Kamuismail Ismail- கருத்துகள்

படிப்பதும் எழுதுவதும் தவத்தைப் போல பாராட்டுவதும் பகிர்வதும் வரத்தை போல ஜின்னா இரண்டையும் அடைந்து இருப்பது மகிழ்வுக்குரியது.

அன்னையின் அருமை அறிந்த புதல்வனின் உணர்வு

முழுமையாக வாசியுங்கள் தோழரே
தமிழ் நாட்டில் கருத்துக்கும் பஞ்சமில்லை சுதந்தித்திற்கும் பஞ்சமில்லை மோடி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?
நாடாளமன்றத்தில் பேசாமல் ரேடியோ,டிவி,வெளிநாட்டு பணக்கார. வர்க்கத்திடம் செல்பி எடுப்பதும் பயணத்திற்கு கூட்டம் சேர்க்க சகல ஏற்பாடுகளை நம்ம ஊர்கட்சிகள் ஆட்களை திரட்டுகிற பாணியில் கூம்பல் காட்டும் மோடி வித்தையில் ஒரு வகை மேடை வசனங்களை பாராளுமன்றத்தில் அவரே ஏன் பேசுவதில்லை. தந்தை பெரியாரும் சட்ட மேதை அம்பேத்காரும் போராடாமல் இருந்திருந்தால் மோடி டீ கடை ஊழியராகவோ அல்லது டீ கடை உரிமையாளராகவோ தான் மாறி இருப்பார் பிரதமராகி இருக்க மாட்டார். வரலாற்றை மறைக்கவோ மாற்றவோ நவீன ஞானத்தால் முடியாது. தற்காலிக ஆட்சி அதிகாரம் நமது ஜனநாயகத்தில் நீடித்திட இயலாது இதற்கும் பெரியாரும் அம்பேத்காரும் ஒரு வகையில் காரணமானவர்கள்.

நியாய விலைக்கு
நீதி
செத்தவனுக்கு
வாய்க்கு அரிசியும்
வாக்குப்போட பணமும்
இருக்கு
கழிப்பிட கட்டண
சலுகைக்கு கையோடு
மந்திரியின் லட்டர் பேடு
ஜனநாயகத்தில்
இதொல்லாம் சகஜம்.



காலம் இடறி விட்ட பயங்கரம்
கொலைக் களத்தின் பீடம்
புத்தம் சரணம்
கச்சம் சரணம்
சங்கம் சரணம் என்றே
கொல்லடா கொல்லடா தினம் தினம்
உயிர் தர்மம் ஊடகத் தர்மம்
புத்தனின் புது பலீ பீடம்
எரி கொள்ளையடி கொல்
புத்தனின் சரணம்
பீறிட்டெழெட்டும் ரத்தம்.
தாகம் பிச்சூகளுக்கு
ரத்தம் குடிக்க ஈ ழம் நேற்று
பர்மா மியான்மாராகி
இன்று
புத்தனின் சிரிப்பு
அணுகுண்டு சோதனைக்கு
வைத்த முதல் பெயர் சரி.

வசீகரிக்க வார்த்தைகளும் தேவை தான் வாழ்க்கை புனிதம் வசப்பட வேண்டும்.

தூரத்தில் வானம்
வந்து தொடு என்று
அ ழைக்கிறது-
அருகே ஓடுகிறது
ஆறு -
வா ..வந்து நீராடென
வற்புறுத்துகிறது-
காலம்
அதன் போக்கில்
நொடி கூட
தவணை தந்திட
மறுக்கிறது
தொடுவது கடினம்
நீராடிட முடியும்
காலமே
நீ
படைத்தவனிடமே
நானாகி இருக்கிறாய்
வீணாகியா பொழுதுகளுடன்
தனியாக உள்ளது நானில்லை
செலவான என் வயது
உந்தன் கவிக்குள் கண்டொடுத்தது இது.

மோசே கல்வியாளர். கவிதையாளர் - வழக்கறிஞரின் கர்நாடகம் பற்றிய கருத்தே கருத்தானது .

பாராட்டே பாராட்டு தந்துள்ளது. பாட்டெழுதுங்கள். ஆயிரம் பூக்கள் மலர அதில் ஈமான் வாசம் கமிழ வாழ்த்துகள்

கருணாவின் வார்த்தைகளில்
பஞ்சுமிட்டாய் இன்னும் கரையாமல்
மிச்சமிருக்கிறது-
பறித்தவர்களின் வஞ்சம்
பரிதவிப்போரின் நெஞ்சம்
பச்சை வெளியில்
காயாமல் இன்னமும்
ரத்த வாடை
சதையின் நாற்றம்
சாவு சகதியில்
நகரவும் நுகரவும்
முடியாமல் நாதியற்று
நீதியற்று
நல்ல சேதிக்கு
நம்பிக்கை தேதி
வரும்-
இருட்டுக்குரியவெளிச்சம்
அண்மையில்.

இயற்கையை அன்றாடும் கொள்ளையடிப்போரால் இழக்கும் வளத்தை இயல்பாக வடித்துள்ளீர். வாழ்த்துகள்

சுமைதாங்கி என்ற ப ழைய திரைப்படத்தில் எந்தன் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற பாடலை ஒரு முறை கேளூங்கள் உங்கள் கருத்துக்கு ஒரு புரிதல் கிடைக்காலாம்.

காதல் மோகத்தில்
நிழலைக் கூட இன்று
பரிசோதித்தாக வேண்டூம்
ஏனொனில்
நிஜங்கள்
துஷ்யந்தனின்
மோதிரத்தைக் கூட
பேஸ்புக்கில்
தானோ தமயந்ததிகள்
தேடுகீறார்கள்

தாலட்டுப் பாட நானாக நான் இல்லை மகளே தானாக கண்ணுறங்கு

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றறே ஒன்று.

பொய் பேச கிடைத்தத கைபேசி தட்டச்சில் எழுதுகோல் மூலம் பழக்கப்பட்ட.வனுக்குதட்டச்சுப் பழக அவகாசம் தேவைப்படுகிறது. பிழை பொறுக்க வேண்டுகிறேன்.

மாலை நேரம் மிகவும் மெதுவாக செல்ல- கடைகள் மூடிட தயாராகிட -
சூரியமறைவுக்கும் இரவுக்கும்
இடையில் வேறுபாடின்றி
குடித்து அடித்து
கெட்ட வார்த்தைகள் பேசியும்
நள்ளிரவுக்கு பின்னர் தள்ளாடியபடி
எவரும் எவரை பற்றியும் கவலைபடாமல் கண்களை தூக்கம் தழுவ -
நாய்கள் அருகில் உறங்க -
சாக்கடை நாற்றம்,
இதற்கிடையில்
கொசுக்களின் பசிக்கு, பெருச்சாளி ருசிக்கு விரலை தந்து-
கிழிந்த போர்வை ஒட்டைகளில் புகுந்து விளையாடிய எலிகளின்
சிரிப்பொலி -
காலையில் எழுந்திருக்கும் போது -ரஜினியும் கமலும் இரவு தூங்கவே விடவில்லை. நமியின் நடனமும் நயனின் முத்தமும் என்னையும்
தூங்க விடல -
இரவு சம்பவம் மறந்து
பேசி கொண்டார்கள்- ஆழ்ந்த தூக்கம்
அதில் கனவு -
அவர்கள் பேசியதன் அர்த்தம் ஆச்சிரியமானது -எனினும் வாழ்கின்றனர்-
தினசரி வாழ்க்கை தேவை தூக்கம்
அவர்களது ஒற்றுமை அவ்வளவு தான்- அழகான படுக்கையறையில்
தூக்கமுமில்லை - கனவுமில்லை ஏன் - ஒரே ஒரு இரவு சாலையோரத்தில் தூங்கினால் என்ன? அற்புதமான
சோதனைக்கு பின் மருத்துவர் வீட்டு கதவை தட்டுகிறார்.
தூக்கம் படுக்கை அறையில் இல்லை-
சம்பவங்களை மறக்க
மறுத்து வாழ்வு தான்


Kamuismail Ismail கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே