தமிழனும் பாரதமும்

மூன்றெழுத்து சொல்லும் முக்கடல் சங்கமிக்கும் இடமும் இனிதே
சொல்லும் என் இன வரலாற்றை
மூவேந்தன் ஆட்சியையும் முப்பால் பொதுமறையும் அழகே
உணர்த்தும் என் தமிழ் வர்ணனை
லெமூரியாவில் தொலைத்த சொத்துக்களும் சிங்களத்தில்
சிதைந்த சொந்தங்களும் என் உணர்வின் அடையாளம்
கரைபுரண்டு ஓடும் காவேரியும் கபடம் இல்லா மழலைகளும்
முத்துக்குளிக்கும் மீனவனும் ,உப்பு எடுக்கும் தூத்துக்குடி காரனும்
தூங்கா நகரத்தில் துளியெழும் மதுரை மண் வாசமும்
காரைக்குடி பேர் சொன்னாலே உள் நாக்கு தவிக்குதடி
கும்பகோணத்தை நினைக்கையில் என் நுனி நாவும் சிவகுத்தடி
தாமிரபரணியில் தலை நினைக்க , பாலாறும் பலப்பலக்க
வைகை தான் வாய்பிளக்க ,நொய்யலும் கடந்தது
மூவேந்தன் படைப்புகள் என்னவென்று நான் சொல்வேனோ
தஞ்சையில் நடராஜனும் , மதுரையில் மீனாட்சியும்
சிதம்பரத்தில் தில்லையும் , காஞ்சியில் காமாட்சியும்
ராமேஸ்வரத்தில் ராமநாதஸ்வாமியும் , திருச்சியில் ஸ்ரீரங்கனும் அருளி எழ
என்னவென்று சொல்வேனோ என் தமிழினத்தின் அழகை
கவிகளும் அவர்களின் கவிதைகளும் சுதந்திரமாய் உலா வர
கலிங்கத்து பரணியில் மன்னவன் வருகிறான்
சிலப்பதிகாரத்தில் சிலம்புடைத்து , மணிமேகலையில் மாலை சூட்டி
சீவக சிந்தாமணியில் முகம் சிவக்கிறேன்
ஆத்திச்சூடி சொன்ன அறமும் , திருக்குறள் தந்த நெறியும்
நாலடிகள் கொடுத்த நன்மையும் , நற்றிணை சொல்லும் வாழ்வியலும்
தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள் ... இத்தனை உடமைகள் கொண்ட என்னை
உன் சொந்தமாய் ஏற்க ஏன் மறுக்கிறாய்
இந்தியா எனும் உன்னை அழகிய பாரதம் என்று அழைப்பேனே
அரவணைக்க பிறந்த உறவுகள் உன்னிடம் அன்புதான் கேட்கிறேன்
நாம் ஒருதாய் பிள்ளைகள் , என்னிடம் உன் கோபம் என்ன
உன்னில் என்னை ஏற்பாயா - இப்படிக்கு தமிழகம்

எழுதியவர் : ஹேமாவதி (22-Apr-19, 4:48 pm)
சேர்த்தது : hemavathi
பார்வை : 961

மேலே