ஜெ.கி.கெளதம் ராம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஜெ.கி.கெளதம் ராம் |
இடம் | : Mettupalayam |
பிறந்த தேதி | : 20-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 4 |
நண்பனே ...........!
வெற்றியை உன் பின்னால்
ஓட விடாதே
வெற்றியின் பின்னால்
நீ ஓடு
ஒரு நாள் உலகம்
உனக்கு தலை வணங்கும்
ஏனோக் நெஹும்.
வாழ்க்கை ஒரு புனையா ஒவியம்
அலங்கரிக்க இயற்கை தந்ததூரிகையே
மனிதனின் ஆறாம் அறிவு
அத்தூரிகையைக் கொண்டு- ஓவியத்தை
அலங்கரிப்பதும் அலங்கோலமாக்குவதும்
அவரவர் கைவண்ணமே.
அழகிய சூழல்
பிள்ளைகளின் சந்தோசம்
குதூகலமாக ஓடி விளையாடும்
பள்ளிச் சிறார்கள்!
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஆசான்கள்!
சந்தோசத்திற்கு முற்றுப்புள்ளி!
பாடசாலை ஆரம்ப மணி ஒலி.
வகுப்பறைச் சிறையில் கைதான மாணவர்கள்!
சிறைக் காவலராய் ஆசிரியர்கள்
வகுப்பறையில்!
சுதந்திரம் பரிக்கப்பட்டவர்களாய்
மாணவர்கள்!
மனமின்றி ஆசிரியரின் கற்பித்தல்
பதியவில்லை மனதில்!
விடுகைக்காய் மாணவர்
எதிர்பார்ப்பு!
விடுதலைக்காய் காத்திருக்கும்
சிறைக்கைதி போன்று!!
குதூகலம் குழப்பப்பட்டதன்
எதிரொலி!!
பதியவில்லை மனதில் கல்வி
போதனைகள்.
பசியான வேளை ஏறவில்லை கல்வி
மனதில்!
உழவன்
கோடிகளை ஈட்டினும்
உயிரை காப்பது- உழவனின்
கோணி அரிசி
மனம்
கல் மனதை செதுக்கி
சிலையாக வடித்தால்
மிதித்தோர் மதிப்பர்
நட்சத்திரம்
துன்ப இருளில்
நம்பிக்கை ஒளியை ஏந்தினால்
நீயும் நட்சத்திரம்
முயற்சி
தோல்வியின் காயத்திற்கு
முயற்சியெனும் மருந்திட்டேன்
வெற்றியின் வடு பதிந்தது
அலங்காரம்
தோல்விகளை பிம்பமாக்கி
அலங்கரித்தால் நீயும்
வெற்றி நாயகனே.
மலைப்பாடகன்
நீல மலை மீதினிலே ஈரமழைச்
சாரலது தூறுதடா -நந்தலாலா
ஓங்கி நிமிர்ந்த தோற்றமது தமிழரது
வீரத்தினைக் காட்டுதடா--நந்தலாலா
மலைமீதேறி பார்த்த பின்னே பேரூரும்
சிற்றூராய் தோன்றுதடா-நந்தலாலா
பிரச்சனைகளைத் தள்ளிவைத்து பார்த்தாலோ பட்டதுன்பம்
துச்சமென தோன்றுதடா-நந்தலாலா
மலைப் பாதை வளைவுகளும் சொல்லிடுதே
எதிர்பாராத் திருப்பங்களை-நந்தலாலா
இவையாவும் வேரெதற்கு புகழ் எனும்
உச்சத்தை அடைவதற்கே-நந்தலாலா
மலை உச்சி அடைந்த பின்பும்
முடிவொன்றும் இல்லையடா-நந்தலாலா
எட்டிப்பறிக்க சூரியனும்,தூண்டிலிட விண்மினும்
நிறைந் துள்ளதலடா - நந்தலாலா