முபாரக்- கருத்துகள்
முபாரக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [23]
- யாதுமறியான் [17]
- hanisfathima [15]
நிறைய பேர் படிக்கிறார்கள், ஆனால் நீங்கள் இருவரும் மட்டும் தான் எனக்கு ஊக்குவிக்கும் விதமாக பேசுகிறீர்கள், மற்றவர்களுக்கு பிடிக்கவில்லையா என தெரியவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறது. எனக்கு சரியாக படிப்பவர் மனதை கட்டிப்போட தெரியவில்லையோ....???
மிக்க நன்றி. கண் முன்னே காட்சுகிகள் நடப்பது போல உணர வேண்டும்.அதனால் தான் ஒவ்வொரு இடம் பெயர் நேரம் ரயில் எண் முகவரி என்று அனைத்தையும் ஆராய்ந்தே எழுதுகிறேன்.கூகிள் மேப் உதவி கொண்டு இடங்கள் அங்கிருக்கும் சாலை மருத்துவமனை முக்கிய இடங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போகும் சாலை ரயில் விமானம் அதற்கான நேரம்.ஒவ்வொன்றும் துணையை பிரதிபலிக்க வேண்டும்
அடுத்தடுத்த பகுதிகளில் பாருங்கள். உங்களின் ஆர்வம் அதிகரிக்கும் வகையில் இருக்கும். இந்த காலத்தை ஒன்றோடொன்று கோர்க்க தான் எனக்கு 7 பகுதிகள் தேவைப்பட்டன. ஆனால் எனது நண்பனிடம் எனது கதைக்களத்தையும் கருவையும் சொன்னேன், அவன் தான் எப்படி வேகமாக காட்சிகளை நகர்த்தி ஆனால் சஸ்பென்ஸை குறையாமல் வைக்கவேண்டும் என்பதை சொன்னான். அவனது ஐடியா நன்றாக வேலை செய்கிறது. இன்னும் அதிக சஸ்பென்ஸ் தர முயல்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
எனக்கு இது முதல் தொடர் என்பதால் சற்று தடுமாறுகிறேன், எனது நண்பனிடம் தான் யோசனைகள் கேட்டு எழுதுகிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு கொலைகள் புரியும். கொலைகள் நடக்கும்போது அதை விசாரிக்கும்போது என்று உங்களுக்கு ஆவல் அதிகமாகும்.
சாரி ஜெயராம்.என்னால் இதைவிட அதிக வேகமாக கொற்கை முடியவில்லை. அடுத்ததுதா பகுதிகளில் காட்சிகளை வேகமாக மற்றும் மெருகேற்றி படிப்பவர்களை ஈர்க்கும் விதத்தில் எழுத முயல்கிறேன்.
முதலில் காட்சிகளை கோர்த்தபின் பாருங்கள். துப்பறியும் இடங்கள் உங்களை தூங்க விடாது. முக்கிய பாத்திரங்களை அடையாளப்படுத்தி இருக்கிறேன். இன்னும் வரும்.
ஆனால் உங்களின் ஆர்வத்தை ஏமாற்ற மாட்டேன் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு நபரையும் சரியாக கோர்த்து காட்சிகளை நகர்த்துவேன். எந்த தொய்வும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். உங்களின் ஆர்வம் எந்த பகுதியிலும் குறையாமல் கொண்டு செல்ல முயற்சி செய்கிறேன். என் தோழன் இதே எழுத்து தளத்தில் "என் உயிரினும் மேலான" என்ற தொடரை எழுதினான். அதில் காட்சிகளையும் பாத்திரங்களையும் சரியாக கோர்த்து ஏறக்குறைய 72 பகுதிகளாக எழுதினான். இப்போது அந்த கதையை யாரோ ஒரு உதவி ஒளிப்பதிவாளரிடம் கொடுத்திருப்பதாக கேள்வி. அந்த அளவுக்கு படிப்பவர்களை கதைக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறேன். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.
அது இனி க்ளைமாக்சில் தான் தெரியும்....
நன்றி. கண்டிப்பாக உங்களை ஒவ்வொரு பகுதியும் திகில் ஊட்டும் என்று நம்புகிறேன். அனைத்து மர்ம முடிச்சுகளும் மிக கச்சிதமாக திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு காட்சியும் கோர்வை சரியாக இருக்கும், அது மட்டும் அல்ல, வான்கூவர் நகரத்தையும் மாண்ட்ரியல் நகரத்தையும் உங்கள் கண் முன்னே கொண்டு வர முயற்சி செய்கிறேன். இடங்களுக்கும் பெயர்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் அது எப்படி மக்கள் மனதை ஆட்கொள்ளும் என்பதை சில கதைகள் மூலம் அறிந்துள்ளேன். அதுவே வெற்றியாகவும் அமையும்.
நீங்களே படித்தீர்கள் அல்லவா. இதை தமிழில் எப்படி நான் மொழி பெயர்த்து எழுதுவது. முயற்சி செய்கிறேன்.அடுத்த பகுதியில் இருந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் எழுதி பதிவேற்றுகிறேன்.
இப்போது முதல் பகுதியை ஆங்கிலத்தில் பதிவேற்றி இருக்கிறேன். இதை தமிழில் மொழி பெயர்த்து அடுத்த பதிவாய் போடுகிறேன். பின்பு ஆங்கிலத்தில் இரண்டாம் பதிவை போடுகிறேன். அப்படியே ஆங்கிலம் மற்றும் தமிழில் மாற்றி மாற்றி போடுவதாய் உள்ளேன்.
சரி தான். ஆனால் எனது கதையின் சூழல் வெளிநாட்டில் நடக்கும் நிகழ்வுகள்....ஆதலால் தான்....நானும் எனது தோழன் ஜெயராம் எழுதிய என் உயிரினும் மேலான என்ற கதை போல தமிழ்நாட்டில் நடப்பது போல சித்தரித்து எழுதினால் அந்த கதை போல நன்றாக அமையும். ஆனால் இது.....சரி...தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். அப்படி இல்லை என்றால் தமிழகத்தில் நடப்பதாக கதை களத்தை மாற்றிக்கொள்கிறேன்.
வா டா. உன்னை தொலைபேசியில் அழைத்தால் நீ எடுப்பதே இல்லை. வாட்சப்பில் கூட பதில் இல்லை. என்ன.....அவ்வளவு பிசியா........நடத்து டா. உன் அளவுக்கு மனதை உருக்குமாறு சென்டிமெண்டாக மக்கள் மனதை கட்டிப்போட என்னால் முடியாது. ஆனால் முயற்சி செய்கிறேன். நீ நிறைய எழுதி இருக்கிறாய். எனக்கு இது தான் முதல் முறை. ஆனால் மக்கள் வெறுப்படையாமல் பார்க்கிறேன்.
புரிகிறது, ஆனால் இது ஒரு துப்பறியும் கதை. "ஹாய் இட்ஸ் எ ஹார்ட் டே பார் மீ......" இவ்வாறு எழுதலாமா......இது தொடர்ச்சியாக வரும்போது சலிப்பு தட்டாதா?