ANANTH - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ANANTH |
இடம் | : மருதடி,PERAMBALUR |
பிறந்த தேதி | : 31-Jan-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 0 |
எங்கிருந்தோ வந்திட்ட இதயக்கள்ளன்
இதயம் தொலைத்திட துடிக்கும் கன்னியொருத்தி.
காதல் கமலம் மலர்ந்திடும் தருணம்.
என்ன நிகழும்.. என்ன நிகழும் ???
----
உற்று நோக்கிய கவியாளன்பால்
பற்றுக்கொண்டாள்.. காதல் பற்றிக்கொண்டாள்?
முற்றும் மறந்து காதல் சித்தாந்தம் தேடலானாள்
மைவிழியால் காதல் மையல்கொள்ள நேரிட்டாள்.
கவியாளனின் விழியில் மெய்மறந்தாளோ?- தமிழ்
மொழியாளனின் கவியில் கரைந்திட்டாளோ ?
தாழியுடைந்து பதறியோடும் நீரின்நிலையாய்
தாலிவரம் கேட்டிட துடித்தாளோ ?
இக்கொடியிடையாளின் மனநிலைதானோ எதுதானோ ?
கவியாளனின் கவிவேலியில் படர்ந்திட துடிக்குமோ ?
--
கருந்திரள் தேகம், கருமைநிற ரோமம்
@@வலிகள் @@
என் வலிகள்
அனைத்தும் முழுவதுமாய்
மறைந்துபோகும் ...
என் அன்னையவள்
முகம் கண்டு ....
அவளும் அறியாத
என் காயங்கள் ...
கண்ணீராய் கரையும் ...
தினம் தினம் நீ
தரும் காதல் காயங்களால் ...
என் இதயம் என்னும் கல்லறையில் ...
தேவதையின் மறுபக்கம் தொடருக்கு ஆதரவளித்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள்...
"இவ்வளவேனும் காதல் செய்" என்ற எனது அடுத்த தொடர் க(வி)தையின் வாயிலாக மீண்டும் அனைவரோடும் பயணிப்பதில் அளவில்லாத ஆனந்தம்..
நமது கதையின் கதாநாயகன் " நித்திலன் "
நாயகி "நிதர்சனா "
வாஷிங்டன் நகரத்து நாகரீக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, தாயின் அன்பிற்கும், குடும்பத்தின் கௌரவத்திற்கும் பாதகம் விளைவிக்காத பகுத்தறிவாளனும், இலக்கிய நேசனுமான கண்ணியமானத் தமிழன்... உயர்படிப்பு முடிந்து அங்கேயே வேளையில் இருக்கும் "நித்திலன்"
தஞ்சை மாநகரத்தில் செல்வத்தில் பிறந்து, சீரோடு வளர்ந்து, பண்பும் படிப்பும் நிறைந்த தண்மதி "ந
எப்போதாவது வரும் கனவில்
வேண்டிய நினைவுகளை
வேண்டா பொழுதில்
பெய்து அழித்தே விடுகிறது
மாய மழை...