dinesh palani raj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : dinesh palani raj |
இடம் | : thanjavur |
பிறந்த தேதி | : 26-Jan-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 17 |
எழுத்தாளன்,கவிஞன்,பகுத்தறிவாளன்
‘ஒரு குவாட்டருக்காக..........’
- தினேஷ் பழனி ராஜ்
‘யக்கா இந்நேரத்துக்கு ரிசல்ட் வந்திருக்கும்ல’
‘அட யாருடி இவ சும்மா ஒரே கேள்விய கேட்டுக்கிட்டு’ காலையிலிருந்து இதே கேள்வியினை கேட்டு கேட்டு சளித்துபோய் இருந்தாள் பேச்சி, ராணி கேட்ட கேள்வியினை கேட்டு கொளுத்தும் வெயிலில் சில நேரங்களில் கோபம் கொள்வதைத்தவிர பேச்சிக்கு வேரு எதுவும் தெரியவில்லை, மேலும் ராணியின் கேள்வி மீது அவள் கொண்ட சளிப்பிர்க்கும் கோபத்திற்கும் நியாயமுண்டு. ஏனெனில் இந்த கேள்வி தோராயமாக பதினைத்து முறைக்கும் மேலாக கேட்கப்பட்ட கேள்வியாகிப்போயிருந்தது. பிறகு பேச்சிக்கு கோபம் வராதா என்ன?
சட்டென்று நிதானத்திற்கு வந்தவள் ரா
இன்னும் இன்னும்
கூடுகிறது
பசி எனக்கு
பசிதீர
உனை உண்ட பின்னும்
ஏனோ
கட்டிலின்மேல்
கம்யூனிஸம் எல்லாம்
களவாட பட்டுவிடுகிறது.....
இன்னும் இன்னும்
கூடுகிறது
பசி எனக்கு
பசிதீர
உனை உண்ட பின்னும்
ஏனோ
கட்டிலின்மேல்
கம்யூனிஸம் எல்லாம்
களவாட பட்டுவிடுகிறது.....
படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திற்கு பலமுறை போயிருக்கிறேன். ஹைதராபாத்து நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிலிம்சிட்டியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், நேரம் கிடைக்கும்போது ஹைதராபாத்திற்கு வந்து அங்குள்ள சலார்ஜங் மியுசியத்திற்கு ஓடிவிடுவேன். சலார்ஜங் மியுசியத்தில் 'வேல் ஆப் ரபாக்கா' முகத்திரை அணிந்த ரபாக்கா என்கிற பெண்ணின் சலவை கல் சிற்பம் இருக்கும். இருநூறு வருடங்களுக்கு முன்பு செதுக்கிய ஒரு சலவை கல் சிற்பம். முகத்திரை அணிந்த அந்த பெண்ணின் மூக்கு, மூக்கின் குழி, கண்ணின் இமை, கண்ணின் விழிப்பு, கன்னம், உதடு என்று தெளிவாக தெரியும். முகத்திரையும் தெரியும், முகத்திரைக்கு உள்ளுக்குள் இருக்கிற
இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்
இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்
கால் வயிறு
சோறின்றி
மழைக்காக
காலமெல்லாம் காற்றிருந்து
கடன் பல
நீ வாங்கி
ஊர் பசிக்கு
சோறு போட
பணவெறி பிடித்தவனிடம்
அடிபட்டு மிதிபட்டு
அடிமை விலைக்கு
விலைபோகி
கூறுபோடும்
நிலத்தரகர்களிடம்
கூத்தாடி
தன்னிலம் காக்க
தன் மானம் இழந்து
பல தருணங்களில்
பாய்ச்ச நீரில்லாமல்
பசி தாளாமல்
பட்டினி சாவு கண்டு
தன் நலம் கருதாமல்
தன் வாழ்வு துறந்த
நீ கடவுள்
நீர் இன்றி அமையாது உலகு
நீ இன்றி உயிர் வாழாது உலகு
பிறர் கை கூப்பி
வணங்க மறந்த
உண்மை கடவுள் நீ
உன்னை ஒரு நாளில்
இந்த உலகம் வந்தடையும்
அதுவரையிலேனும்
நீ எஞ்சியிரு
உழவர் இனமே!!!!!!
எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!
எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!
இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!
தேவதைகள் தங்கும்
கூடாரம்....!
அஹிம்சையான
இம்சை....!
விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!
ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!
இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!
விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!
வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!
தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!
கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!
விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!
இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!
இதுவரையில்
தன் வீதியின் வழியாக
வந்தும் இருந்திடாத
இறைவனை
இரக்கத்தோடு
வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்
சேரி வாசிகள்
பிறப்பிலிருந்து இறப்பு வரை எதில் லஞ்சம் இல்லை....?
யோசிக்க யோசிக்க நரம்புகளின் புடைப்பில் இயலாமை கொதிப்பதை வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிகிறது..... நடந்தாலும் லஞ்சம்.. கிடந்தாலும் லஞ்சம்....வேலை செய்யவும் லஞ்சம். செய்யாமலிருக்கவும் லஞ்சம்....பனிக்குடத்தில் ஆரம்பித்து பள்ளிக் கூடம் தொடர்ந்து மண் சட்டி உடைக்கும் வரை லஞ்சம் தன் தலையை விரித்தே ஆடுகிறது... ஆட்டுவிப்பது சாத்தனின் குணம்.. ஆடுவதில் சுகம் இருக்கத்தான் செய்யும் மானுட ஜென்மத்துக்கு....
இந்தத் துறை, அந்தத் துறை, எந்தத் துறையை எடுத்தாலும் லஞ்சம்.... சொல்லிப் பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும், மிஞ்சிப்பார்த்தும் முடியாத கோபம் சுய பச்
அலுவலகம் முடித்து அவரவர் வீடு திரும்பும் நேரம் மாலை ஆறு மணி சொச்சம். பேருந்து நிறுத்தத்தில் ஒரே கூட்டம் அலை மோதி நின்றது. தான் ஏறி செல்ல போகும் பேருந்து வருகிறதா என்று தொலை நோக்கில் தலையை சற்றே உயர்த்தி பார்க்கும் கூட்டத்தில் மாலினியும் ஒருத்தி. அவள் இல்லம் செல்வதற்கான பேருந்து வருவதைக் கண்டு சற்றே நகர அவளை இடித்துக் கொண்டு பேருந்தைப் பிடிக்க முன்னேறியவனை
"எரும மாடே கண்ணு தெரியலையா உனக்கு" எரிச்சலுடன் கத்தினாள் மாலினி
மாலினியின் கூச்சலை சட்டை செய்யாதவனாய் பேருந்தில் ஏறி தன்னை திணித்துக் கொண்டான். அவன் இடித்துச் சென்ற தோள் பட்டையில் வலி ஏற்பட்டு தேய்த்துவிட்டுக் கொண்டே பேருந