மதுரகவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மதுரகவி |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 4 |
எனது பெயர்.கழுகரை.ந.கார்த்திகேயன். நான் தமிழை பழனியில் பயின்றேன். இப்பொழுது மத்திய அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன்.
நேற்று
கொட்டித்தீர்த்த மழையில்
முளைத்த காலன்
நிற்பது கம்பீரம் தான்
வீழும் வரை!
பாலைவனக் கானல் நீர்
செல்வம் இருப்பது போல்
மாயை காட்டும்
பின்னர் மறையும்!
மழை சாரலின்
வானவில் அழகுதான்- நொடியில்
மறையும்!
நேற்று
கொட்டித்தீர்த்த மழையில்
முளைத்த காலன்
நிற்பது கம்பீரம் தான்
வீழும் வரை!
பாலைவனக் கானல் நீர்
செல்வம் இருப்பது போல்
மாயை காட்டும்
பின்னர் மறையும்!
மழை சாரலின்
வானவில் அழகுதான்- நொடியில்
மறையும்!
நீதிமன்றத்தில்
வழக்கொன்று
வாதத்திற்க்கு வந்தது
உண்மையை காணவில்லையென்று
பொய்கள்
ஒன்றுக் கூடி
வாதிட்டன
உண்மை நாங்களென்று
காணாமல் போன
உண்மையை கண்டுபிடிக்க
உத்தரவிட்டார் நீதிபதி
பொய்கள் கூடி பேசி
தங்களுக்குள்
உயர்ந்த பொய்யை
உண்மை வேடமிட்டு
கூட்டி வந்தனர்....
பொய்களின்
வாதபலத்தால்
உண்மை கிடைத்ததாய்
தீர்ப்பு வாசித்தார் நீதிபதி
பொய்கள் கூடி
நீதிபதிக்கு வாழ்த்துரைக்கையில்
தன்
கண் கட்டை அவிழ்த்து
தராசினை தூர எறிந்துவிட்டு
நீதிமன்றம்
விட்டு வெளியேறினால்
நீதி தேவதை.....
பாண்டிய இளவல்(மது. க)
அவன்,
கந்தலான
கச்சைக்காரன் !
சோற்றின் மீது
இச்சைக்காரன் !
சுருங்கச் சொன்னால்
பிச்சைக்காரன் !
அவன்,
ஒவ்வொரு வேளையும்
உணவுக்காக
வெம்புகிறான் !
எப்படியும்
மகேசன்
படியளப்பானென்று
நம்புகிறான் !
அவனுக்கு,
வாழ்வென்பது
காற்றிலாடும்
ஊசல்தான் !
வயிற்றுக்கும்
அவனுக்கும்
அனுதினமும்
பூசல்தான் !
அவன்,
வசிப்பிடம்
ஒரு தேநீர்க்கடை
வாசல்தான் !
அவன்,
ஒரு நாளும்
குளித்ததில்லை !
சோறுண்ண
யாரும் அவனை
விளித்ததில்லை !
வயிறார
அவனும் உண்டு
களித்ததில்லை !.
உடம்பில்
இல்லை
முடம் !
இன்னும்
இருக்கிறது
திடம் !
ஆனாலும்,
உழைப்பு கூடாதென்று
அவனுக்கு ஓர்
அடம் !
தொடக்கத்தில்
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்
---------------------------
எழுத்து நண்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன்பே மேலே உள்ள வரிகள் என் மனதில் வேரூன்றியது. என்னால் அதன் தொடர்ச்சியை எழுதமுடியவில்லை. விருப்பம் உள்ளவர்கள் அந்த வரிகளை ஒரு முழுமையான கவிதையாக்குங்கள். எழுத்து ஆசிரியர் குழு நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பரிசு கிடையாது. பாராட்டு மட்டுமே கிட்டும்
அப்பாவுக்கும்
சித்தப்பாவுக்கும்
ஆகாது
சின்னச் சின்ன
சண்டைகள்
சின்னச் சின்ன
உரசல்கள்
எப்போதும்
இருந்து கொண்டிருக்கும்
அப்பாவுக்குத்
தெரியாமல்
சித்தப்பா வீட்டில்
டிவி பார்ககப்போவோம்
நானும்
தங்கையும்
ஒரு
சொத்துப் பிரச்சனையில்
வாய்ச்சண்டை முற்றி
அரிவாள் எடுத்து
வெட்டப்போனார்
சித்தப்பாவை
அப்பா
அவ்வப்போது
இழையோடிக்கொண்டிருந்த
பேச்சுவார்த்தையும்
அதன்பிறகு
முற்றிலும் அறுந்துவிட
தங்கையின்
திருமணப் பத்திரிகையில்
மறக்காமல்
விடுபட்டுப்போனது
சித்தப்பாவின் பெயர்
ஓடிப்போயின
பத்து வருடங்கள்
அப்படியே
சித்திக்குப்
பேசிவிட ஆசைதான்
சித்தப்பாத
எனது கவிதையைப் படித்தவுடன் தங்களது கருத்தினைத் தெரிவிக்கவும்.
எங்கே போனது
பரிதி உதயமாகும்
முன்னெழும் பழக்கம்
எங்கே போனது?
இல்லம் வருவோர்
மனம் குளிரும்படியான
விருந்தோம்பல்
எங்கே போனது?
சுற்றம் சூழ
அகமும்,புறமும்-மகிழ
கொண்டாடிய பண்டிகைகள்
எங்கே போனது?
அகண்ட ஆறுகளும்
அதன் வழி வந்த
கால்வாய்களும்
எங்கே போனது?
சுட்டெரிக்கும்
வெய்யிலின் தாக்கம்
தணிக்கும் மரங்கள்
எங்கே போனது?
மண்ணைப் பொன்னாக்கி
கொடுத்த விளைநிலங்கள்
எங்கே போனது?
எங்கே போனது?
ஐந்தாண்டுகளுக்கு கொருமுறை
வாக்கு சேகரிக்கும்
அரசியல்வாதி கைகளிலும்
அதிகாரம் செய்யும்
அதிகாரிகளிடத்தும்
விஞ்ஞான வளர்ச்சி கண்டு
மயங்கிக் கிடக்கும்
மக்களால
பரிதி உதயமாகும்
முன்னெழும் பழக்கம்
எங்கே போனது?
இல்லம் வருவோர்
மனம் குளிரும்படியான
விருந்தோம்பல்
எங்கே போனது?
சுற்றம் சூழ
அகமும்,புறமும்-மகிழ
கொண்டாடிய பண்டிகைகள்
எங்கே போனது?
அகண்ட ஆறுகளும்
அதன் வழி வந்த
கால்வாய்களும்
எங்கே போனது?
சுட்டெரிக்கும்
வெய்யிலின் தாக்கம்
தணிக்கும் மரங்கள்
எங்கே போனது?
மண்ணைப் பொன்னாக்கி
கொடுத்த விளைநிலங்கள்
எங்கே போனது?
எங்கே போனது?
ஐந்தாண்டுகளுக்கு கொருமுறை
வாக்கு சேகரிக்கும்
அரசியல்வாதி கைகளிலும்
அதிகாரம் செய்யும்
அதிகாரிகளிடத்தும்
விஞ்ஞான வளர்ச்சி கண்டு
மயங்கிக் கிடக்கும்
மக்களால்
தொலைந்து போனது..................?