முத்துக்குமார் (நாதமாரா)- கருத்துகள்

நன்று நண்பரே . என் தோழரின் கவிதை . பார்வைக்காகப் பதிந்தேன் .

அனைவருக்கும் நன்றி. காலம் ஒரு நாள் மாறும் கவிதைகள் தளத்தில் ஏறும் என்றே நம்பிக்கை கொள்வோம் . எங்கே நடக்கும் , எது நடக்கும் என்பதை இங்கே யாரறிவார் ? மீண்டும் நன்றிகளுடன் .

நீங்கள் சொல்வது சரியாகப் படுகிறது . தளம் சரியான வழிமுறைகளை பார்த்துகொள்ளும் என்ற உறுதியில் நாம் படைப்பை மட்டும் பார்ப்போம். நன்றி தோழரே . பரிசுகள் எப்போதும் புத்தகத்தோடு நிற்கட்டும் என்பது என் வேண்டுகோள் . நான் சும்மா சொல்லவில்லை !! நன்றி தோழரே .

நல்ல படைப்பு. நறுக்கென்று கேள்வி பதில்களில் . உண்மையும் கூட . இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம் மனப்பான்மை விரிவதற்கு. எதிர்பாலர் நட்பு எப்போதுமே கொஞ்சம் நாசூக்காகக் கையாளப் படவேண்டியது தான் . இது தான் எதார்த்தம் .

உங்கள் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி . உங்கள் கவிதை , கட்டுரைகளை படித்து வருகின்றேன் . நான் மிகவும் ரசிப்பது உங்கள் வெளிப்படையான , எதார்த்தமான , மகிழ்ச்சி பொங்கும் கருத்துக்களை . இப்போது சொல்ல வாய்ப்பு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு கவிதைகள் மொழி பெயர்ப்பு எளிதாக உள்ளது . பரிசு பெற்ற கட்டுரை ஒன்றை மொழி பெயர்க்க முயன்று தோற்றுப் போனேன் . நீங்கள் அதை சிறப்பாகச் செய்ய முடியும் . உங்களுடைய ஆர்வம் அனைவரும் உள் வாங்கிக் கொள்ளவேண்டிய அற்புத குணம் . நன்றியும் வாழ்த்துக்களும் .

வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே .

அழகிய வரிகள் . அருமைச் சந்தம் . பரிசுக்கு வாழ்த்துக்கள் .

இந்த படம் பார்த்தவுடன் எனக்கு பொன்னியின் செல்வன் கதை மீண்டும் கல்கி இதழில் அடுத்த மாதத்தில் இருந்து தொடராக வருகின்ற செய்தி நினைவில் வருகிறது . அற்புதமான கதையும் சிறப்பான படங்களும் வரப் பிரசாதம் . தோழர்கள் அனைவரின் கவனத்திற்கு .

சிறப்பான கவிதை தோழரே . பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

மிக அற்புதமான கவிதை . அப்போதே படித்து , தேர்வு செய்தேன் . பாராட்ட எப்படி மறந்து போனேன் ? மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

கற்றவைகள் துணையில்
கசடுகள் பற்றவை
மற்றவை விட்டு வை .

கவிதையின் சாரம் கடைசி வரிகளில் . பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

உற்றவை தேர்ந்து
அற்றவை விலக்கு.
அருமையான நேர்மறை எண்ணங்கள் . பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

உங்கள் கருத்துக்கள் சிறப்பானவை . அதை வெளியிடும் பாங்கு என்னை வியக்க வைக்கிறது . ஒரு சிறு யோசனை அகன் தோழருக்கு குறித்த கருத்தில் குறிப்பிட்டுள்ளேன் . நீங்களும் பார்த்துக் கொள்கிறீர்களா ? நன்றிகள் .

தோழர் கலை அளித்த கருத்துக்களில் உடன்படுகின்றேன் நண்பரே . ஒரு சிறு யோசனை." பரிசு தவிர்க்கவும் " என்ற குறிப்புடன் போட்டிப் படைப்புக்கள் பதியும் வாய்ப்பைத் தரலாம் . விருப்பமுள்ள படைப்பாளிகள் இந்தக் குறிப்புடன் போட்டியில் கலந்து கொள்ளலாம் . அதில் சிறந்தது என்று நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்களை ஒரு பாராட்டுடன் குறிப்பிடலாம் . இந்த முறையில் அதிக தோழர்கள் பரிசு பெற்று ஆர்வத்துடன் பங்கு கொள்ளும் வாய்ப்பு அதிகமாகும் . கருத்தில் கொள்ளுங்கள் . நன்றி .


முத்துக்குமார் (நாதமாரா) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே