ஜெகதீஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெகதீஷ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 559 |
புள்ளி | : 34 |
உனக்கும் எனக்கும் இடையில்
இந்த பாழாய் போன
நகரங்கள் புகுந்து
நம்மை பிரித்துவிட்டதடி
விடை தெரியா
வினாக்கள் நிரம்பிய
தேர்வு நேரங்களைவிட நெடியதாகவும்
வழி அறியா வீதியின்
போக்குவரத்து நெரிசலில்
சிக்கித் தவிக்கும் நொடிகளைவிட
கொடியதாகவும் உள்ளதடி
நம் பிரிவு.
நீ எனக்கு அனுப்பவும்
நான் உனக்கு அனுப்பவும்
சொடுக்கும் சுயபடங்கள்
நம்மை கேட்கிறதடி
என்ன செய்ய
நமக்குள் புகுந்த
இந்த பாழாய் போன நகரங்களை
தகர்க்க வழி தேடிக்கொண்டே இருக்கிறேன்
நீயும் தேடு
நம் காதல் வழி சொல்லும்
@ஜெகதீஷ்
உன் நினைவுகள்
எனக்குள் ஓர் அலை போல
அழகாய் எட்டிப் பார்க்க
அளவாய் கால் நனைத்து
சுகம் கண்டேன் முதலில் ...
மெல்ல மெல்ல
எழும்பி வந்த
உன் நினைவலைகள்
எதிர்பாராத வேளையில்
ஒரு நாளில் என்னை
இழுத்துச் சென்றது
எங்கோ ஆழமாய் ...
அன்று உனக்குள்
சென்றவள் தான்
உனக்குள்ளிருந்து
இன்னும் வெளியே
வர முடியாமல் நான் ....
அந்த அன்று
என்று என்பது
எனக்குள் இன்னும்
புரியாத ஒரு
சுகமான புதிர் தான்
உன் அலைகள்
எனக்குள் ஒரு
சுனாமியாய் மாறி
சுருட்டிவாரி
எடுத்துக் கொள்கிறது
எப்போதும் என்னை
உனக்குள்
ஆலைக்குள் சிக்கிய
என் சின்ன மனசு
வலைக்குள் மாட்டிய
ஒ
உன் பிடிக்குள் நானிருப்பதாய்
என் பெற்றோர்..
என் பிடிக்குள் நீயிருப்பதாய்
உன் பெற்றோர்..
அன்புப் பிடிக்குள் நாம்.
உனக்கும் எனக்கும் இடையில்
இந்த பாழாய் போன
நகரங்கள் புகுந்து
நம்மை பிரித்துவிட்டதடி
விடை தெரியா
வினாக்கள் நிரம்பிய
தேர்வு நேரங்களைவிட நெடியதாகவும்
வழி அறியா வீதியின்
போக்குவரத்து நெரிசலில்
சிக்கித் தவிக்கும் நொடிகளைவிட
கொடியதாகவும் உள்ளதடி
நம் பிரிவு.
நீ எனக்கு அனுப்பவும்
நான் உனக்கு அனுப்பவும்
சொடுக்கும் சுயபடங்கள்
நம்மை கேட்கிறதடி
என்ன செய்ய
நமக்குள் புகுந்த
இந்த பாழாய் போன நகரங்களை
தகர்க்க வழி தேடிக்கொண்டே இருக்கிறேன்
நீயும் தேடு
நம் காதல் வழி சொல்லும்
@ஜெகதீஷ்
வார்த்தைகளின் பிடிக்குள்
வசப்பட மறுக்கும்
வாழ்வின் துயர்க் கண்ணிகளை
என்ன செய்யப் போகிறேன்?
கண்ணிகளைப் பின்தொடரும் நுட்பம்
கைவரப் பெற்றதான கருவம்
முறைத்துப் பார்க்கிறது.
வாழ்வின் போதாமையோடு
ஞானத்தின் போதாமையும்...
நீ சுயபடமெடுக்கும்
ஒவ்வொரு சொடுக்கிலும்...
பேரழகி உன்னை
தனக்குள் சிறைப்பிடித்த
பேரானந்தத்தில்...
குறுநகைகளை
இணையமெங்கும் தூவிச் செல்கிறது
உன் அலைப்பேசி...
ஜெகதீஷ்
இப்போதெல்லாம்
நாம் விரும்பி அருந்தும் தேனீரை
தனியாய் அருந்துகையில்
உப்பாய் கரிக்கிறது
நம் கண்ணீரிலிருந்து உப்பெடுத்து
சர்க்கரைக்கு மாற்றாய்
காலம் கலந்து இருக்க கூடும்...
ஜெகதீஷ்
நீ என்னை காதலிக்கிறாயா?
என நீயும் நானும்
மாறி மாறி
நம்மை கேட்டுக் கொண்டோம்
கேள்விக் குறிகள்
இரண்டும் இணைந்து
காதல் குறியாய் தானாய் மாறும்!
வாழ்வின்
பெருங்கோபப் புயல் வீசினாலும்
நம் கேள்விக் குறிகளை
இணைத்தே வைப்போம்
நம் பிரிவைத் தவீர்க்க!
கால ஓட்டத்தில்
நமக்குள் ரசனை மாற்றம் ஏற்பட்டு
நம் ரசாயன மாற்றத்தை தகர்த்து
நம்மை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தினாலும்
காந்தமாகி ஈர்த்துக் கொள்வோம்!
காலம் தாண்டியும்
காதலோடு காதலாகி
காற்றில் கலந்திருப்போமடி
தமிழிடம் வார்த்தைகளை
பிச்சை எடுத்து
அதனை
வாக்கியமாக அமைத்து
தாயிடம் காட்டுகிறேன்!
நானும் கவிஞன் என்று...!
நீ என்னை காதலிக்கிறாயா?
என நீயும் நானும்
மாறி மாறி
நம்மை கேட்டுக் கொண்டோம்
கேள்விக் குறிகள்
இரண்டும் இணைந்து
காதல் குறியாய் தானாய் மாறும்!
வாழ்வின்
பெருங்கோபப் புயல் வீசினாலும்
நம் கேள்விக் குறிகளை
இணைத்தே வைப்போம்
நம் பிரிவைத் தவீர்க்க!
கால ஓட்டத்தில்
நமக்குள் ரசனை மாற்றம் ஏற்பட்டு
நம் ரசாயன மாற்றத்தை தகர்த்து
நம்மை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தினாலும்
காந்தமாகி ஈர்த்துக் கொள்வோம்!
காலம் தாண்டியும்
காதலோடு காதலாகி
காற்றில் கலந்திருப்போமடி
எப்போதோ காலி செய்த,
வீட்டின் வழியே செல்ல நேர்கையில்
வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டு
உள்ளே செல்ல விழைந்த மனம்
தானாய் தனக்கொர் பூட்டிட்டு
கதவை திறக்காமல் நகர்கிறது
ஜெகதீஷ்
நீ
என்னை அனைத்து தொலைத்தொடர்பு
சாதனங்களிலிருந்தும் தவிர்த்துவிட்டு
என்னைப் போலவே
தேடித் தேடி தொலைப்பாய்
தோண்டி தோண்டி புதைப்பாய்
என நான் அறிவேன்...
என்னை தேடிக்கொண்டே இருக்காதே
தேடி அடைந்துவிடு
தேடவைத்துக் கொண்டே இருக்காதே
கிடைத்துவிடு
ஜெகதீஷ்