திலீபன் சுந்தர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : திலீபன் சுந்தர் |
இடம் | : புளியங்குடி |
பிறந்த தேதி | : 08-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 7 |
கனிந்த கைகள் காய்க்கிறது
காயங்கள் ஏற்கிறது ,
அறுசுவை ஆக்குகிறாள்
இவள் சுமை பாராமல்,
நாவினில் நனைந்த உணவு
நவமணிகள் கோர்த்த குழைவு,,
நித்தமும் நன்றி பாடுவேன்
காய்த்த கைகளை கனியாக்கிட.
தொலை தூர பால் வண்ணமே, துயில் கொள்ள தூங்காவனமே,
திசை எங்கிலும் உன் முகம், குளிரூட்டி கொல்லுதடி,
வளர்பிறையின் வளைவுகள், பரதம் அறியா பாவனைகள்,
நீ இல்லா ஒரு நாளில், நான் தொலைய வேண்டுகிறேன்.
உமது சிந்தனை ஏய்த்து சாதனைகள் மட்டுமல்ல, சாந்தமும்!
உமது எழுதுகோல் ஏய்த்து காவியம் மட்டுமல்ல, தனிமையும் !
உமது நூல்கள் ஏய்த்து சரித்திரம் மட்டுமல்ல, பிரிவையும் !
யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து
உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான்.
வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது.
நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில்
மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது.
நிம்மதி மறந்தது ஈழம்
அடிமை வாழ்வை துறந்தான் தோழன்.
படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல்
பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது.
இரவின் பகலின் சுழற்சி
இடறில்லாத விடியலை தேடியது.
அன்று பூத்த மங்கையின் கனவு
கற்பு சூரையாடப்பட்டு களவானது.
பெண்மை விளையாட்டு பொருளாகினால்
அவள் உடம்பு காமன்களின் திடலானது.
பால்வாடை மாறாத பிஞ்சு
ஈன்றாளின் துப்பாக்கி பதிந்த
மார்பில் வாய
என்று நான் உன்னை கண்டேனோ
அன்றிலிருந்து என் பார்வைகள் புதிதானதடா!
என்று உன்னை நினைக்க தொடங்கினேனோ
அன்றிலிருந்து நான் சுவாசிக்கும் காற்றும் புதிதானதடா!
என்னை மறந்து உன்னை பார்க்கும் என் விழிகள்
நீ பார்க்கும் போது சற்றே தடுமாறுதடா!
உன்னை பார்த்ததும் என்னை அறியாமல்
என் இதழ்கள் புன்னகைப்பதை உணர்ந்தேனடா!
ஒரு நாள் முழுதும் உன்னுடன் இருந்தாலும்
நீ சென்ற அடுத்த நொடி என் இதயம் கனக்கிறதடா!
உன் பிரிவினால்!!!
உலகில் மிக கொடுமை தனிமை!
நான் பேசுவதை கேட்க ஓர் உயிரை
தேடினேன்!
நான் சாயிந்து கொள்ள ஓர் தோள்
தேடினேன்!
நான் கண்மூடித்தூங்க ஓர் மடி
தேடினேன்!
நான் நேசிக்க ஓர் இதயம்
தேடினேன்!
நான் அனுபவிக்க தூய்மையான ஓர் அன்பை
தேடினேன்!
நான் எனக்குள் கரைய ஓர் காதல்
தேடினேன்!
ஆனால் நான் மிக கொடுமையான
தனிமை என்னும் உலகத்தில் உயிரோடு தள்ளப்பட்டேன்!!!!!!!
சிறை பிடிக்கப்பட்ட உடல் ,
சிதறடிக்கப்பட்ட மனம் ,
சில நேரம் சிந்தனையில்,
பல நேரம் கண்ணீரில் . . .