Rakshana - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Rakshana
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Aug-2017
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  25

என் படைப்புகள்
Rakshana செய்திகள்
Rakshana - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 4:07 pm

புகைப்படங்கள் பதிலளிப்பதில்லை
எனத் தெரிந்தும்
காலையில் எழுந்தவுடன் ஒரு வணக்கம்
பின்பு குளித்தாயா ? சாப்பிட்டாயா ?
என்ன பண்ற ? எங்கிருக்க ?
இந்த புடவை நல்லாயிருக்கா ?
என ஒவ்வொரு நிமிடமும்
உன் புகைப்படம் பார்த்து
வீசுகின்றேன் எனது வினா கணைகளை !

மேலும்

புகைப்படத்தை விட இதயத்திலுள்ள அவள் முகம் புனிதமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 9:57 pm
நன்றி நண்பா 21-Aug-2017 7:40 pm
அடடா ... அருமை உன் புகைப்படம் பார்த்து வீசுகின்றேன் எனது வினா கணைகளை செல்லமாய் ! சிணுங்கலாய் வெட்கி கொண்டே ! அருமை 21-Aug-2017 5:56 pm
Rakshana - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 4:02 pm

என் அலைபேசி தொடர்பிலுள்ள
அனைத்து எண்களையும்
உன் பெயரிலேயே பதிந்திருக்கிறேன்
ஒவ்வொரு அழைப்புக்கான எண்களும்
உன் பெயரையே தாங்கி வரட்டுமென !

மேலும்

ஆசைகள் அருவிகள் போல இதயத்தை மூழ்கடிக்கச் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 9:56 pm
நன்றி 21-Aug-2017 7:41 pm
செம ..ரக்ஷனா 21-Aug-2017 5:58 pm
Rakshana - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 9:49 am

என் வீட்டைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு முறையும்
உன்னிடமுள்ள ஏதேனுமொரு பொருளை
தவறவிட்டு எடுத்தபடியே
தவறவிட்ட அனைத்தையும் எடுத்துவிடுகிறேன்
என்னிதயத்தைத் தவிர என்கிறாய் !

மேலும்

இதயத்தை திருடியவன் காதலை புரிந்து கொண்ட பின் வார்த்தைகள் இன்றி புன்னகையால் என்னை தண்டிக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:34 pm
அழகின் அழகு ...செம .. 21-Aug-2017 5:58 pm
Rakshana - மலர்1991 - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2017 10:09 pm

ஏண்டா பங்காளி பரமசிவா, உனக்குத்தான் மூணெழுத்துப் பேர உம் பையனுக்கு வைக்கத் தெரியுமா?
😊😊😊😊😊
என்ன பேரெண்ணே அந்தப் பேரு?
😊😊😊😊
'திலக்' காம், 'திலக்'கு. நான் வைக்கறம் பாருடா தெனம் செய்தித் தாள்ல வர்ற ஒரு சொல். அதுதாண்டா எம் பையன் பேரு.
😊😊😊😊
என்னடா பங்காளி கூச்சல் போட்டுட்டு இருக்கற?
☺☺☺☺☺
இல்ல உனக்கு மட்டுந்தான் சுருக்கமான மூணெழுத்துப் பேர வைக்கத் தெரியுமா?
😊😊😊😊
சரி. நீயும் உம் பையனுக்கு ஒரு மூணெழுத்துப் பேர வையுடா பாக்கலாம்.
😊😊😊😊
வைக்கிறண்டா இப்பவே. எம் பையன் பேரு தான் தினமும் 'தினமலர்'
நாளிதழில் பயன்படுத்தற சொல்லுடா.
😊😊😊😊😊
அத சொல்லுடா ஏட்டிக்குப் போட்டி எட்டப்பா, பங்காள

மேலும்

நன்றி கவிஞரே. அவர்கள் உரிமை. நாம் என்ன சொல்ல. 20-Aug-2017 11:55 pm
நாகரீகம் என்ற கூண்டில் சிறைப்பட்டவர்கள் மரபுகளை மறந்து மடமை அடைகின்றனர் 20-Aug-2017 10:41 pm
இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2017 7:30 pm

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

ஆற்றினில் மண் இல்லை
காட்டினில் மரம் இல்லை
வளரும் இந்தியாவில்
வளங்கள் எதுவுமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மருத்துவமனையில் மருத்துவரில்லை
மதுக்கடைக்கோ பஞ்சமில்லை
மயானங்கள் நிறைந்தாலும்
மக்கள் மீது அக்கரையில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

