முருகன் சுந்தரபாண்டியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முருகன் சுந்தரபாண்டியன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  06-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2015
பார்த்தவர்கள்:  194
புள்ளி:  86

என்னைப் பற்றி...

தாகத்தின் கீழ் கண்ட துளி வானம் அது பற்றி இருக்கிறது என் விரல்களில்.... தொலை பேசி : 7502506286

என் படைப்புகள்
முருகன் சுந்தரபாண்டியன் செய்திகள்

உன்னைச் செய்யும் இடைஞ்சலுக்கும்
அங்கங்கு நீ பார்வை முறித்து
பதிலாய்ச் சொல்வதற்கும்
நேற்றைய ஞாயிறு தான்
ஒரு பெரிய காரணம்
அப்படி இல்லையென்றாலும்
உண்மையில் அது
போதாச் சிறு விடுமுறையாக இருக்கிறது.

இழுத்த படி நீயும்
இருத்தியபடி நானும்
முன் பின்னாக
கதவின் பிடியோடிருக்க
அசைவுறும் நிலையிடைப் பிளவின் வழி
நயமாய் வரும் காற்று
நாம் போட்டி போடும்
அன்பை வாங்கி போயிருக்கும்.

நம்மில் ஒருவருக்கு மட்டும் கிடைத்த
இத்திங்கள் விடுமுறை அனுமதி
இருவருக்கும்
சரிக்கு சரி ஆனது பற்றி
காதலிடம் கைக்கட்டி நிற்பதென்பது
ஒரு முத்தத்தில் துவங்குகிறது
ஒரு முத்தத்தில் முடிகிறது

எப்படியோ
மாதத்தில் ஒரு

மேலும்

உண்மைதான்..காலம் காலமாய் அதை தான் நாம் புரிதலில் அமர்த்தி இருக்கிறோம் 19-Jul-2016 7:23 am

டேக் கேர் எனும் துன்பம்
-----------------------------------------------
நீ உதிர்த்துப் போன Take care...
சில நாட்களுக்கு
பின் போகச் சொல்கிறது என்னை

உன் பெருவிரல் தொட்டுதிரும்
தகவலுக்கு காத்திருந்த எனது நொடிகள்
மூன்று புள்ளிகள் வைத்து
அப்போது போல இப்போதும்
தவமிருக்கிறது

நீ அனுப்பிய "ஹ ஹ ஹ.." விற்கு
ஆகாச வாய் திறந்த என் ஸ்மைலிகள்
சிறு கோட்டால் உதடமைத்துள்ளது

உன் மெளனக் குறியீடுகளில் ஒன்றை
தவறிய அழைப்பாகவாது கொடு

முன்பைப் போல உன் குரல்த் தகவலால்
நான் திரும்பக் கிடைக்குமாறு செய்

விரலசைவு பதில்களால்
என் வீணாகும் பொழுதினை
எப்பவும் போல் இல்லாமல்
கொஞ்சமாவது சேகரி

"இனி

மேலும்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jul-2016 6:43 am

100 அடி சாலையில்
எக் ரைஸ் மணம் கமழ
ஆவி பறக்கும் கானலில்
சில்லிச் சாஸ்க்கான உன் காத்திருப்பில்
ஒரு முறைதான் பார்த்தாய்.
ஆப்பாயில் மறந்துக் கை கழுவிய பின்
மாஸ்டரோட "என்னடே.... தப்பி.."க்கு
முழித்துக் கொள்ளும் போது
நீ இன்னோரு முறை பார்த்தாய் !
புகை கக்கும் அப்பெருஞ்சாலையில்
எப்படியெல்லாமோ
உன் பார்வை மொய்த்து
நெளிந்து
நான் சுவாசித்து நீர்த்துப்போனப் பின்
இட்ட பதிவொன்று
ஆன் திஸ் டே" வை
அலங்கரித்துக் கொண்டிருக்கிறது ...

- முருகன்.சுந்தரபாண்டியன்

மேலும்

நன்றி தோழமை 20-Apr-2016 9:09 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2016 11:49 pm

100 அடி சாலையில்
எக் ரைஸ் மணம் கமழ
ஆவி பறக்கும் கானலில்
சில்லிச் சாஸ்க்கான உன் காத்திருப்பில்
ஒரு முறைதான் பார்த்தாய்.
ஆப்பாயில் மறந்துக் கை கழுவிய பின்
மாஸ்டரோட "என்னடே.... தப்பி.."க்கு
முழித்துக் கொள்ளும் போது
நீ இன்னோரு முறை பார்த்தாய் !
புகை கக்கும் அப்பெருஞ்சாலையில்
எப்படியெல்லாமோ
உன் பார்வை மொய்த்து
நெளிந்து
நான் சுவாசித்து நீர்த்துப்போனப் பின்
இட்ட பதிவொன்று
ஆன் திஸ் டே" வை
அலங்கரித்துக் கொண்டிருக்கிறது ...

- முருகன்.சுந்தரபாண்டியன்

மேலும்

நன்றி தோழமை 20-Apr-2016 9:09 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2016 11:49 pm

அந்தக் காட்டுநெல்லி மரவேர் தட்டித்தான்
நம் காதல் துளிர்க்க வேண்டுமென்றிருக்கையில்
உன்னைத் தாங்கிய
நம் நன்நிலத்து வரப்பின் மீது
நிமிர்ந்து இருக்கிறது நம் வீடு.
இங்கும் மனதோடு
வரிசையாக
அழகு வாசற் புற்கள் ,
வயல்சூழ்ந்த நம் புகைப்படங்கள் !
ஆனால் வரப்பினில் கிடைத்த
அவ்வாசம் வீசா வண்ணம்
சுற்றம் மிகுந்த நம் சொந்தங்கள்
ஜன்னல் மூடிக் கட்டியிருக்கிறார்கள்
ஆளுக்கொரு காதல் பவனம்...

- முருகன்.சுந்தரபாண்டியன்

மேலும்

பெயர்ச்சொல்லி தும்மாவிட்டால்
ஆட்டுக்குட்டியென்பாள் ஆச்சி.
கிலோ மீட்டர் வேகத்திலும் உன் பெயரை
இணைத்துச் சிரித்த நாள் நியாபம் வருகிறதா ?

அப்பேருந்து சன்னலிருக்கையை உனக்குத் தர
நான் சொன்னக் குறும்புக்காரணத்திற்கு
நீ கிள்ளிச் சிவந்த இடம் இன்னும்
வலிக்க வில்லை !!

ரூம்ல வாடிக் கிடக்கும்
ரோஜாவலாம் தூரப் போட்ருவேன் என்று
உச்ச மிரட்டலில் உன்னை அமிழ்த்திச் சிரிப்பாயே ?
என் வீட்டுப் புது ரோஜாவுக்கு கோடி சமம் அது !!

அலைப்பேசி கேட்கவில்லையென
கேட்டுக்கொண்டவைகளில்
நம் முத்தமே அதிகமென்கையில்
த்தூ " மூஞ்சப்பாரு என்றாயே அப்போது நீ நிச்சயமாய்
ஒரு சாரலில் நனைந்திருந்தாய் . கரெக்டா?

ஐ பார்

மேலும்

நன்றி நட்பே 29-Mar-2016 3:15 pm
முருகன் சுந்தரபாண்டியன் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2016 11:27 am

என் திசுக்களில் பரவியுள்ள
நம் தொன்மத்த முத்தத்திற்கு முன்னதான
உன் பரிட்சயங்கள் யாவும்
தித்திப்பில் உன் "இதழானவை"

ஆவாரம் பூக்களை கழுத்தடிச் சேர்த்து
தலை சாய்த்த உன் பார்வையை
புசித்தபடியான என் வேர்கள்
உயிர் விட்டுத் துளிர்க்கிறது பூவாக

நாவல் மரக் காற்றில் உன்
தாவணியில் விழுந்த செங்காய்களை உதறிய
உன் முகம் இன்றும் கனிகிறது

முன்பு நாம் சுற்றி விட்ட
காய்ந்த பூவரசங்காய்கள் அப்படியே
என்னை உன்ச் சுழலுக்குள் அமிழ்த்துகிறது

ஆளுக்கொருபாதி சுவைத்த ஒட்டுமாப் புளிப்பு
கண்களை சுண்டிக் கூசும்படி
தீண்டித் தூண்டுகிறது

அந் நாளில் நீ தாவிக்குதித்த
காய்ந்த வைக்கோல்ப் பரப்பில் தொலைந்த
என

மேலும்

மக்க நன்றி . மகிழ்ச்சி 27-Mar-2016 5:00 pm
மிக்க நன்றி . மகிழ்ச்சி 27-Mar-2016 4:59 pm
காதல் மேலாண்மைக் கருத்துள்ள படைப்பு . பாராட்டுகள் . நன்றி 26-Mar-2016 4:06 pm

பக்கத்து சீட்டில்
அவளோடு அமர்ந்து
வந்தவன் தன்னிச்சையாக
புன்னகைத்து சென்றான்,
அவனது நிறுத்தம்
வந்து இறங்குகையில்.
மறு புன்னகை
உதிர்த்தவளை விட்டுவிடுங்கள்.
இதோ ! உங்களில்
இவனற்ற ஒருவர்தான்
அவளுக்காக காலி சீட்டில்
அமராமல் பயணிக்கிறீர்.
பெண்மை ஏந்தும்
உங்கள் கைகளில்தான்
எத்தனை ஓட்டைகள் !

        -முருகன்.சுந்தரபாண்டியன்

மேலும்

உண்மை நண்பரே.. புரிதலில் ஒரு பக்கம் தவறாக சாய்வது தான் எத்தனை துயரம். 21-Mar-2016 2:27 pm
முடிவிடம் கவிக்குள் உயிரோட்டம் நிறைந்தது இந்த மண்ணில் எழுந்த விடையே இல்லாத பெரும் கேள்விக் குறிகள் அவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2016 12:00 pm

மரத்திலோர் இதயம் கொய்து
பேருந்தில் நம் பெயரை செதுக்கி மாற்றானொருவனதை ரசித்துபோவானோ?
அவனுமொரு சுவற்றில் கிறுக்கிப்போவானோ? - யார்
கண் பட்டாலும் பரவாயில்லை என்றுமே கலையா வானவில்லாக காதலிப்போம்.
காதல் சாலையில் இடதுப்புறம் செல்வோம்.
ஆயிரம் சிவப்பொளி நிறுத்தங்கள் வரட்டும் வாழ்நாள் முழுதும் கரம் பிடித்தே நடப்போம்
மஞ்சளொளிவேண்டிக் கிடக்கும் அதிகாலையாய் பொறுத்திருப்போம்
காதல் கரையேறும் நம்பிக்கையில்.
சமூகவலைதளத்தை உள்ளங்கயிலேந்தியோ
இசைக்கருவியை காதிலடைத்தோ திரிய வேண்டாம்
மழையிளொரு நனைதல் வேண்டாம் பெருந்தில்நாம் கொஞ்ச வேண்டாம்
வாரயிறுதியில் வணிகவளாகம் தேட வேண்டாம்- நாம்
விழித்துபிழைக்கவும்

மேலும்

மனமார்ந்த நன்றி .உங்கள் கருத்து எப்போதும் எனக்கு வேண்டும் 13-Mar-2015 7:54 pm
மனமார்ந்த நன்றி .உங்கள் கருத்து எப்போதும் எனக்கு வேண்டும் 13-Mar-2015 7:54 pm
மனமார்ந்த நன்றி .உங்கள் கருத்து எப்போதும் எனக்கு வேண்டும் 13-Mar-2015 7:54 pm
கருத்துக்கள் செறிவு !கொஞ்சம் கவிநடை அமைத்தால் மிளிரும் ! 15-Jan-2015 1:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (77)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவர் பின்தொடர்பவர்கள் (77)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
ரேவதி

ரேவதி

வேலூர்
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (77)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே