ஆகார்த்திகேயன்- கருத்துகள்

நினைத்து பார்த்தால் நேரம் போதாது உண்மையான தாயின் பாசம் அவளின் நேசம் இவர்கள் இல்லாமல் இயங்காது தேசம்
ஆ.கார்த்திக்

பாசப்பிரிவு
தந்தையே தந்தையே
தவமாய் ஈன்ற தந்தையே !!

உறவினில் உயர்ந்தவர் நீதானே
என் உயிரினில் கலந்தவர் நீதானே !!

அப்ப நீ எப்போதும் என்னோடு வேண்டும்
நீ பாதி நான் பாதி நிலை தானே வேண்டும் !!

ஒரு விழியாய் தாயாக
மறு விழியாய் நீயாக இருந்தாய் !!


நான் வாழும் பாதையை அமைத்துவிட்டாய்
ஆனால் நீ போகும் பாதையைய் மறைத்துவிட்டாய் !!

அலைபோல உழைத்தாய்
மலைபோல வளர்த்தாய்!!
இப்போ சிலைபோல படுத்துவிட்டாய் அப்பா!!

தாயும் தவிக்க என்மனம் துடிக்க
விதியால் எம்மை பிரிந்துவிட்டாய்
உன் விழிகளை ஏனோ மறந்து விட்டாய் அப்பா!!

ஏழு ஏழு ஜென்மம் நீ வேண்டுமே
எப்போதும் உன் மகனாக வரம் வேண்டுமே !!

கடமை முடிந்ததென உன் கண்களை மூடி விட்டாய்
என் கனவுகள் நிறைவேற உன் காயத்தை மறைத்து விட்டாய் !!

உறவும் இங்கு கதறுதே
உனை கண்டு என்மனம் உருகுதே !!

வறுமையில் என்னை வளர்த்தாய்
வளரும் வரை என்னை காத்தாய்
வாழ்வை அமைத்து கொடுத்தாய் அப்பா !!

உன் பார்வை என் மீது படாத
உன் பாசம் எனக்கு தொடராதா !!

வசதியா வளர்ந்தும்
வாழ்வினில் உயர்ந்தும் !!

உனக்கென ஏதும் சேய்யவில்லை
உனக்கு மகனாக பிறந்தும் பயனில்லை !!

தனியாக விட்டு போகாதே
உன் பிரிவு எனக்கு தாங்காதே!! அப்பா !!அப்பா!

படிக்க பிடிக்க தக்க வரிகள் ..ரசனையும் யோசனையும் கலந்த வரிகள் வாழ்த்துக்கள்

நண்பர்களே மனித இனமே அழிந்தது அதை விடவா ...



மண்ணோடு மண்ணாக புதைத்தார்கள்
மானத்தை ருசித்து கெடுத்தார்கள்


அன்பு நண்பரே உங்கள் வாழ்த்தை வரவேற்கிறேன்

வலி மட்டுமே வாழ்க்கை என என்ன வேண்டாம் ...
வயது மாறும் போது நம் வாழ்க்கை மாறதா என்ன ..

நன்றி நட்புக்கு

இருவர் பார்வையல் வந்த கோர்வைதான் காதல்
அந்த கோர்வையில் வந்த கீறல் தான் மோதல் ..

தலைப்பில் கவனம் மறந்தேன் ..மாற்றியமைதுவிட்டேன், நன்றி

உறவுக்கும் வரவுக்கும் நன்றி ....

இறுதி வரி மட்டும் கொஞ்சம்மாற்றி அமைத்தால் நேசமாகும் ..

உன்னை உணர்தால் உழைத்திடு
உன்னை மறந்தால் விலகிடு !

முயற்சி என்பது மனிதனிடம்
முடிவு என்பது இறைவனிடம் !

மௌனமாய் இருப்பவன் மனிதன்
மனிதாபிமானத்தோடு நடப்பவன் புனிதன் !

சக்தி உள்ளவன் சாதிப்பான்
புத்தி உள்ளவன் போதிபான் !!!!!!படரும்....

உன் வரிகளுக்கு வாழ்த்துகள் ......தொடர என்றும் .....gk


ஆகார்த்திகேயன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே