s.sankusubramanian- கருத்துகள்

நன்றி தோழரே முஹமத் சர்பான் அவர்களே

நன்றி தோழரே முஹமத் சர்பான் அவர்களே.

நன்றி தோழரே ஜின்னா அவர்களே.

நன்றி தோழரே தாங்கள் தமிழில் சொன்னால் தெளிவு பெறுவேன்

கடவுளின் பெயரால் கல்லாக் கட்டும் மனிதர்களை விட கல்லாக் கட்ட வைக்கும் மனிதர்கள் தான் ஏராளம். கடவுள் இருக்கிறார் என்பதை அவரவர் மனதைத் திறந்துப் பார்த்தாலேப் போதும். நிம்மதி என்ற கல்லாக் கட்டும். இதை உணராத சிலர் போலி சாமியார்களிடம் காசுக் கட்டி கடவுளை காணவேண்டும் என்ற மடமையைத் தான் நீக்க வேண்டும். இதை ஒரு நாளும் நீக்க முடியாது. கல்லாக் கட்டும் போலி சாமியார்களும் மாறமாட்டார்கள். மெய்ப் பொருள் காண்பது அறிவு என்பது கண்ணால் கண்டதைக் காண்பது அறிவல்ல.கண்ணால் காண்பதெல்லாம் பொய்யின் பொருள் அறிந்துக் காண்பதாகும் என்பதே எனது கருத்து.- சு. சங்கு சுப்ரமணியன்.

என் மீது அன்பு உள்ளம் கொண்டிட்ட இணைய தள தோழர்களுக்கு என் முடிவினை மாற்றிக் கொள்கின்றேன்.உங்களது நினைவுகள் உள்ளவரை இனி நான் எழுதி கொண்டே இருப்பேன். மன வேதனையை திசை திருப்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி ............நன்றி..............நன்றி.................தொடர்கிறேன். ............சு.சங்கு சுப்ரமணியன்.

எனது படைப்பு ஒன்றில் ஒரு தோழர் எழுத்துப் பிழை உள்ளது. அதனை திருத்தம் செய்யுங்கள் என்று மேல்கோள் காட்டினார். அந்த படைப்பில் வடமொழி எழுத்தினைப் பயன்படுத்தினால் மட்டுமே வாசகர்களுக்கு எளிதில் புரியும். ஆனால் அந்த படைப்பில் தூய தமிழ் மொழி பயன்படுத்தியதால் அந்த வார்த்தை பிழையாக வாசகருக்கு தென்பட்டுள்ளது. உதாரணத்திருக்கு "ஜெனனம்" என்ற சொல் "செனனம்" என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. விழாக்குழு மேல்கோள் காட்டியவாறு சில தவறுகள் வாசகர்களிடம் தன்னையும் அறியாமல் வந்து விடுகின்றன. இருப்பினும் அந்த வாசகர் தனது படைப்பில் உள்ள தவறுகளை கண்டறிந்தால் தமிழின் உன்னத மாண்பினை தொடர்ந்து அவர் பின்பற்றவும் வழி வகை உள்ளது. மொழிகளில் சிறப்பான தமிழ் மொழி சில வேளைகளில் கலப்பு மொழிகளையும் ஏற்றுக் கொண்டாலும் தமிழ் மொழியால் அந்த கலப்பு மொழிகளுக்கும் அந்தஸ்து வந்துவிடும் என்பதே எனது அபிப்பிராயம். எனவே தமிழ் மொழியுடன் பிற கலப்பு மொழிகளும் கலந்துவிடுவதால் தமிழ் மொழிக்கு என்றுமே இழுக்கு ஏற்படுவதில்லை. "ழ"கரத்தை உச்சரிக்கத் தெரியாதவர்கள் "ல" அல்லது "ள" கரத்தை உச்சரித்து தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்கின்றவர்களைக் காட்டிலும், ஒரு சில தவறுகளை தன்னையும் அறியாமல் எழுதுகின்ற வாசகர்கள் எவ்வளவோ மேல் என்பதும் எனது அபிப்பிராயம். இருந்தாலும் இனி வருங்காலத்தில் பிழைகளை திருத்திக்கொள்ள கருத்து நல்கிய விழாக்குழுவிர்க்கு மிக மிக நன்றி. - சு. சங்கு சுப்ரமணியன்.

அருமைத் தோழரே. உங்கள் கவிதை. மழலைகள் மூலம் சாதி ஒழிப்பை படம் போட்டுக் கவிதை எழுதி உள்ளீர்கள். மனிதன் மனிதனாக மாறி விடுவான் என்ற நம்பிக்கை உங்கள் கவிதையில் தெரிகிறது. சு. சங்கு சுப்ரமணியன்.

காதலின் புனிதத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். உடலுறவுக் கொண்டால்தான் காதலா? உள்ளத்தில் ஒருத்திக்கே இடம் கொடுத்து, பாராமுகமாய் இருந்தாலும் புறநானூறுக் காதலல்லவா. உங்களின் காதல் கவிதை ஒரு புறநானூறு ஆகும் தோழியே. சு. சங்கு சுப்ரமணியன்.

அருமைத் தோழி ஷ்யாமளா ராஜசேகர் அவர்களே பாக்களின் வழியே சாதி ஒழிய அறிவுரை வழங்கி உள்ளீர்கள். ஏற்கின்றேன். சாதி ஒழியவும் மனித நேயம் சிறக்கவும் உங்கள் கவிதை ஒரு பாடமாக அமையலாம். படிப்பில் நன்குத் தேர்ந்தவர்தான் அனுபவசாலி. அதைப் போல் மனித நேயத்தை கடைப் பிடிப்பவர்கள்தான் சாதியை ஏற்க மறுப்பார்கள். நான் மனித நேயம் மிக்கவன் என்பதால் என்னைப் போல் எத்தனையோ வாசகர்கள் உங்கள் கவிதையைப் படித்தப் பின்பாவது தங்களை சாதியில் இருந்து விலகிக் கொள்ளட்டும். வெற்றிப் பெற மனமார வாழ்த்துகிறேன். - சு. சங்கு சுப்ரமணியன்.

கவிதை அருமை நண்பரே - சு. சங்கு சுப்ரமணியன். மற்றும் ச.சந்திரமௌலி

திருப்பதி பெருமாளை சேவிக்க முடியவில்லையே என்று ஏக்கத்தில் இருந்துக் கொண்டிருக்கின்ற எனக்கு இணையதளம் அலங்காரம் சூடிய பெருமாளைப் பார் என்று மனக் கவலையை தீர்த்துள்ளது. நன்றி.-
சு. சங்கு சுப்ரமணியன்


s.sankusubramanian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே