vivin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vivin
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Apr-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  0

என் படைப்புகள்
vivin செய்திகள்
அஹமது அலி அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 7:43 am

மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!


நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!


மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!


வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!


பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!


எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!

மேலும்

மந்திர மொழயில் ஓர் வசந்த அழைப்பு .. சுந்தரக் கவிதை ! 21-Aug-2015 10:27 am
சூப்பர் ஜி 03-Jul-2015 11:47 pm
பாதிக்கு மேல புரியலை.. அனாலும் ரொம்ப நல்ல இருக்கு! :) 04-Dec-2014 10:03 am
மிக்க நன்றி தோழி 15-Nov-2014 9:27 pm
vivin - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2014 2:20 pm

அடர்த்தியாக இருந்த பசுமையை இரண்டாகப் பிரித்தபடி,பாம்புபோல நீண்டு கிடந்த மலைப்பாதையில்,அந்த உயர் ரகக் கார் மலையின் உச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.கொண்டை ஊசி வளைவுகளிலும்,கொஞ்சம்கூட வேகத்தைக் குறைக்காமல் அநாயசமாகப் பறந்துகொண்டிருந்த அந்தக் காரினுள்,மூன்று இளைஞர்கள் இருப்பது தெரிந்தது.வனத்திற்குள் இருந்து வந்துகொண்டிருந்த விதவிதமான பறவைகள்,விலங்குகளின் சப்தம் எதையும் ஊன்றிக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பது,காருக்குள் அதிர்ந்து கொண்டிருந்த இசையிலிருந்து தெரிந்தது.

“டேய்..மைக்கேல்..,இன்னும் கொஞ்ச தூரத்திலே வலதுபக்கம் ஒரு மண் ரோடு பிரியும்.அதிலே வண்டியைத் திருப்பிக்கோ..”,

மேலும்

சொல்லுங்கள் அண்ணா ...... திருத்திகொள்கிறேன்..........மிக்க நன்றி...... 19-Feb-2015 1:12 pm
நல்ல கதை அமைப்பு ... கடைசி வரை த்ரில்லிங் ஆகா இருந்தது . சில சின்ன குறைகள் இருக்கிறது . தனி விடுகையில் ... தொடருங்கள் . 19-Feb-2015 12:13 pm
மிக்க நன்றி நண்பரே....... 03-Jul-2014 8:03 am
உங்கள் கதையிலும் ஒரு கவிதையின் வர்ணனை மிக அருமை. 02-Jul-2014 9:39 pm
vivin - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2014 5:56 am

திருக்குறள் ஏன் 2 அடியில் உள்ளது

வித்யாசமான பதில் தாருங்கள்

மேலும்

அப்பக் கரைச்சுக் குடிங்க. 19-Jun-2014 2:41 pm
அதையும் கைட்டதானே அடிக்கணும்?... 19-Jun-2014 2:40 pm
மனிதன் எவ்வளவு பெரிய வாழ்க்கை வாழ்ந்தாலும், அவன் இறந்த பின்பு சொந்தம் என்பது ஆறு அடி தான். அந்த மாதிரி பெரிய பொருள் அடங்கிய எந்த ஒரு விஷயமும் சிறு சொற்களில் அடங்கும் என்று திருவள்ளுவர்க்கு முன்பே தெரியும். 19-Jun-2014 2:14 pm
உலகின் முதல் ட்விட்,திருக்குறள்தான். (ஏற்கனவே என் எண்ணத்தில் பதிந்தது.......) 19-Jun-2014 1:54 pm
vivin - அஹமது அலி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2014 10:17 pm

நாவின் பாவங்கள்..!

