முகம்மது மசூது - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முகம்மது மசூது |
இடம் | : கடையநல்லூர் |
பிறந்த தேதி | : 06-May-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 190 |
புள்ளி | : 17 |
நம் காதல் போர்க்களத்தில்
என் இதழ் எனும் ஆயுதம் தாங்கி
நின்று கொண்டிருக்கிறேன்..
உன் உடல் முழுவதும்
முத்தங்களால் சரமாரியாக தாக்கி
உன்னை காயப்படுத்த போகிறேன்..
அதற்கு அன்பே,
என் இதழ்களுக்கு
நீ தக்க பதிலடி கொடு
உன் இதழ்களை கொண்டு..
இதழ் சேர்த்து இறுதிவரை
போராடும்
இரு உயிர்களுக்கும் தெரியும்
இப்போரில்
வெற்றி இருவருக்குமே என்று..!
காதல் யுத்தத்தை எதிர்பார்தவனாக,
❤சேக் உதுமான்❤
சப்தமில்லாமல்
பலமுறை உச்சரித்த
உன் பெயர்..
என்னை
காயப்படுத்திய
உன் சொற்களில்
மயங்கிய என் இதயம்...
நான் இரசித்த
என்னை வெறுத்த
உன் கண்கள்...
உன்னை தேடிய
என் விழிகளை
பார்த்து உயர்த்திய
உன் புருவம்...
நான் உன்னை
நேசிக்க மறத்த
போதும் என்னை
வெறுக்க மறக்காத
உன் மனது....
என் காதலால்
கோபத்தில் அழகாய்
சிவந்த உன் முகம்..
என் மனதில்
தடுமாற்றத்தில் தொடங்கி
ஏமாற்றமாய் போன
என் காதல்...
சோகத்தை தன்னளவில்
வைத்துக்கொண்டும்
கண் இமைகளுக்கிடையே
கண்ணீரை மறைத்துக்கொண்டும்..
சிரிக்கும் ஒவ்வொரு ஆணும்
அழகு தான்..!
என்னைப்போல..
உன் விழிகளுக்காக
உறங்கிய காலங்கள்
மறைத்து உன்
விழிகளை மறக்க
உறங்குகிறேன்
உன் நினைவற்ற
இரவுகளுக்காக...
சாலை ஒரங்களில்
உனக்காக காத்திருந்த
காலங்கள் மறைந்து
அந்த சாலைகளே
காத்திருக்கின்றன
எனக்காக...
இங்கு வீசும் ஈரம் படிந்த
உப்புக்காற்றிலும் உன்
சுவாசம் தேடியலைகிறேன்..
கடற்கரை எங்கும் உன் பாத
சுவடுகளை தேடியலைகிறேன்..
இந்த ஆர்பரிக்கும் கடலலையின்
சப்தத்திலும் நான்
உன் மொளனத்ததை
தேடியலைகிறேன்..
அலைகள் கரையில் விட்டு
செல்லும் கிளிஞ்சல்கள் போல்
நீ என்னில் விட்டு சென்ற
நினைவுகளை தேடியலைகிறேன்..
கரைசேர கலங்கரையை தேடும்
கப்பல் போல்..
நான் உன் உயிர் சேர
உந்தன் இதயம் தேடியலைகிறேன்..!
தொலைத்த ஒன்று
கிடைக்காது என தெரிந்தும்
தேடி அலையும் கிறுக்கன் நான்..
உன் மீது மட்டும் என் அன்பு
முழுவதையும் கொட்டி தீர்த்த
காதல் கிறுக்கன் தான்..!
❤சேக் உதுமான்❤
உன் விழிகளுக்காக
உறங்கிய காலங்கள்
மறைத்து உன்
விழிகளை மறக்க
உறங்குகிறேன்
உன் நினைவற்ற
இரவுகளுக்காக...
சாலை ஒரங்களில்
உனக்காக காத்திருந்த
காலங்கள் மறைந்து
அந்த சாலைகளே
காத்திருக்கின்றன
எனக்காக...
உன் கண்களின்
இமையாய் இருந்த
என்னை கண்ணீர்
துளிகளாய் தூக்கி
எரிந்தாய் பெண்ணே..
உன் அன்பை
காற்றாய் உணர்ந்த
என்னை கானல்
நீராய் மறைத்தாய்..
உன் வாழ்வில்
மாற்றம் தந்த
என்னை..,மாற்றம்
இல்லை என்
ஏமாற்றம் என்றாய்..
மறைந்தது அழகிய
காதல் காலங்கள்
தான்..நாம் காதல்
இல்லை..
இப்படிக்கு
உன் மனதில் வாழும் உன் காதலன்..
என் கனவுகள்
நிஜமாவதும்
நிழலாவதும்
உன் வார்த்தையில்
உள்ளது பெண்ணே...
நீ மறுத்தால்
நிழலாக வாழ்வேன்
உன் அருகில்..
உன் முகம்
என் விழி..
உன் சிரிப்பு
என் மகிழ்ச்சி..
உன் துன்பம்
என் வலி..
உன் கண்ணீர்
என் இரத்தம்..
உன் பிரிவு
என் மரணம்...
நான் மட்டுமே அவளின் உலகமென
எண்ணி வாழந்து கொண்டிருக்கும்
என்னவளை என் முதுகின் மேல்
சுமந்து கொண்டு இந்த உலகம்
முழுவதும் சுற்றி வர ஆசை
என் உயிர் மண்ணில் மடியும்வரை..!
எதிர்கால கனவுகளுக்காக
நிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் கற்பனை தேடல்களாக இளமை காலங்கள்..