பாலமுதன் ஆ- கருத்துகள்

கொதிக்கும் தரையில் கூட
பூமித்தாய்க்கு வலிக்காமல்
அடிவைக்கும் உன்
பாதங்களும் இன்று
கொதிக்கும் குழம்பில்
மிதக்க வேண்டிய கட்டாயம்...

என்ன செய்வது தினம் தினம்
வீட்டு மாடியில் நீ
விரட்டிய காகம் உன்னைப்
பழிவாங்க கறைந்துவிட்டது...

மிக அருமை....

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

அருமை தோழா...

முந்தயநாள் குப்பைகளை
மாநகராட்சி ஊழியர்கள்
பெருக்கிக் கொண்டே சுத்தம் செய்ய
அன்றையநாள் குப்பைகொட்ட
விழித்தெழுந்தது பெருநகரம் !

அருமை...

வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....

உண்மை சொல்லிலும் அருமை...

அசைந்தாடும் திரைச்
சீலையில் எட்ட நின்று தொடும்
சந்திர ஒளியாய் புன்னைக்கிறாய்!

மிக மிக அருமை தோழி...

மீண்டும் நீயற்ற நானாகப்
பிறந்திட வழிவிடு!!

அருமை...

கொஞ்சம் யோசித்தால்
சுதந்திரம் வாங்கிய
அடிமைகள் நாமென்று
தோன்றும்

மிக அருமை தோழியே...

மிக்க நன்றி தோழியே...

இது கைகூ இல்லையே தோழி....

தலைப்பு செய்திகளில் வரும் சில தலையங்கங்களை படிப்பது போல உள்ளது....
காமவெறி பிடித்த ஆண் ஆதிக்கமே
பெண்ணை வாழ விடு
அவர்களின் கற்புக்கு பாதுகாப்பு கொடு..

ஆண்களை காமவெறியர்கள் என்று கூறி விட்டு ... அவர்களிடமே பாதுகாப்பு கேட்பது முரண்பாடாக உள்ளது.... ஆண்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல...


பாலமுதன் ஆ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே