ராம்குமார் பாலு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராம்குமார் பாலு |
இடம் | : சிவகாசி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 127 |
புள்ளி | : 6 |
கவிதை எழுத வராது... ஆனால் நல்ல ரசிகன்
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
மழையில் நனைந்துவிடும்
தீர்மானத்துடன்
குடை எடுக்காமல் வெளியேறினேன்.
வானம் நிரப்பிய
கார்மேகம் கட்டியம் கூற
இப்போதோ அப்போதோ
நிகழ்ந்துவிடும் என்ற நிலையில் ..
கலாபம் விரித்து மயூரம்
நடனமிடத் தொடங்கியிருந்தது ....
காத்திருந்த அந்த
கண நெரிசல்களில்
தாமதித்து வந்தது மட்டுமன்றி
திரும்பிப் பார்த்து புன்னகை
பொழியாமல் போய்விட்டது நிலவு
அங்கே சிதறிக் கிடந்தது கனவு.
*மெய்யன் நடராஜ்
தனது மகன்கள் ஆட்டம்போட்டு
விற்றுத்தீர்ந்த நிலம் போக,
தனக்கிருக்கும் சிறிய பங்கில்
பயிரைப் பயிரிட்டு
பகலில் மழை பொய்த்தாலும்
இரவில் மழை வருமென
தனக்குத்தானே
நம்பிக்கையோடு சொல்லி
காலை முதல் கருமை வரும் வரைக்கும்
புளித்துப்போன
பழைய கஞ்சியைக் குடித்துவிட்டு,
வயதான காலத்திலும் சளைக்காமல்
மற்றவர் பசி தீர்க்க
தான் பசியோடிருந்து,
கிராமத்தில் விவசாயம் செய்யும்
உழைப்பின்
ஒட்டுமொத்தஅடையாளம்
வி வ சா யி
(இடையில் எந்த முற்றுப்புள்ளி இல்லாமல் முதல் முயற்சியாக ஒரே வரியில் எழுதியது. இது கவிதையா அல்லது இது எண்ணமா என்பது தெரியவில்லை).
மனிதா ...
நீ பிறந்தது
சொந்தங்களின் பந்தங்ககளை
அலங்கரிக்கவா ...?
நட்பிற்கு
பெருமை சேர்த்தோரின் பட்டியலில்
முதன்மை இடத்தினை ஆட்சி செய்யவா ...?
காதலுக்காய் மனதினில்
உலகின் எட்டாம் அதிசியத்தை
அமைத்துவிடவா ...?
நீ மாய்ந்த பின்னும்
இன்னும் மலரா விழிகளுக்காக
உன் வாழ்வினை கதையாக்க
ஒவ்வொரு பாட்டியும்
உன் சரித்திரப் பக்கங்களை
புரட்டிப் பார்க்கவா ...?
சொர்கம் , நரகம்
இரண்டுமே ஒரே பிறவியில்
பார்த்துவிட்டேன்..
நீங்கள் இருந்தபோதும், இல்லாதபோதும்.....
சொர்கம் , நரகம்
இரண்டுமே ஒரே பிறவியில்
பார்த்துவிட்டேன்..
நீங்கள் இருந்தபோதும், இல்லாதபோதும்.....
புலவன் என்பதன் எதிர்ப்பால் சொல் என்ன??