சாதி பெயரில் பள்ளிக்கூடம்
சமத்துவத்திற்க்கு இறப்பிடம்
வீதிதோறும் கலவரம்
விதியே மாற்ற யாருமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மதத்திற்கு மதம் கட்சி அமைத்து
மனிதநேயத்தை தோன்றி புதைத்து
மக்கள் மத்தியில் குண்டு வைத்து
மாண்டு போனவர் கொ

மேலும்

மிக்க நன்றி சகோதரி 22-Aug-2017 12:45 am
அருமையான படைப்பு , வாழ்த்துக்கள் ராஜ்குமார் 21-Aug-2017 10:14 pm
நன்றிகள் பல கவி மலரே... 21-Aug-2017 7:32 pm
நாட்டுப் பற்று, சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை தங்கள் படைப்பில் வெளிப்படுகிறது கவிஞரே. 21-Aug-2017 7:28 pm
Rakshana அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2017 5:20 pm

நாம் உணவாக இருக்கிறோம்
என நாம் நினைத்துக்கொண்டிருக்கும்
பல இடங்களில் - நாம்
ஊறுகாயாக மட்டுமே இருக்கிறோம் !

மேலும்

வாழ்வியல் தத்துவம் நான் என் வாழ்வில் கருவேப்பிலை போல இருக்கிறேன் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் 21-Aug-2017 5:30 am
நன்றி நண்பா 20-Aug-2017 11:39 am
ஏழ்மையில் நானும் அனுபவமாய் உணர்ந்திருக்கிறேன் தோழியே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 11:53 pm
Rakshana - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 5:20 pm

நாம் உணவாக இருக்கிறோம்
என நாம் நினைத்துக்கொண்டிருக்கும்
பல இடங்களில் - நாம்
ஊறுகாயாக மட்டுமே இருக்கிறோம் !

மேலும்

வாழ்வியல் தத்துவம் நான் என் வாழ்வில் கருவேப்பிலை போல இருக்கிறேன் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் 21-Aug-2017 5:30 am
நன்றி நண்பா 20-Aug-2017 11:39 am
ஏழ்மையில் நானும் அனுபவமாய் உணர்ந்திருக்கிறேன் தோழியே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 11:53 pm
Rakshana - Rakshana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 5:11 pm

அழகிய பேய்கள்

இன்று அம்மாவிடம் இதை சொல்லிவிடுவது என்ற முடிவோடு அம்மாவை கூப்பிட்டேன். அம்மா பேய் இருக்கா ? இல்லையா ?

டேய் நேரா விசயத்துக்கு வா, இழுக்காத எனக்கு நிறைய வேலையிருக்கு

அம்மா, நாம அப்போ கேரளால இருந்தோம், நான் ஏழாவது படிச்சிட்டிருந்தேன், நான், தம்பி விக்ருத், அப்புறம் நம்ம பக்கத்து வீட்டு ராகுல் மூணு பேரும், நம்ம ஆபிஸ் பின்னாடி இருந்த பழைய ரூமுக்கு முன்னாடி விளையாடிட்டு இருந்தோம், அப்பதான் அந்த பேயப் பார்த்தோம். வௌ¢ளசேலை கட்டிட்டு, தலைய விரிச்சுப் போட்டுட்டு அந்த ரூமுக்குள்ள போச்சு, இதே மாதிரி நிறய தடவ பாத்திருக்கோம்.

டேய் அந்த ஊர்க்காரங்கள்ளலாம் தலைய விரிச்சுத் தாண

மேலும்

நன்றி தோழா 19-Aug-2017 3:44 pm
நன்றி தோழி 19-Aug-2017 3:43 pm
தலைப்பு மிக அழகு ... வாசிக்க தூண்டியது ... கதையின் முடிவு சிரிப்பு ... சிறப்பு 18-Aug-2017 8:37 pm
ரசிக்க வைத்தது . இன்னும் எழுதுங்கள் . 18-Aug-2017 7:27 pm
இளவெண்மணியன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Aug-2017 12:16 am

நதியே
நீ வேறெங்கேனும் போ என்று
விட்டுவிடாது
கடல்

நிலவே
நீ உறங்க இடமில்லையென்று
சொல்லிவிடாது
வானம்

உன் அன்பை
எவரோடும்
பகிர்ந்துகொள்ள முடியாத
சுயநலக்காரன் நான்
எப்படி பொய் சொல்வேன்
என் நெஞ்சில்
நீ இல்லையென்று !

@இளவெண்மணியன்

மேலும்

கருத்துக்கு நண்றிகள் பல .! 20-Aug-2017 12:31 pm
அருமை அன்பென்ற ஒன்று இல்லையேல் அகிலமே இல்லை 19-Aug-2017 3:46 pm
நன்றி நண்பரே 18-Aug-2017 10:42 am
மிகவும் இனிமை 18-Aug-2017 9:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மேலே