பாப்பாரப்பட்டி நாகராஜன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாப்பாரப்பட்டி நாகராஜன் |
இடம் | : தருமபுரி மாவட்டம் |
பிறந்த தேதி | : 14-Nov-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 147 |
புள்ளி | : 27 |
நான் ரகசியம் காப்பவன்
கோவர்த்தன மலையை
கோவிந்தா நீ சுமந்து
கோ இனம் காத்ததாய் வரலாறு !!
இன்று திருநீர் மலையாவது
தூக்கி நில் !!! துயரத்தில் எம் இனம்
மூழ்குகிறது சென்னையோடு !!
பிரளயம் பிறந்ததோ !!
ஆலிலையில் நீ மிதெந்தென்ன ?? நாளை
ஆளில்லை உனைத் தொழ !!
பாப்பாரப்பட்டி நாகராஜன்
1 டிசம் 2015
சுனாமி 10-வது ஆண்டு நினைவு அஞ்சலி
காலனின் பினாமியாய்
வந்த சுனாமி !!
கடலில் அலைகளுக்கு
பதில் தலைகள் !!
நிலத்தின் நான்காவது
பாகமானது கண்ணீர் !!
சில்லரை காசுகளாய்
கல்லறையில் மனிதர்கள் !!
உயிர்களை உள்வாங்கியது
உவர் நீர் !!
மறப்பதையே மறக்கவைத்த
மாபெரும் சோகம் !!
மீண்டும் வந்து விடாதே !!
நீயும் அனாதை ஆவாய் !!
பாப்பாரப்பட்டி நாகராஜன்
டிசம் 26 2014
ஆசிட் வீசினாய் !!
கண்களால் !!
ஆபத்தில்
வாழ்க்கை !!
பணக்கட்டுகளின்
சூழ்ச்சியால்
சீட்டுக்கட்டாய் சரிந்தது
கம்பிகளை நம்பிய குடிசை !
சீமான்களும்
கோமான்களும் தமது மாளிகைக்கு
அடிக்கல்லாக்கினர்
அப்பாவி உயிர்களை !!
புதுப்பது மரணவித்தைகள்
ஆண்டவனுக்கே
சவால் விடுகின்றன !!
அச்சத்தில் அவன் !!
மனதின் அஸ்திபாரம்
சரியில்லை என்றால் சரிவது
அடுக்குமாடி மட்டுமல்ல !!
மனிதமும் தான் !!
#Kபாலச்சந்தர்
என்பதும் இன்று
உண்மையானதே !!
கைலாசம் பாலச்சந்தர் !!
மரணத் திரைப்படம் இயக்கச் சென்றான் !!
கால்ஷீட் தந்தவன் காலச்சந்தர் !!
மீளாச்சந்தராய் நம்
பாலச்சந்தர் !!
திரைக்குபின்னால்
திரிந்தவர்களுகெல்லாம்
திசையெங்கும் பறக்க
சிறகுகள் தந்தவன் !!
உணர்வுகளை செதுக்கும்
உண்மைகள் சொன்னாய் !!
உள்ளத்தின் உருவை
ஊரறியச் செய்தாய் !!
உன் #கையளவுமனசில்
வானளவுக் கற்பனைகள் !!
#புன்னகைமன்னா புதைந்தேன் போனாய் !!!!
#தண்ணீர்_தண்ணீர் !! கண்களில் !!
உயிருடன் வாழ்ந்த
உன்னதத் திரைப்படம்
சுபம் காண்கிறது !!
இன்றே இப்படம் கடைசி !!
ஆன்மா அமைதியுறட்டும் !!
பாப்பாரப்பட்ட
பணக்கட்டுகளின்
சூழ்ச்சியால்
சீட்டுக்கட்டாய் சரிந்தது
கம்பிகளை நம்பிய குடிசை !
சீமான்களும்
கோமான்களும் தமது மாளிகைக்கு
அடிக்கல்லாக்கினர்
அப்பாவி உயிர்களை !!
புதுப்பது மரணவித்தைகள்
ஆண்டவனுக்கே
சவால் விடுகின்றன !!
அச்சத்தில் அவன் !!
மனதின் அஸ்திபாரம்
சரியில்லை என்றால் சரிவது
அடுக்குமாடி மட்டுமல்ல !!
மனிதமும் தான் !!