கவிதைகள் குடும்ப நாவல்
கல்கண்டு மஞ்சரி குடும்பமலரில் பிரசுரமானவை ...இதயதுல்லா..

கவிஞர் அறிவுமதியின் முத்தமிழே முத்தமிழே முத்தசந்தம்
ஒன்று கேட்பதென்ன பாடலில் ஒரு வரி இப்படி வரும்
காதல் வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
ஞானக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை
அந்த வரியை ஞாபகப்படுத்தி விட்டீர் தோழி .

உலகை நுண்ணுணர்வோடு(finesensitive ) அவதானிப்பவன்
படைப்பாளி ஆகிறான்
அவனால் எதையும் படைப்பாக்கமுடியும்
என்பதற்கு இதுவும் ஒருசாட்சி

என்னை பொறுத்தவரையில் பாரதியைப்போல்
தேர்ந்த பார்வை உடையவர்கள் அரிதினுமரிது
தன்னை அறிதல் தன்னை அறிதல் என்று வெறும் வார்த்தையால்
பேசிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் பாரதி தன்னை அறிதலிலேயே ஆர்வமாய் இருந்தவதவன்
அதனால்தான் வறுமையிலும் எத்தனைகோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா எனவும்
மது எனக்கு உலகெல்லாம் அதாவது ஒவ்வொரு பருப்பொருளும் அவனுக்கு இன்பமூட்டுவதாய் இருந்திருக்கிறது
அவன் நிற்பதுவே பறப்பதுவே வெறும் சொப்பனம்தானோ
உம்மில் ஆழ்ந்த பொருளில்லையோ என்கிறான்
பொருள்சார்ந்த வாழ்க்கையில் தண்ணீரில் தாமரையிலையாய்
வாழ்ந்தவன் பாரதி ஆகையால்
எதிர்பாலினத்தின் மகத்துவமட்டுமல்ல
ஒவ்வொன்றின் மகத்துவமும் அறிந்தவன் பாரதி
அதனால் அவனைப்போல ஒருவனை தேட
நீங்களும் தேர்ந்த பார்வை உடையவராய் இருக்கவேண்டுமென
நினைக்கிறேன்
பொறியியலுக்கும் பாரதிக்கும் தொடர்பே வரவேற்க்கதக்கது .
வாழ்த்துகள் ...இதயதுல்லா...இலக்கியஆர்வலர்...


tameemidhayad கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே