Dr.V.K.Kanniappan - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Dr.V.K.Kanniappan
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  17-Oct-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jun-2011
பார்த்தவர்கள்:  13447
புள்ளி:  11500

என்னைப் பற்றி...

நான் ஒரு அரசாங்க ஒய்வு பெற்ற கண்மருத்துவ பேராசிரியர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என் பிறந்த ஊர். நான் \'கீற்று\' வலைத் தளத்தில் பிப்ரவரி, 2011 லிருந்து சுமார் 45 கட்டுரைகள், வெவ்வேறு பொருட்களில் - மருத்துவம், இலக்கியம், வரலாறு - கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன்.
Mobile number: 98430 70840
http://annam-kanniappan.blogspot.in,
http://www.poemhunter.com/dr-v-k-kanniappan,
http://poetry.com/users/11888-Kanniappan%20%20Kanniappan%20
http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=197803 புனைப்பெயர் ‘அன்னம்’
http://www.tamilthottam.in/forum

என் படைப்புகள்
Dr.V.K.Kanniappan செய்திகள்
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2024 3:40 pm

கலிவிருத்தம்
(கூவிளங்காய் காய் மா மா)

மீட்பவரே வந்தெம்மைக் காப்பீர் என்றே
தேட்டமொடு கேட்கின்றோம் ஏசு பிரானை!
நாட்டமுடன் அவர்பேரைச் சொல்லி வேண்ட
காட்டிடுவார் அவர்கருணை நாளு மெமக்கே!

- வ.க.கன்னியப்பன்

சில வருடங்களுக்கு முன்னால் எழுதியது! சீரொழுங்கு இருக்கிறது! பொழிப்பு மோனை அமையவில்லை!

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2024 12:03 pm

நேரிசை வெண்பா

கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ!
பெற்றா னொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு 398

- காமநுதலியல், நாலடியார்

பொருளுரை: ஒளி மிக்க வளையலணிந்த தோழி! வன்மையுடையாருங் கடந்து செல்லுதற்கு அருமையான காட்டில் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமை யுடையையோ என்று கூறுகின்றனை; பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றானொருவன் அப்பொழுதே அதனை ஏறி ஊரு நெறியைக் கற்றவனாகிறான் அல்லவா? அதுபோலத்தான் இது!

கருத்து:

ஒருமைப்பட்ட காதலன்பினால் உள்ளம் ஆழ்ந்து ஆற்றலுடைய தாகின்றது.

விளக்கம்:

வல்லையோ எ

மேலும்

Dr.V.K.Kanniappan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Nov-2024 6:03 pm

தோழி விழியிரண்டும் துள்ளிடும் மீனினம்
ஆழிமுத்தின் அற்புதம் அந்தவெண் புன்னகை
தாழிட்டு நெஞ்சம் தனைநீஏன் மூடுகிறாய்
வாழட்டும் நம்காத லும்

மேலும்

ஆம் அருமை இப்படியும் முடிக்கலாம் வா லு ---இன மோனை வா வா ---அதே எழுத்து மோனை யாப்பு சார் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 10-Nov-2024 3:22 pm
வாழட்டும் நம்காதல் வா! என முடிக்கலாம். 10-Nov-2024 11:45 am
Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2024 11:39 am

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

நகையேற்றாய் தந்தை நரபதிபால் வீணே
நகையேற் பிறன்மனையை நண்ணி - நகையேல்
அவையினவை யேன்மறைதேர் அந்தணரை யின்ன
நவையிலா நன்மதியே நன்று! 65

மேலும்

Dr.V.K.Kanniappan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2024 11:33 am

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடி

மேலும்

Dr.V.K.Kanniappan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2024 5:13 pm

அழைக்கிறாய்கண் ணாலென்னை அந்திவாச லக்கு
மழைபோல் பொழிகிறாய் மௌனமாய் நெஞ்சில்
நனைகிறேன் நித்தம் நிலாமலர் போல்நின்
நினைவுச்சா ரல்தன்னில் நான்

-----இருவிகற்ப இன்னிசை வெண்பா

அடி எதுகை ---அழை மழை நனை நினை

சீர் மோனை --- 1 3 ஆம் சீரில் ---அ அ ம மௌ ந நி நி நா

மேலும்

சீர் கருதி சொல் பிளவு படுதல் பழைய இலக்கியங்கிலும் காணலாம் திருக்குறள் பல பாக்களில் ஈற்றசை ஓரசையில் சொல் பிளவுபட்டே அமைந்திருக்கும் மோனைகள் வர்க்க இன வழிகளில் அமைக்கப்பட்டுள்ளது தமிழெழுத்துக்களை மூன்றினமாக அமைத்திருக்கிறார்கள் இலக்கண நூலார் அவ்வினவழியிலும் மோனைகள் அமைக்கலாம் என்பதை நான் ஏற்கிறேன் இவற்றை எல்லாம் பலமுறை சொல்லியிருக்கிறேன் பாவினம் ஒரே வாய்ப்பாட்டிலும் பலவாய்ப்பாட்டிலும் கம்பனிலும் காணலாம் நீங்கள் சொன்ன வாய்ப்பாட்டமைதியில் கவிதை பதிவு செய்திருந்தேன் இன்னும் பார்த்து கருத்துத் தெரிவிக்கவில்லை யாப்புசார் கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK நி க்கு நி நீ நெ நே ----இது அதே வர்க்க மோனை 10-Oct-2024 8:28 am
ந நி நி நா மோனையாகப் போட்டிருந்தாலும் தகுந்த மோனை ஆகாது. ந வுக்கு ந நா நை நௌ நி க்கு நி நீ நெ நே சரியான பொழிப்பு மோனையாகும். சீர்களையும் நம் விருப்பம்போல் உடைத்துப் பிரிக்கலாகாது. - உதாரணம்:1, 4 ஆம் அடி 09-Oct-2024 9:12 pm
Dr.V.K.Kanniappan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2024 3:49 pm

தீட்டுகிறாய் சித்திரம் தித்திக் குமிதழில்
பாட்டினில் பாயுது பைந்தமிழ் தேனமுதாய்
ஊட்டிக் குளிர்காற்றாய் உள்ளத்தில் வீசிடுவாய்
வாட்டுவாய்மா லைவரா மல்

---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

தீட்டுவாய் சித்திரம் தித்திக் குமிதழிலே
பாட்டினில் பாயுமே தமிழ்ப்பா தேனமுதாய்
ஊட்டியின் குளிரென உள்ளம் தனில்வீசி
வாட்டிடு வாயெனை மாலை வராமல்நீ

---விளம் விளம் மா காய் அனைத்து அடிகளிலும்
அமையப் பெற்ற கலிவிருத்தம்



தீட்டுகிறாய் சித்திரம் தித்திக் குமிதழில்கன் னம்குழிய
பாட்டினில் பாயுது பைந்தமிழ் தேனமுத ஓடையாய்
ஊட்டிக் குளிர்காற்றாய் உள்ளத்தில் வீசிடுவாய் என்னுயிரே
வாட்டுவாய்மா லைவரா மல

மேலும்

இலக்கண விதிகளெல்லாம் வைத்துக் கொண்டு கவிதை எழுதினால் இலக்கணம் முன் நிற்கும் இலக்கியம் பின் வந்துவிடும் ஆதலால் என் கற்பனைக்கேற்ப பாவிலோ பாவினத்திலோ கவிதை புனைகிறேன் கீதை வெண்பாவில் பொருள் சிதைவு படாவண்ணம் எதுகைக்கைக்கு இடம் அளித்து மோனை இன்றியும் வருமிடத்தில் அமைத்தும் எழுதுகிறேன் எதுகை மோனை இன்றி பல விகற்பத்திலும் புனைகிறேன் காரணம் பொருள் முக்கியம் தங்கள் குறிப்பிட்ட வாய்ப்பட்டமைதியில் ஒரு கலித்துறை பாடல் ஒன்று பதிவு செய்கிறேன் யாப்புசார் கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK 29-Sep-2024 8:19 pm
அன்னம் ஒத்ததோர் அழகிய நடையினள் வந்தாள்! கலிநிலைத்துறை (குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + மா) (1, 3 ல் பொழிப்பு மோனை) அன்னம் ஒத்ததோர் அழகிய நடையினள் வந்தாள்; சொன்னம் போன்றதோர் சொக்கிடும் பெண்மயில் போலே! அன்பன் என்றனை ஆசையில் இனிதுற அணைத்தாள் மன்னன் போலவே மனத்தினில் இருத்தினாள் மகிழ்ந்தே! - வ.க.கன்னியப்பன் கலித்துறை (குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + மா) என்ற வாய்ப்பாட்டில் 1, 3 ல் பொழிப்பு மோனை வைத்து ஒரு பாடல் எழுதுங்களேன். 29-Sep-2024 6:30 pm
Dr.V.K.Kanniappan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2024 9:51 pm

கலைந்தாடும் கூந்தலில் தென்றல் மேக ஓவியம் வரையுதோ
சிலைபோல் மேனியில் செந்தாமரை செந்தமிழ் கவிதை எழுதுதோ
அலையெலாம்நீ நீராடும் போதில் ஆனந்த ராகங்கள் பாடுமோ
சிலையில் உன்னை வடிக்க கிரேக்க வெண்பளிங்கு எடுத்துவரவோ

மேலும்

நான் ஏற்கனவே பல முறை இதுபற்றி சொல்லியிருக்கிறேன் ஒரே அடி எதுகையும் அடி தோறும் பல வாய்ப்பாடுகள் அமைய எழுதப்பட்ட பாவின விருத்தம் கம்பனிலும் இதை காணலாம் பொதுவாக ஒரே வாய்ப்பாடு அமையுமாறு எழுதுவது பழக்கம் இதையே ஒரே வாய்ப்பாடு அமைய எழுதிடலாம் 23-Sep-2024 2:50 pm
அடிக்கு ஆறு சீர்கள் இருந்தாலும் கூட, சீர் ஒழுங்கும் இல்லாமல், எந்த வாய்ப்பாட்டுள்ளும் அடங்காமல் வரும்பாடல் விருத்தமாகாது; ஓசையும் சிறக்காது! பாவலர் பயிலரங்கத்தில், முகநூலில், சுமார் 80 வகையான வேறுபட்ட வாய்ப்பாட்டுள், தக்க எடுத்துக் காட்டுக்களுடன் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (விளம் மா தேமா / விளம் மா தேமா) என்ற வாய்ப்பாடில்) (1, 4 சீர்களில் மோனை) வைத்து தாங்களும் சில விருத்தங்கள் முயற்சி செய்யலாமே! 1000 பாடல்களுக்கு மேல் எழுதியும் நான் எழுதும் ஒவ்வொரு பாடலையும் பாவலர் பயிலரங்கத்தில் எழுதியே அங்கீகாரம் பெறுகிறேன். 23-Sep-2024 2:32 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2018 12:35 pm

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. 6

சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், அடாத காரியங்களைச் செய்யக் கூசுந்தன்மை ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது.

'அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு' (1014 நாண் உடைமை)

ஆதலின், 'நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் (960 குடிமை), 'நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை’ (1019 நாண் உடைமை)' ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.

நாணாவது செய்யத் தகாதனவற்றிற்கு உள்ளம் ஒடுங்குதல்.

மேலும்

பாவர் டாக்டர் அவர்களுக்கு வணக்கம். நாணுதல் பெண்ணின் உரிச்சொல் என்றாலும் ஆணும் பெண்ணும் நாணும் சந்தர்ப்பங்களை விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா. 28-Jul-2021 7:18 am
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 9:58 pm

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2

தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3

தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a

மேலும்

Sonnet: For Success In Life Success in life does come not overnight; An ambition and aim begin the try; A sustained labor makes the future bright; At times, despair could make you even cry. Self-confidence is key to success prime; A hasty mind can’t make foray at all; Correct your deficiencies all the time; In others’ court always, you keep the ball. But emulate the good achieved by next; The road you take is not the same always; The problems cropping up can keep you vexed; But you maintain that principled a base. The grace of God dictates the things on earth; God gave each one a purpose in the birth. Copyright by Dr John Celes 20-05-2015 Dr. A.Celestine Raj Manohar M.D., 13-Jun-2017 12:08 pm
எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி ----மூலக் கவிதையை பதிவு செய்யவும் 13-Jun-2017 11:38 am
கருத்திற்கு நன்றி, சேயோன். மூலக் கவிதையையும் வாசித்துப் பாருங்கள். எழுதியவர் டாக்டர்.ஜான் செலிஸ் மனோஹர் எம்.டி, முன்னாள் டீன் மற்றும் மருத்துவப் பேராசிரியர், பெருந்துறை மருத்துவக் கல்லூரி. 23-Sep-2015 11:35 am
சிறந்த வெண்பாக்கள். சிறப்பான மொழிபெயர்ப்பு. 26-May-2015 8:02 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2016 12:53 pm

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

பண்புடையர் ஆதல்; பழகுசொல் பேசுதல்;
நண்பரைப் பேணுதல்; நன்னயமாய் – புண்ணன்ன
வஞ்சகத்தை வேரறுத்து மாண்புறவே நல்லவற்றை
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – எஸ்.பி.இராமையா, புதுப்பாக்கம்

பரிசு பெற்ற நேரிசை வெண்பா

தஞ்ச மெனஉன் தயவுக்காய்க் காத்திருப்பர்;
கொஞ்சிக் குலமென்று கூவிடுவார்; - நஞ்சுடனே,
வஞ்சனையும் சூதும் வழியாகக் கொண்டிருப்பார்;
நெஞ்சில் நிறுத்துதம்பி நீ! – நம்பிக்கை நாகராசன்

நான் அனுப்பிய:
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வார் இருப்பரே – தஞ்சமென
கொஞ்சமும் அன்னாரை கொள்ளலா காதென்றே
நெஞ்சில் நிறுத்துதம்

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. 19-Sep-2016 7:08 pm
போற்றுதற்குரிய கவிதை (வெண்பாக்கள்) பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 19-Sep-2016 5:19 pm
தங்கள் தெளிவான கருத்திற்கு நன்றி. 15-Sep-2016 2:44 pm
நல்ல கருத்துக்களுடைய வெண்பாக்கள்தான் எழுதியிருக்கிறீர்கள்; பரிசு கிடைத்திருக்கலாம்.. மற்றவர்களுடைய வெண்பாக்களையும் கொடுத்துள்ளதைப் பாராட்டுகின்றேன்.. அவற்றிற்கும் தங்களுடையதற்கு இடையே காணப்படும் ஆற்றொழுக்கு நடையினை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். 15-Sep-2016 1:40 pm
Dr.V.K.Kanniappan - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2016 10:25 pm

நானும், என் மனைவியும் சென்ற 15.08.2016 ல் என் இளைய மகன் குடும்பத்துடன் சென்னை சென்று வேளச்சேரியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது 25.08.2016 அன்று ஆவடி vel tech பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர் விடுதியில் உள்ள என் பேரனைப் பார்க்கச் செல்வதற்காக SRP tools பஸ் நிறுத்தம் சென்றேன். நானும், என் மகனும் திருவான்மியூர் ரயில் நிலையம் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.

என் மகன் ஓட்டுநருடன் முன் இருக்கையில் அமர்ந்தார். நான் ஓட்டுநர்க்குப் பின்னால் உள்ள கீழ் இருக்கையில் அமர்ந்தேன். மேல் இருக்கையில் (IT நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நினைக்கிறேன்) இள வயதுப் பெண்கள் இருவர்

மேலும்

கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:57 pm
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டீர்கள். கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:56 pm
கருத்திற்கு நன்றி. 09-Sep-2016 10:54 pm
தரமற்ற பொருட்கள் விற்பனையும், பாதுகாப்பற்ற உணவு விற்பனையும் விற்று நம்மை கொள்ளையடிக்கும் உணவு விடுதிகளை பற்றி புகார் செய்தாலும் பயனில்லை பயணக் கட்டுரைகள்' : உலகம் சுற்றிய மணியன் போல் எழுதினால் சிறப்பாக இருக்கும் ஷேர் ஆட்டோவில் ,மின்சார ரயிலில் பயண அனுபவங்கள் சுகாதாரமான கழிப்பிட விமர்சனங்கள் போற்றுதற்குரிய படைப்பு 09-Sep-2016 7:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (267)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
Deepan

Deepan

சென்னை
Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
Palani Rajan

Palani Rajan

vellore
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (268)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Kavitha V

Kavitha V

Bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (292)

தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.
user photo

மேலே