மூங்கில் காடு அசைகிறது

********************************
ஒரு புல்லாங்குழலுக்கு

அதன் பூர்வீகம்

திடீரென

நினைவுக்கு வந்துவிட

முகாரியில்

இசைப்பவனை மீறி

மோகனத்தை

வெளியேற்றுகிறது ..

மூங்கில் காடு ஒன்று ..

ஆனந்தமாய் எங்கோ

தூரத்தில் அசைகிறது !

********************************

நேரெதிராய்

வந்தவர் ..

நேராக வரவில்லை

என்பதை ..

நேராக ..

சொல்லமுடியவில்லை ..!

**************************************

சிரித்து கொண்டே

வந்தது யாரென்று

தெருவில் பார்த்தேன்

சிரித்தேன்

இதுவரை அவர்

சிரித்து

பார்த்ததில்லை !

..

நல்லாருக்கீங்களா

என்று கேட்டவர் முகம்

அவ்வளவு நல்லா இல்லை ..

ரொம்ப..

நல்லா இருக்கேன்னு

இவர் சொன்னதும் !

**********************************
மூங்கில் காடு
**********************************

ஒரு புல்லாங்குழலுக்கு

அதன் பூர்வீகம்

திடீரென

நினைவுக்கு வந்துவிட

முகாரியில்

இசைப்பவனை மீறி

மோகனத்தை

வெளியேற்றுகிறது ..

மூங்கில் காடு ஒன்று ..

ஆனந்தமாய் எங்கோ

தூரத்தில் அசைகிறது !

*************************************

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (24-Mar-16, 2:50 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 240

மேலே