முருகேசன் சத்தியமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முருகேசன் சத்தியமூர்த்தி |
இடம் | : Pudukkottai |
பிறந்த தேதி | : 20-May-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 113 |
ஒரு
கையளவு
இதயம்,
இன்றேனோ
மலையளவு
கணக்கிறதே
பட்டாம்பூச்சிககள்
எல்லாம்
பணிமனையில்
தஞ்சம்
என்னவளின்
கண்சிமிட்டல்
சாயல் வேண்டி
உலகில்
இதுவரை
பூத்த
மஞ்சள் மலர்களுக்கெல்லாம்
சவாலாய்
- என்னவள்
யார் இவள்..
அன்னையின் சாயலாய்
என்னருகில் அமர்கிறாள்..
பிள்ளையின் கொஞ்சலாய்
என்னை பின் தொடர்கிறாள்..
அவள் விழி உருட்டி
என் இதயம் சுருட்டி போகிறாள்..
மௌன பேச்சுக்களால்
என் மௌனம் கலைக்கிறாள்..
மந்திர புன்னகையால்
என்னை தந்திரம் செய்கிறாள்..
யார் இவள்..
என் விரல்
கோர்க்கிறாள்..
என் குரல்
கேட்கிறாள்..
வண்ணங்களை
எனதாக்குகிறாள்..
வானம் அதை
எனதாக்குகிறாள்..
பட்ட மரத்தில்
காதல் பூ கொய்கிறாள்..
என்னை சொந்தமாக்கி
எனக்கு சொந்தமாகிறாள்..
யார் இவள்..
காற்றாய் என்னுள்
நுழைந்தவளே
காதல் கருவாய் என்னுள்
உதித்தவளே
என் இமைக்கதவுகளை
இடை மறிப்பவளே
என் இதயவீட்டில்
குடியிருப்பவளே
எதார்த்தங்களில் என்னுள்
திளைத்தவளே
எதிர்காலமாய் என்னுள்
முளைத்தவளே
பார்வை அம்புகளால்
சாய்த்தவளே
என் பசி,தூக்கம்
மாய்த்தவளே
உண்மைகள் காதல்
உணர்த்தியவளே
உணர்வே
அழகே
உறவெனும் வலையினிலே
உழன்றிடும் பெண்மயிலே
உண்மையை சொல்லிவிடு
உன் உள்ளத்தில் நான் என்று..
முட்களில் உறங்குகிறேன்
உன் மடியினில் ஏந்திகொள்
உன் முகம் பார்க்க ஏங்குகிறேன்
முழுநிலவாய் வந்துவிடு
அமைதியை தேடுகிறேன்
அருகினில் தோன்றிவிடு
மோட்சம் வேண்டுகிறேன்
என் மூச்சை நிறுத்த
கறந்த பால் காம்பேராது
விழுந்த இலை கிளை சேராது
தொலைந்த காதல் மீண்டு வாராது
மீண்ட காதல் முதல் காதல் ஆகாது
வானம் தாண்டி
சிறகு விரிக்கிறாய்
உன் வாசம் தேடி
தினமும் பறக்கிறேன்
கடல் தாண்டி
காலம் கடத்துகிறாய்
உன் குரல் தேடி
நாளும் துடிக்கிறேன்
மலை தாண்டி
மலைக்க செய்கிறாய்
என் மார்போடு
நிறுத்த எண்ணுகிறேன்
அலை தீண்டி
ஆனந்தம் கொள்கிறாய்
உன் விரல் தீண்ட
விரதம் கொள்கிறேன்
ஆழ்கடலில் அரங்கேற்றம்
கொள்கிறாய்
என் அடி மனதில் அமர
ஏனோ மறுக்கிறாய்
விந்தை பெண்ணே..
என் கவிதை பயிர்கள்
வாடும் பொழுதெல்லாம்
உன் பிரிவுகள்,
உன் பிரிவுகள் மட்டுமே
சாரலாய்
தூரலாய்...
உன் பிரிவிலும்
நான் வாழ்கிறேன்
உன் நினைவுகளோடு..
உன் அருகிலும்
நான் வாழ்கிறேன்
உன் நிழலோடு..
நான் நடக்கும்
சாலைகளில் ,
எனை கடக்கும்
பேருந்துகளில்,
எதிர்நோக்கும்
பெண்களில்,
ஏமாற்றம் தரும்
கண்களில்,
இதழ்களை மறுக்கும்
கன்னங்களில்,
இமைகளை மறிக்கும்
எண்ணங்களில்,
காதல்
கவிதைகளில்,
கல்யாண
பேச்சுகளில்
மீண்டும் மீண்டும்
தொலைகிறேன்,
தீரா மேகங்களாய்
திரியும்,
உன் நினைவுகளில்..