தேவி ஹாசினி - கருத்துகள்

ஆமாம், வருமானத்திற்காக சொந்த பந்தங்களை விட்டு போனவர்களை நினைத்தால் வேதனையாக தான் இருக்கிறது. ஒரு நேர உணவோடு இங்கிருப்பவர்களுக்காக எங்கோயோ கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சகோதரர்களை நினைத்து எழுதினேன்

கருத்துக்கு நன்றி prakashjana


ஹையோ இது பயங்கர தத்துவமுங்க. பலரும் வாழும் போதே யோசிக்க வேண்டியது.

பிரியா , எப்ப இந்த ராகேஷ் பையன் பீச்சுல கயல் கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணினானோ அப்பவே நினைச்சேன். இப்படி ஏடாகூடமா ஏதாவது யோசிப்பான்னு. நம்ம புள்ள ரொம்ப நம்பறாலே அவனை. ஷீபாவ வேற திட்டிட்டா. காதல் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் மறைக்குதே. என்ன செய்ய?

சூப்பர். ரொம்ப ரொம்ப ரொம்பவும் சிரிச்சுட்டேன். குழந்தைகள் பேசும் அழகு. அவர்கள் பாசை. மிக அழகு.
இது போல்தான் என் பெண்ணும் பயங்கர லூட்டி. படிக்கும் போது சிரித்தேன். கிளம்ப நினைப்பது ஒரு டைம். நாம எல்லாம் முடிச்சு கிளப்பி போய் சேருவது கண்ண்டிப்பாக ஒரு டைமாக தான் இருக்கும். சூப்பர்.

என் நெருங்கிய தோழி உனக்கே என்னை கல்யாணம் பண்ணிக்க தோணல தானே பிறகு என்னை எவ காதலிக்க போறா? “ என்று ஒரு வெறுப்பில் சொல்லிவிட்டேன். கேட்டதும் நீ துடிதுடித்தாய்.

நீங்கள் விரும்பியிருந்தால் கூட மனது விட்டு சொல்லியிருக்கலாம். திருமணம் ஒருமுறைதானே. பிடித்தவரோடு நடந்தால் நன்றாயிருக்கும். நட்பும் காதலும் கடைசி வரை தொடர்ந்திருக்கும். இழந்த பின் என்ன செய்வது.? மனம் திறந்து பேசியிருந்தால் நல்லது நடந்திருக்குமோ.? நிறைய பேர் காதல் துளிர்த்தாலும் நட்பென்ற வட்டத்தை தாண்ட விரும்புவதில்லை. இதை படித்தபின் என் மனம் இப்படிதான் யோசித்தது. இது என்னுடைய கருது. தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.

கருத்துக்கு நன்றி

நிச்சயமாக உண்மையான நிகழ்வாக இருக்க கூடாது என்று நினைக்கிறேன் நண்பா. திருமணத்தின் போது நட்புகளை பிரியபோகிறோம் என்பதே பெரு வேதனையான விஷயம். மரணம் போல் எழுதி உள்ளீர்கள். இந்த வலிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.

உண்மை பெரியவர்களுக்கு கூட தோணாதது. என் சின்ன வயதில் ஒரு குட்டி பூனை வைத்திருந்தேன். திடிரென அந்த குட்டி பூனை இறந்து விட்டது. இது போல் தான் குழி தோண்டி புதைத்து விட்டு அழுது கொண்டே இருந்தேன் பக்கத்தில் உக்கார்ந்து. அந்த ஞாபகம் வந்து விட்டது.


தேவி ஹாசினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே