நித்திலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நித்திலா |
இடம் | : சென்னை (மதுரை, பரமக்குடி) |
பிறந்த தேதி | : 31-May-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 2 |
கணிப்பொறியியல் துறையில் பணியாற்றுகிறேன். தமிழ் கவிதைகளில் ஆர்வம் அதிகம்.
ஜனவரி 26
இந்திய குடியரசு தினம் ;
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.
ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர்.இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக (...)
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்... ம்ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
பலமொழிகள் பாடம் பெற வரவேண்டும்.. ம்ம்...
(...)
தமிழகத்தின் மணிமகுடம்
தலைநகராம் சென்னையிலே
அணிகலனாய் அமைந்ததுதான்
பச்சையப்பன் கல்லூரி!
வளைவான நுழைவாயில்
வருகவென வரவேற்கும்
வானுயர்ந்த மரங்கள்
வாழ்விற்கே வழிகூறும்!
முன்னே மணிமண்டபம்
உயர்வான தொருபீடம்
வீற்றிருக்கும் பச்சையப்பன்
பக்கத்திலே பேரறிஞர்!
அரங்கம்போல் வகுப்பறைகள்
அறிவான ஆசிரியர்கள்
சிந்திக்கும் மாணவர்கள்
சிப்பிக்குள் முத்துபோல!
அமைச்சர்கள் தலைவர்கள்
ஆட்சித்துறை அலுவலர்கள்
உருவாக்கிய உலைகளமாய்
உள்ளதெங்கள் கல்லூரி!
-சுகுமாருடன் சூர்யபுத்திரன் (Dr.சூர்யா 1995)
வாசிக்கும் கவிதைகளில் எல்லாம்
வந்து செல்வது
உன் முகமாக இருந்தாலும்
தந்து செல்வது
ரணங்களாகத்தான் இருக்கிறது ...........!
@@ யாழினி @@
கண்ணனடி முன் நின்று
பலமுறை உரைத்துவிட்டேன்
என் காதலை
நீ பழகுவது
பொய் என்று அறியாமல் ..............!
அவள் எழுப்பிய
பல வினாக்களுக்கு
பதில் அளிக்காமல்
அமைதியாக
உறங்கிக்கொண்டிருக்கிறது
என் காதல் ............!
எதிர் வந்து நீ நின்று
என் காதல் நீயென்று
ஆனந்த அழுகையிலே
அழகாய்த்தான் சொல்வாயோ
பொங்கி வழியும் கண்ணீரை புடவையிலே
துடைக்கும் முன்னே உன்
பொன்விரல் கொண்டு
மெதுவாகத் துடைப்பாயோ
மலரும் சோர்ந்துவிடும், தேனும் தீர்ந்துவிடும்
மலர்வனம் வாடிய போது
வண்டுருவம் மாறி
வான்மழையாய் பொழிவாயோ
பணியிலும் பாதையிலும் படுத்தி எடுக்கும்
காம நாய்களால் நிலை
குலைந்த என்னை
நிமிர்த்திவிட வருவாயோ
உடைகளின் மாயத்தை, முகத்தின் சாயத்தை
முழுவதுமாய் மறந்து, மனம்
கண்டு மகிழ்வுடன்தான்
காதல் செய்வாயோ
இவனோ அவனோ என்று
இமைகளிரண்டும் தேடிய போது
இங்கேதான் உள்ளேன் என்று
இன்றே நீ வருவாயோ
நிழற்படம் எடுத்ததில்லை.
நிழலாய்
தோழனாய்
குருவாய்
தொடர்கிறாய்.. உற்ற தருணங்களில்
- சமர்ப்பணம் நண்பனுக்கு