ரேகா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரேகா |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 28-Sep-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 237 |
புள்ளி | : 24 |
கவிதையே வாழ்க்கை
விரும்பும் நெஞ்சம் அருகில் இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள் உள்ளவரை தொலைவும் வெகு அருகில் தான்.
முகநூலாம் முகநூல்
இதில் எத்தனை
முகங்கள் ஆஹா.......
பல மனம் கொண்ட
பரிசம் காட்டும்
இதயங்கள்........
முகநூலின் நட்பிற்கு
அழகு என்றால்
முகமே தெரியாத
நண்பர் மீது கொள்ளும்
நம்பிக்கை தான்...
நானும் எத்தனையோ நூல்கள் கற்றிருக்கிறேன்.......
படித்தேன் புதிதாய்
ஒரு முகநூல்....
கற்றேன்
ஒவ்வொரு
மனங்களின்
பதிய புதிய
பாடங்களை.........
இங்கு திரையில்
காட்டாத அன்பான முகங்களும் உண்டு......
முகமூடி போட்ட
இதயங்களும் உண்டு....
ஆயிரம் நூல்கள்
கற்று பட்டதாரி
ஆனாலும்
முகநூலினையும்
கற்க வேண்டும்..........
இது உலக அறிவை
தந்து வாழ
கற்று தரும்.................
சுற்றி திரியும் என்ஆசைகளை சுட்டெரிக்கின்றதுஉன்கோபங்கள் இன்னும் என்னை என்ன செய்யபோகிறாய் ..?அன்பே....அன்பே....
உயிரே உன் உயிரென
நானிருப்பேன்
அன்பே..............
இனிமேல் உன்
இதழ்களில் நான் சிரிப்பேன்
அழகே......................
எங்கே இருக்கிறாய் ! எப்படி இருக்கிறாய் !
அலைபேசி உரையாடல் ,
அன்பின் வார்த்தைகள்
விழி பேசிய மௌன மொழிகள்,
இதழ் பேசிய இனிய மொழிகள்
விரல் தீண்டிய ஸ்பரிசங்கள் ,
விடியலின் முதல் உன் பார்வைகள்
எல்லாம் தொலைந்தது ! நீயும் தொலைந்து விட்டாய் !
எங்கே இருக்கிறாய் ! எப்படி இருக்கிறாய் !
நான் வாழ்வது இனிதாக இல்லை
நான் சாவதும் எளிதானது இல்லை
உன்னை மறப்பதும் எளிது இல்லை
காதல் தந்த பிரிவின் வலி எவ்வளவு கொடிது
காதலி உன்னை இன்றுவரை காணாதது அதைவிட கொடிது
காத்திருப்பது சுகம் தான் நீ வருவாய் எனில் -ஆனால் வரமாட்டாய் !
காலமும் சென்று கொண்டு இருக்கிறது -உன்
காதல் என்னை கொன்று கொண்டிருக்கி
வீட்டில் மாடி பரண் மேல் நின்று நிலாவை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். வழக்கத்தை விட நிலா இன்று கூடுதலாக முறைக்கின்றது என்னை.நான் ரசித்தது அந்த வெண்ணிலாவை அல்ல,என் வெள்ளை நிலா அவளை. என் வெள்ளை நிலா அந்த வெண்ணிலவை விட சற்று பிரகாசம் அதிகமானவள்.
எனக்கும் அவளுக்கும் அருகருகே வீடு;அருகருகே இருக்கைகள் வகுப்பில்;
என்னை அவளுக்கு 9 வயதில் இருந்தே தெரியும். ஆனால் காதல் வந்ததோ 15 வயதில் தான்....
அன்று அந்த நிலா பூமி வந்து இறங்கிய நாள்.அவளுக்கே உரித்தான அழகிய சிகப்பு வண்ண சுடிதாரில் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.தூங்கியவனை வம்படியாக எழுப்பி சாக்லேட் கொடுத்தாள்.
ஹையோ,,,! என்னா அழகு...அந்த கணத்தில் இருந்து
அந்தப் பேருந்து நிறுத்ததில் நான் செல்ல வேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். நடு வீதியில் பேருந்தை நிறுத்தி இரு பல்லவன் அதிகாரிகள் பயணச் சீட்டு சோதனை செய்து கொண்டிருந்தனர். பின்னால் போக்குவரத்து தடை பட்டு நிற்கும் வண்டிகள் ஓயாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.. இரைச்சல் தாளாமல் சாலை ஓரம் செல்லும் பொழுதுதான் அந்த நிகழ்வை கவனித்தேன்.
அந்தப் பெண் 6"x 6" பூந்துவலை கைக் குட்டையால் மூக்கை வினோதமாகப் பிழிந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் பார்த்தபின்தான் புரிந்தது கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது... கைப் பேசியில் யாருடனோ பேசப் பேசப் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்..
"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.
"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.
மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."
ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.
ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர