அஹமது அலி- கருத்துகள்

மிக்க நன்றி சார்!

எப்படி இருக்குறீர்கள் நலமா?

கருவும்,

உருவும்,

உவமையும்,

மிக அழகு!

இன்பக் கண்ணீரா?
துன்பக் கண்ணீரா?

கவிஞரின் பாடலை கண்ணுக்கு விருந்தாக்கிய உமக்கு நன்றி!

கவிதை வயலில்-நீர்
செய்த விவசாயம்
விவசாய விசுவாசம்
விவசாயமில்லையேல்
விட்டு ஓடும் சுவாசம்!

கவியே அபாரம்!

எழுத்துழவனாகி
கவி வயலில்
பரிசை அறுவடை செய்த
அருமையான வரிகள்.!


வாழ்த்துக்கள்.!

வாழ்த்துக்கள் அண்ணா
என் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறியது

உண்மையான கருத்து ஐயா

மூட நம்பிக்கைள்
மனிதனால் உருவாக்கப்பட்ட
மனிதனை கடவுளாக கருதும்
பழக்கத்தை விட்டு
ஓர் கடவுள் கொள்கையை பின்பற்றலாம்....

பகவத் கீதை 7:20 வசனம் இவ்வாறு கூறுகிறது.
''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

பைபிள் கூறும் ஓரிறைக் கொள்கை –

“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” (யோவான் 5:37)

“ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (I தீமோத்தேயு 6:16)

“நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்”(யாத்திராகமம் 33:20)

சிந்தித்தீர்களானால் மனிதர்களால் இடைச்செருகல் செய்யப்பட்ட கொள்கையிலிருந்து மெய்யான ஓரிறையை அறிந்து கொள்ளலாம்,,,

இது மிக விரிவாக அறிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம்......

முதலில் எல்லா மதங்களும் கடவுள் கொள்கையில் ஓரிறைக் கொள்கையையே வலியுறுத்துகின்றன..
பல கடவுள் கொள்கை பின்னர் வந்த இடைச் செருகலே..
பூமியில் தோன்றிய முதல் மனிதனுக்கும் ஓர் கடவுள் தான் இருந்திருக்க வேண்டும், பிறரை பற்றி அறியவோ பல கடவுள்களை அறியவோ அவனுக்கு வாய்ப்பில்லை. எனவே தான் ஓர் கடவுள் என்பது முதல் மனிதனின் நிலை...
பின்னர் தோன்றிய எல்லா சமுதாயத்திற்கும் ஒவ்வொரு இறைத்தூதர்களை அனுப்பியதாக குரான் சொல்கிறது.
இந்த இறைத்தூதர்கள் அந்தந்த சமுதாயத்திற்கு மட்டுமே தூதர்களாக வந்தார்கள், குறிப்பாக மூஸா(அலை) எனப்படும் மோசே அவர்கள் யூதர்களுக்கும், ஈஸா(அலை) எனப்படும் ஜீஸஸ் அவர்கள் கிறிஸ்துவர்களுக்கும் இறைத்தூதர்களாக வந்தார்கள்,
இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே இல்லை, பூமியில் எல்லா பகுதிக்கும் இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள் அவர்கள் ஓரிறைக் கொள்கையின் பால் மக்களை அழைத்து உள்ளார்கள், இவ்வாறு இருக்க...

இறுதி தூதராக வந்தவர்கள் தான் முகம்மது நபி(ஸல்) அவர்கள், இவர்கள் குறிப்பாக எந்த ஒரு சமுதாயத்துக்கும் தூதராக வரவில்லை மாறாக உலகின் அனைத்து முழு மனித சமுதாயத்துக்குமே தூதராக வந்தார்கள்.(முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல) இவரோடு தூதுத்துவம் நிறைவு பெற்றது,

முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களும் ஒரு இறைத்தூதரே, அவர்கள் பூமியில் இறங்கிய இடம் தென்னிலங்கை என்று பரவலாக சொல்லப்படுகிறது, அங்கே ஆதம் மலை ஒன்றும் உள்ளது,,ஆதம் நடந்து வந்த பாதை என்பதால் வெள்ளையர்கள் ஆதம்பாலம் என பெயரிட்டனர், ஆதம் அவர்களின் துணைவியார் பூமியில் இறங்கிய இடம் ஜெத்தா(சவுதி அரேபியா)
ஆதமிற்கு நாம் எல்லா பாசைகளையும் நாமே கற்றுக் கொடுத்தோம் என்று இறைவன் கூறுவது குரானில் உள்ளது.
ஆதம்-ஆதி இந்த வார்த்தைகளில் மிக நெருங்கிய தொடர்பை காணலாம் , மேலும் உலகின் மிக தொன்மையான மூத்த மொழி முதல் மொழி தமிழ் என்று சான்றுகள் கூறுகின்றன, இதை வைத்து சிந்தித்தாலும் மேலே சொன்ன கூற்று உறுதி பெறுகிறது,
தமிழ் மொழி உலகின் பல்வேறு மொழிக்கும் தாயகவும் ,அத்தோடு கலந்தும் கிடப்பது அறிந்ததே...
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராசிriயர் காதர் முஹைதீன் பேசுகையில் தமிழ் மொழிக்கும் அரேபிய மொழிக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை பல சொற்களின் மூலமும் சரித்திரங்கள் மூலமும் விளக்கினார்கள்.

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!

அ வைக் கொண்டே எழுத்துக்கள் தொடங்குகின்றன,
அது போல உலகத்து உயிர்கள் எல்லாம் கடவுளைக் கொண்டே தொடங்குகின்றன.
என பொருள்படும்,
இங்கே கவனிக்க வேண்டியது ஆதி எனும் சொல்

ஆதி-ஆதம்
ஆதி-முதல் மனிதர்

கடவுளைக் கொண்டே ஆதியில் வந்த மனிதர்.

இது என்னுடைய பல நாள் ஆராய்ச்சியின் கருத்து தான்,
இதை பல அறிஞர்கள் வாயிலாகவும் நான் கேட்டதும் உண்டு!

இன்னும் ஆதம் அவரின் வழித்தோன்றலில் வந்த ஷீத் என்பவரே சேதுவாக மறுவியதாக இராமநாதபுரம் பகுதியில் சொல்வதும் உண்டு( இவரும் ஒரு தூதர் என நம்பப்படுகிறது)

ஆக தமிழ் மண்ணில் முதல் இறைத்தூதர் ஆதம் அவர்கள் என்பது என்னுடைய கருத்து.



அஹமது அலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே