M Kailas - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  M Kailas
இடம்:  madurai
பிறந்த தேதி :  04-Nov-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jun-2013
பார்த்தவர்கள்:  203
புள்ளி:  151

என்னைப் பற்றி...

கவிதை படிப்பதும் எழுதுவதும் என் வழக்கம்

என் படைப்புகள்
M Kailas செய்திகள்
M Kailas - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2017 11:12 pm

ஒரு பெண்ணின் மீது
தாவணி கட்டும் காலத்தில்
ஒரு ஆணுக்கு
ஏற்பட்ட காதல் --- ---

அவள் அவனுக்கு
இல்லாள் ஆனபின்
பாரம்பரிய புடவை கட்டும்போதும்,
நாகரீக சுடிதார் அணியும்போதும்
செல்லமாய் முறைக்கும்போதும்
கோபமாயே முறைக்கும்போதும்
மௌன மொழி பேசும்போதும்
மடை திறந்து பேசும்போதும்
தாளங்கள் சேர்ந்தொலிக்க
ராகங்கள் பாடும்போதும்
இயற்கை அழகானாலும்
ஒப்பனை அழகானாலும்
விரையும் வயதுடன்
மறையும் அழகானாலும் --- --- y

மாறாத காதலாக
சீராக வாழ்ந்து வந்தால் ----

மெய்யான காதல் என்பது
அதுதானே! அதுதானே!

ஆக --
காதல் என்பது
கண்டதும் வருவதல்ல!
கண நேர நிகழ்வுமல்ல!
ஒரு வாழ்க்கை

மேலும்

M Kailas - Sarah14 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2017 9:19 pm

உன் சிரிப்பில் பல மலர்களை
பார்த்தேன்.

உன் கண்ணில் பல நட்சத்திரம்
பார்த்தேன்.

உன் அழகில் அந்த தேவதை
பார்த்தேன்.

உன் நடையில் அந்த வானவில்
பார்த்தேன்.

உன் மொழியில் பல கவிதை
பார்த்தேன்.

உன் மனதில் ஒரு குழந்தை
பார்த்தேன்.

அன்பே ஆனால்,
உன் மௌனம் பேசும் மொழி,
புரியாமல்
திகைக்கிறேன்!!!!

மேலும்

நன்று! 20-Jan-2017 10:20 pm
M Kailas - sabivst அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2017 7:53 am

சத்தம் போடுவேம் இனிமையான குரலில்
என்ஜின் இல்ல இரயில்பெட்டிகள் நாம்
வண்ணங்கள் பல வண்ணமே
நாமக்கு ஒரே வண்ணமே

தூங்க கண்கள் நாம் காதுகள்
நடையிலும் துணை கோல் கொண்டே நடப்போம்
தொட்டு தொட்டு படிப்போம் புத்தகம்

உருவம் பார்க்க காதலும் தோன்றும் நாம் இடையே
மனம் விட்டு மனமும் மாறிக்கொள்ளும்

நாம் நிழலை பார்க்க முடியாதே
என் நிழல் நீ உன் நிழல் நான் என
இணைந்தே இருப்போம் வாழ்வின் விடை தேடி ......

நான்குபுலன்கள் தான் எங்கள் தோற்றம்
விண்வெளியும் புல்வெளியும் ஒன்றே என தோன்றும்
அன்பு மட்டுமே குறிக்கோளை கொண்டு வாழ்க்கை நகரும் ....

இருள் இமை

மேலும்

"தொடு உணர்வாலே ஒரு உலகை படைப்போம் அதில் ஆவது ஐம்புலம் கொண்ட ஜீவனை படைப்போம் ஓரிறை அருளை கொண்டு ." ---- நல்ல சங்கற்பம்! வரவேற்போம்! "நாம் நிழலை பார்க்க முடியாதே என் நிழல் நீ உன் நிழல் நான் என இணைந்தே இருப்போம் வாழ்வின் விடை தேடி ...... " --- மனிதனோடு கூட வருவதால் நிழலுக்குத் தான் என்றும் பெருமை! நான்கு புலன்கள் மட்டும் உள்ள இருவர் ஒருவர்க்கு மற்றொருவர் பரஸ்பரம் நிழலாக இருக்க வைராக்கியம் எடுப்பது என்பது அந்த இருவரும் பெருமைப் பட வேண்டிய ஒரு விஷயம்! உலகம் படைக்க பிறந்த இவர்கள் உலகில் உள்ள மற்றவர்களுக்கும் நிழலாக இருந்து துணை புரிவார்கள்! இறை அருள் இவர்களுக்கு உண்டு! 20-Jan-2017 12:53 pm
M Kailas - Manju S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2013 2:00 pm

விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பாதை காண்பதை விட்டு,
பெண்ணின்
விழிகளுக்கும்
இதழ்களுக்கும்
பாதையை தேடுகிராயே !!!
வெல்லுமா பாரதம் ???

மேலும்

ஆம்! ஒவ்வொரு இளைஞனும் தன் சுபாவத்திற்கேற்ற,அதே சமயம் உலகத்துக்கு உபயோகமான இலக்கு ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் தன் சக்தியை குவித்து செயல்படும்போது, மனித இனத்துக்கு பலன் தரும் பலவிதமான பாதைகள் உருவாகும்! 20-Jan-2017 12:31 pm
நல்ல கேள்வி ! 15-Feb-2013 4:33 pm
M Kailas - Manju S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2013 1:38 pm

நட்பு !!
=======
புத்தக சுமை
சுமந்து வந்து ,
பாட சுமை
படித்து முடித்து,
நட்புச்சுமை
சுமந்து செல்கிறோம்...

வாழ்க்கை பாதையில்,
நட்புச்சுமை
பாரமற்ற பாரமாய் ......

மேலும்

சுகமான சுமையை வித்தியாசப் படுத்தி காட்டி விட்டீர்கள்! நன்று! 19-Jan-2017 10:59 pm
ஆம்!!!சுகமான சுமை தான் நட்பு 27-Mar-2013 4:29 pm
மிகவும் அருமையான அன்பான சுமை ! வாழ்த்துக்கள் ! 27-Mar-2013 10:28 am
மிக்க நன்றி :) 05-Mar-2013 4:40 pm
M Kailas - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 11:32 pm

குலதெய்வம் கோயில் செல்கிறோம் இன்று!
புடவை கட்டி வா என்றே சொன்னேன்!
மௌன முகத்துடன் அழகாய் சிரித்தாய்!

கோடை உலாவாக நான்கு நாள் செல்கிறோம்!
சுடிதார் பெட்டியில் அடுக்கி வா என்றேன்!
மௌன முகத்துடன் அழகாய் சிரித்தாய்!

சீண்டிப் பார்க்க வேண்டும் என்று!
நகைச்சுவையாக ஏதோ சொன்னேன்!
மௌன முகத்துடன் செல்லமாய் முறைத்தாய்!

இத்தனை அழகாய் இருக்கிறாயே!
அழகின் ரகசியம் என்னென்று கேட்டேன்!
மௌனச் சிரிப்பை பதிலாய் தந்தாய்!

பிறந்த நாள் வாழ்த்தை பரிசுடன் தந்தேன்!
காதல் விழியுடன் மௌனமாய் சிரித்தாய்!
அழகிய விழிகளில் மொழி பல பேசினாய்!

உன்னிடம் எனக்கு காதல் வந்தது
எதனால் காதல்? எதனால் வந்தது?

மேலும்

M Kailas - Dileepan Pa அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

வாசகர்களுக்கு வணக்கம்,

இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் டிசம்பர் - ஜனவரியில் கதைகளுக்கான இந்த சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனை கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையை பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என அநேகமாக எதுவுமில்லை. ஆம். இது கதை சூழ் உலகு. கதைகளாலேயே இவ்வுலகம் சுழல்கிறது.

இன்று நாம் வாழ்வது நாளை இ

மேலும்

இந்த கதை போட்டிக்கு இனிமேல் படைப்பை சமர்பிக்க இயலுமா தோழரே... 03-Jan-2017 4:08 pm
சிறுகதையில் மின்னஞ்சல் முகவரியை இணைக்க முடியாது ,இணைப்பது எழுத்து விதிகளுக்கு புறம்பானதாகும் ,ஆதலால் என்னுடைய செல்பேசி என்னை இணைத்துள்ளான் ,மின்னஞ்சலை உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் .. 14-Dec-2016 12:38 pm
திலீபன் பா அவர்களே!, கதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். 10-Dec-2016 10:19 pm
நாங்கள் எழுதும் கதைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டும் தான் அனுப்ப வேண்டுமா எழுதும் கதைகளை இங்கேயே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாமா 28-Nov-2016 10:47 pm
M Kailas - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2016 6:27 pm

கதை தலைப்பு ---இறந்த பின்னும் வாழ்வோம்!

மாரிமுத்து பளையமேட்டுக்குடிபட்டியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். தூரத்தில் ரயில் தண்டவாளம் தெரிந்தது. அதைத் தாண்டி இன்னும் தூரம் போக வேண்டும். அவன் மனதை சிந்தனைகள் ஆதிக்கம் செய்துகொண்டிருந்தன. அவன் சிறையிலிருந்து விடுதலை ஆகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஆண்டுகள் கடந்தும் நடந்த சம்பவத்தின் வலி இன்னும் குறையவில்லை. தான் அப்படி செய்திருக்க வேண்டாம்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் குடியிலே பணத்தை வீண் செய்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் பழக்கம் இரு

மேலும்

M Kailas - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 3:41 pm

அன்று அவன் அன்புடன் அழைத்தான்
தன் வாழ்க்கை துணைவியை
"வா! அரசுப் பதிவேட்டில்
உன் பெயரை
மாற்றம் செய்து வருவோம்!"

என்றும் காட்டும் புன்னகையுடன்
" என்ன மாற்றம்? ஏன் மாற்றம்?"
எனக் கேட்டாள் புல்லம்மாள்!
"வா தனலட்சுமி நேரமாகிறது;
பிறகு சொல்கிறேன்"
கையை இழுத்தான்:
"தனலட்சுமியா நான்?"
ஆச்சரிய புன்னகையுடன்
அவனுடன் சென்றாள்!

செல்லும் வழியெல்லாம்
அவன் சிந்தனை முகத்தில்
மட்டற்ற மகிழ்ச்சி கண்டாள்!
அந்த மகிழ்ச்சி அவள் முகத்திலும்
உடனடி மலர்ச்சி சேர்த்தது!
அது கண்டு புரிந்து கொண்ட
அவன் முகம்
இன்னும் மலர்ந்தது!
" பெயர் மாற்றத்தில் ஏன்
இந்த மனிதருக்கு
இத்தனை மகிழ்ச்சி?

மேலும்

M Kailas - sandhanakumar அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2016 10:56 am

படித்தலின் முக்கியத்துவம் என்ன பள்ளியில் கடவுள் வழிபாட்டின் பொது கூற வேண்டிய தகவல் படித்தலின் முக்கியத்துவம்

மேலும்

படிப்பின் மூலம் அறிவையும் திறமைகளையும் நன்கு வளர்த்துக் கொள்ளும் ஒரு மாணவன் எதிர்காலத்தில் அவற்றை பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்தி மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம். தன் தேச மக்களுக்கு மட்டும் இன்றி வெளி நாட்டு மக்களுக்கும் பயன்படுத்தி மனித இனத்தின் மதிப்பில் உயரலாம். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பின் எதற்காக சொன்னார்கள்? அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான் என்ற பொன்மொழி பின் ஏன் வந்தது? கல்வியின் பலன் பொருள் ஈட்டுவது மட்டும் அல்ல; மனித இன மேம்பாட்டுக்காக பாடுபடுவதும்தான். கல்வி கற்பவன் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வான்; ஏனெனில் வளரும் பருவத்தில், பள்ளிக் கல்வியில் அது அதிகம் வலியுறுத்தப் படுகிறது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டால் வேலைக்கு செல்லும் காலங்களில், அதர்மமாய் பொருள் ஈட்டுவதை தவிர்ப்பான். லஞ்சமும் ஊழலும் நாட்டில் குறையும். 07-Feb-2016 10:15 pm
M Kailas - M Kailas அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2016 10:21 pm

எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 05 ----தலைப்பு -- பொங்கல் பாடல்கள்---அவை புதையல் பேழைகள் 

 
தமிழ் மண்ணின் பொங்கல் பாடல்கள் கேட்போரை  ஈர்க்கும் அழகைக் கொண்டவை என்று சொன்னால் போதாது; 

மண்ணின் மணம் கமழும் பாடல்கள் என்று பாராட்டினாலுமே போதாது.

அவற்றை புதையல் பேழை என்றே போற்ற வேண்டும். ஏனெனில்,அப்பாடல்களில் கலைத் தன்மையும் கல்வித் திறனும் வெளிப்படுகின்றன. காரணம், தமிழர்களின் கடந்த கால சரித்திரம் மிகப் பெரிது; தமிழர்களை சிறந்த கல்வி வம்சத்தினர் என்றும் சொல்லலாம். 

தமிழரின் பொங்கல் பாடல்கள்..... ஆகா! ..... எத்தனை கருக்களில் படைக்கப் பட்டிருக்கின்றன!
காதல்,நேசம்,வீரம், செல்வம், ஏழ்மை,புராணக் கதைகள், பொங்கல் விழாவோடு சம்பந்தப்பட்ட  வீரர்கள்,தலைவர்கள் பற்றிய தகவல்கள், கற்பனைக் கதைகள்;  இது  மட்டுமா? இன்னும் எத்தனை கருக்கள்? எதை சொல்லாமல் விட முடியும்? இன்று ஆங்கில மொழி வழி கல்வி கற்று கணணி மூலமாகவும், அலைபேசி இணையதளம் வழியாகவும் மேற்கத்திய இசைப் பாடல்களை மட்டுமே கேட்கும் வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்களை எப்படி இந்த இனிய பாடல்களை கேட்க வைப்பது? வழி இருக்கிறது. அந்த இளைஞர்கள் வழியிலேயே சென்று அவர்களை இப்பாடல்களை ரசிக்க வைக்க யூட்யூப் போன்ற வலைத்தளங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஈர்க்கலாம். அவர்களிடம் ஆர்வத்தை வெற்றிகரமாக ஊட்டி விட்டால், பின் அவர்கள் மூலமாகவே அவற்றை விருத்தியும் செய்து விடலாம்.அவர்கள் மூலமாகவே இப்பாடல்களின் புகழை பரப்பவும் செய்யலாம்; அவர்கள்தான் பலர் மென்பொருள் வல்லுனர்களாய் இருக்கிறார்களே! பின் நமக்கென்ன கவலை?

திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்ப வேண்டும். 
தமிழர் பண்டிகைகள் பற்றிய தகவல்களையும் பரப்ப வேண்டும்! 
இசை என்னும் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் அவை பயணிக்கட்டும்! 


மேலும்

M Kailas - Sureshraja J அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் ...
1) சிறுநாடார்குடியிருப்பு
2) உடன்குடி
3) குலசேகரபட்டினம்
4) மணப்பாடு
5) படுக்கபத்து
6) திசையன்விளை
7) பேய்குளம்
8) பெருமாள்குளம்
9) நயினார்பத்து
10) கீரைகாரன்தட்டு

நீங்கள் கூகிள் மற்றும் விக்கிபீடியா மூலம் ஊர்களை தேடி பதிவு செய்யவும்

மேலும்

முற்றிலும் உண்மை 14-Jul-2016 11:08 pm
Dear friend Mr Mohamed Sarfan, தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுத்த உற்சாகம்தான் பரிசை வெல்லும் முயற்சியை ஊக்குவித்தது! தங்கள் வாழ்த்தை இப்போதுதான் கவனித்தேன். தாமத பதிலுக்கு மன்னிக்கவும். 19-Dec-2015 12:05 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும் சிறுநாடார்குடியிருப்பு ,உடன்குடி மற்றும் குலசேகரபட்டினம் (Aasish Vijay) இரண்டாம் பரிசு ரூபாய் 500 மட்டும் 2 தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும் உடன்குடி (Anuthamizhsuya) முதல் பரிசு 3 தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும் திசையன்விளை திரு எம் ஜி முத்து (M Kailas) மூன் 11-Dec-2015 4:10 pm
வெற்றி பெற்றவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 10-Dec-2015 7:03 am
மேலும்...
கருத்துகள்
மேலே