கேஅசோகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கேஅசோகன் |
இடம் | : திருவள்ளுர்(தற்பொழுது மு |
பிறந்த தேதி | : 13-Dec-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 1242 |
புள்ளி | : 745 |
அரசு பணி (ஓய்வு) . கவிதை மற்றும் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. தற்போது, தங்களது எழுத்தில் இடம்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது தற்காலிகமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளயத்தில் குடியமர்ந்துள்ளேன். மேலும், என்னுடைய சிறுகதைகளை ”அம்மா” என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன் அண்மையில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற உலகளாவிய சிறுகதை நூற்றாண்டு விழா 2017 - 13 -12 -2017 அன்று சிறப்பாக நடைபெற்று அவ்விழாவில் எனக்கு ”சிந்தனை சிகரம்” விருது, பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் குன்றக்குடி அவர்களின் திருக்கரங்களால் பெற்றேன் என்பதை இவ்வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமைக் கொள்கிறேன்rnrn
அலைபேசியின் அழைப்பின் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் சுஜாவின் அழகான கன்னங்களில் வழிந்தோடியது.
துடைத்து கொண்டவாறே ”சொல்லுங்க ”டைரக்டர் ஸார் !”
”மிஸ் சுஜா! நான் பன்ற படத்துல நீங்கதான் உறீரோயின். ஒங்க கேரக்டர் பத்தி ஸ்டோரி டிஸ்கஸன் இருக்கு ஓட்டல் கவிதாவுக்கு வந்துடுங்க”
”மிஸ் சுஜா! நீங்க சினிமா பீல்டுல வர்றதுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க! என்ன மாதிரியெல்லாம் அட்ஜஸ்ட் செய்தீங்க இத சொல்றதுதான் ஒங்க கேரக்டர் ஓ.கே-வா?”
”ஓ.கே ஸார்! எனக்கு துணைநடிகையான எனக்கு உறீரோயினா சான்ஸ் கொடுத்த தற்கு நன்றி சார்”
”ஏம்மா சுஜா ரிகல்சலுக்கு ஸ்டார் ஸ்டுடியோவுக்கு வந்துடும்மா..கம்பெ
அலைபேசியின் அழைப்பின் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் சுஜாவின் அழகான கன்னங்களில் வழிந்தோடியது.
துடைத்து கொண்டவாறே ”சொல்லுங்க ”டைரக்டர் ஸார் !”
”மிஸ் சுஜா! நான் பன்ற படத்துல நீங்கதான் உறீரோயின். ஒங்க கேரக்டர் பத்தி ஸ்டோரி டிஸ்கஸன் இருக்கு ஓட்டல் கவிதாவுக்கு வந்துடுங்க”
”மிஸ் சுஜா! நீங்க சினிமா பீல்டுல வர்றதுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க! என்ன மாதிரியெல்லாம் அட்ஜஸ்ட் செய்தீங்க இத சொல்றதுதான் ஒங்க கேரக்டர் ஓ.கே-வா?”
”ஓ.கே ஸார்! எனக்கு துணைநடிகையான எனக்கு உறீரோயினா சான்ஸ் கொடுத்த தற்கு நன்றி சார்”
”ஏம்மா சுஜா ரிகல்சலுக்கு ஸ்டார் ஸ்டுடியோவுக்கு வந்துடும்மா..கம்பெ
எழுத்து தள வாசக அன்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும்,
ராசா ராணி
வெறிச்சோடிக் கிடக்கிறது
வெள்ளைச்சாமித் தாத்தா வீட்டுத் திண்ணை
இன்று பெளர்ணமி வெளிச்சம்
இருந்த போதும் வெறிச்சோடிக் கிடக்கிறது
எங்கே போனார்கள் எங்கள் சிறுவர்கள்
எங்கள் ஆரம்பப் பள்ளி நாட்களில்
நான்கடி அகலமும் ஏழடி நீளமுமான
அந்தத் திண்ணைதான்
எங்களின் ராசாங்க மேடை
திண்ணையின் கிழக்கு ஓரத்தில்
தலைவைத்துத் தூங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த
திண்டுதான் ராசாவுக்கான அரியணை
எங்கள் ராசா ராணி விளையாட்டில்
எப்போதும் வாத்தியார் மகன்தான் ராசா
ஆம்! கிழியாத சட்டை
போட்டவன்தானே ராசாவாகலாம்.
அவனின் ஆணைகளின் படி
ராணி மட்டும் அடிக்கடி
மாற்றப்படுவார்கள்
என்னவளே!
என்னூள் இருப்பவளே!!
உன் கூந்தலில் நீ சூடிய மல்லிகை பூக்கள் சரமாய் நான் வரவா....
அதை நீ முன்னால் எடுத்துப் போட உன் இதய துடிப்பை கொஞ்சம் ஒட்டு கேட்கலாமா.....உன் நெஞ்சோடே நான் ஒட்டிக் கிடக்கலாமா.......
கண்ணொளியே!
நான் காணும் ஒளியே!!
உன் வட்டமான முகம்
கொஞ்சம் வாட்டமாக இருக்கிதே
நான் வண்ணப் பொட்டாய்
வரலாமா....அங்கேயே எனக்கோரு
குடிசை கட்டலாமா....
முக்கனியே!
முத்துச்சரமே! ரதமே!!
உன் காதணி அசைவில் என்
பேரண்டத்தில் ஒரு
பிரளயம் நடக்குதே...அதற்கு பதில்
நானே உன் காதணியாக வரலாமா...அப்போழுதாவது உன் கண்ணத்தில் கால் கிரவுண்டு இடத்தையாவது நான் முத்தமிடும்
வாய்ப்பு கிடைக்காதோ எ
வறண்ட காலத்தில்
மரங்கள் நிச்சயம்
தன் இலையை இழக்கும் !
ஆனால்...,
அது தன் வேரை இழக்காது !
தமிழா ! இன்று ..,
நீதான் மரம்
இது வறண்ட காலம் .,
எதை இழப்பாய் !?...
வேரையா..?! இலையையா...?!
வேரை இழந்தால் வீழ்ந்துவிடுவாய் .
இலையை இழ..!!
-துளிர்த்துக்கொள்வாய் !.
கேளிக்கையால் ,
வேடிக்கையால் ,
முட்டாளானது போதும் !.
உதிர்த்துவிடு இதுபோன்ற இலைகளை.,
உயர்த்திப்பிடி உனக்கான கொள்கைகளை.
-கங்கைமணி
இத்தரையில் சித்திரைப் பெண்ணாள்
இனிய நாளில் வந்தே பிறந்தாள்
கத்தும்கிளி சோலைகள் யாவும்- முக்
கனிகளில் மாங்கனிகள் குலுங்கிடுமே!
புத்துணர்வும் தான்தேட புதுஇளநீர்
பனம்நுங்கு நீரினையே குடித்திடுவோம்!
சத்தான பானங்கள் நம்மிடையேதான்
செழிப்பாய் கிடைக்கையில் வேறெதற்கு?
பிள்ளைகள் தாத்தா- பாட்டிவீடு செல்ல
பெற்றவரோ கலைகள் கற்றிடவே
பிள்ளைகளை வற்புறுத்தல் ஆகுமோ?
பாண்டியும் கில்லியும் பாதாளகிணற்றில்
பாய்கின்ற நீச்சல்கலையும் காணோமே!
நோய்நொடி அணுகாமல் இருப்ப தற்கே
நாடித்தான் சென்றிடுவோம் கிராமத்திற்கே
நன்மைபல விளைந்திடுமே தன்னாலே
ஓட்டுவீடு மச்சுவீடு மக்கள ளெ
பாரத அன்னையைப் போற்றுவோம்!
பாரினில் உயர்ந்திட உழைப்போம்!
கல்வியில் மேன்மை அடைந்திடுவோம்!
கனிமவளத்தை பேணி காத்திடுவோம்!
நல்திட்டங்கள் வகுத்திடும் நேர்மையான
நல்ல தலைவர்கள் உருவாக்கிடுவோம்!
இளைஞர்கள் ஒன்றாய் இணைந்தே
இனியஇந்தியா ஒளிர்ந்திட வழிசெய்வோம்!
விளைவிக்கும் விவசாயிகளைக் காப்போம்!
விரைந்தே கொண்டாடுவோம் மகிழ்ந்தே!
--- கு. அசோகன்,
பாரத அன்னையைப் போற்றுவோம்!
பாரினில் உயர்ந்திட உழைப்போம்!
கல்வியில் மேன்மை அடைந்திடுவோம்!
கனிமவளத்தை பேணி காத்திடுவோம்!
நல்திட்டங்கள் வகுத்திடும் நேர்மையான
நல்ல தலைவர்கள் உருவாக்கிடுவோம்!
இளைஞர்கள் ஒன்றாய் இணைந்தே
இனியஇந்தியா ஒளிர்ந்திட வழிசெய்வோம்!
விளைவிக்கும் விவசாயிகளைக் காப்போம்!
விரைந்தே கொண்டாடுவோம் மகிழ்ந்தே!
--- கு. அசோகன்,
டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ”
என்னப்பா ஆச்சு?
நடந்தா கூடவே வருது டாக்டர்!
எதுப்பா?
ஒடம்புதான் டாக்டர்
அப்படியா?
அப்புறம்
கண்ணு மூடுனா தூக்கமா வருது டாக்டர்
கண்ணு துறந்தா
பார்க்கறதெல்லாம் பளிச்சுன்னு தெரியுது டாக்டர்
அப்படியா? என்னை தெரியுதா?
நல்லாவே தெரியுது டாக்டர்
”சரி, யோசிக்க வேண்டிய விஷயம்தான்
”காலைல பத்து இட்லி சாப்பிட்டா கூட மத்தியானம்
ஒரு மணிக்கு பசி எடுக்குது டாக்டர்
பத்து இட்லி சாப்பிட்டுமா?
ஆமாம் டாக்டர் !
அட டே, விநோதமா இருக்கே
மத்தியாணம் இன்னா சாப்பிடுறீங்க
ஒரு வாழைஇலைல, சோறு, பொரியல் வறுவல், அ
சவரம் செய்யப்படாத
கன்னங்கள்
குறுக்கு நெடுக்குமான
பதட்டமான நடை
கரங்களில்
குரோமிய பிளாஸ்க்
அடையாளப் படுத்தி விட்டது
பிரசவம்
மனைவிக்கென
கவிஞர் கே. அசோகன்
நீண்டு கிடக்கும் சோக பாதையில்
நெளிந்தே வளைந்தும் போகின்றான்
வேண்டும் கடவுள்கள் எல்லாம்
வேடிக்கை மட்டும் பார்க்கிற தாம்
ஆண்டுகள் தோறும் வந்தே நிற்கும்
அதையே தீபாவளி என்றழைப்போம்
தீண்டா இன்பம் தேடும் ஏழைக்கோ
தீபாவளி விழா தீரா ”வலியாகும்”
மாடுகழனி வயல் வெளியெலாம்
மாமாங்கமாய் வறண்டு நின்றதே
ஆடுகள் கோழியும் கால் நடைகள்
அவைகள் தின்னவே புற்களில்லை
நாடுதான் செழிக்கிற தென்றேதான்
நம்பெருமை பேசியே மகிழ்கிறோம்
கூடுகள் தேடும் பறவைகள் போல
குமைந்து கிடக்கின்றார் வறுமையிலே
எல்லாம் நலமும் இவர்கள் பெற
எவர்தான் நன்மை செய்வா ரென்றே
எல்லாம் வல்ல இறைவ ன