மேலும்

உண்மை நண்பரே!! 21-Jun-2014 4:31 pm
unmai.... 19-Jun-2014 1:50 pm
உண்மையே..! பொன் மொழியில்... நன்மொழி..! 19-Jun-2014 12:58 pm
இம்மொழி பொன்மொழி. பொய்,புறம்,அவதூறு,கேலி,கிண்டல்,பரிகாசம்,குத்திப்பேசுவது,பொய் சாட்சியம் சொல்வது இப்படி மனிதை மிகவும் மோசமானவனாக வெளிக்காட்டுவதே இந்த நாவு தான். ''தன் தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் தன் தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் எவரொருவர் பேணி பாதுகாக்கின்றாரோ அவர் வெற்றியடைந்தவர்"-நபி மொழி 19-Jun-2014 12:05 pm
vivin - Tania அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2014 3:16 am

பகவத்கீதையரின்
பகலவனும்
திருக்குரானியரின்
இளம்பிறையும்
விவிலியத்தாரின்
விண்மீனும்
சின்னங்கள் வேறானாலும்
சிதறி இருப்பது
ஓர் வானில் தானே !

இயற்கையே
இணைந்து இருக்கும்போது
இடையில் பிரிவினை செய்திட
இன்னமும் நானும் நீயும்
நினைப்பதுவும் ஏனோ ?

மனிதா மதத்தால்
நாம் வேறுபட்டாலும்
அது காட்டும்
மார்க்கத்தில்
ஒன்று தானே !

மேலும்

மிக்க நன்றி 13-Aug-2014 2:09 pm
அருமையான கரு கவியில் நன்று தோழரே 11-Aug-2014 5:03 pm
அருமை நல்ல சிந்தனை .நல்ல கவி பொருள் தேர்வு 14-Jun-2014 2:11 pm
எல்லோரின் கருதுக்குகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி 14-Jun-2014 2:11 pm
vivin - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 11:21 am

உங்கள் குழந்தை சரியாய் வளர நீங்கள் அதிபுத்திசாலியாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் அன்பான, ஆனந்தமான, நேர்மையான மனிதராய் இருந்தால் போதும்.

மேலும்

பகிர்ந்த அனைவருக்கும் நன்றி 16-Jun-2014 9:49 am
vivin - விநாயகபாரதி.மு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 5:39 pm

நல்ல நட்பு !!!!!!!!!

மேலும்

vivin - Thanga Arockiadossan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2014 11:21 pm

அப்பா .........
==========
அப்பா அனுபவத்தின் அகராதி
பாசத்தோடு தன்னம்பிக்கையும் ஊட்டியவர்
தான் அடியமுடியாத இலக்கை - நம்மை
அடையவைத்து அழகு பார்த்தவர்

அப்பா ................
நம் முகவரிக்காய்
தன் விலாசத்தை தொலைத்தவர்
நாம் சூரியனாய் வளம் வர
தன்னை அழித்து வெளிச்சம்
தந்த மெழுகு வர்த்தி ..........!

அப்பா ....!
பொய்யான உலகில்
நம்மை மெய்யாய் படைத்த
பிரம்மா .......!

கருவை சுமப்பவள்
தாய் என்றாள்- பிள்ளைகளின்
எதிர்கால கனவுகளை சுமப்பது
அப்பாக்கள் மட்டும் தான்

கல்லூரி வாசல்களில் மரங்கள்
நின்றிகிறதோ இல்லையோ....!
பிள்ளைகளுக்கு சீட்டு வாங்க
அப்பாக்கள் மரமாய் நிற்கின்

மேலும்

தந்தைக்கு அருமையான புகழாரம் 25-Jun-2014 2:31 pm
மிக அருமையான படைப்பு. தந்தைகளுக்காக சமர்ப்பணம் 15-Jun-2014 9:40 pm
வாழ்த்துக்கள் தந்தையே ! தமிழ் கவிக்கு நீ ! தமிழ் வளர்க்கும் யாவரையும் வாழ்த்துகிறேன் நான் ! 15-Jun-2014 9:37 pm
கிட்டத்தட்ட நீங்கள் எழுதியிருக்கும் ஒன்றிரண்டு பத்திகள் போல்தான் நானும் எழுதி இருப்பதாக தோன்றுகிறது. முதலிலேயே இதனை படித்திருந்தால் நான் என் கவிதையை மாற்றி அமைத்திருப்பேன். பிரதி பலனை எதிர் பார்க்காமல் கரன்சியை மட்டும் வழங்கும் A T M எந்திரங்கள் .......! வங்கி என்று கூட சொல்லலாம். நான் அப்படிதான் எழுதி இருக்கிறேன். தந்தையர் தினக் கவிதை தந்தைக்கு பெருமை சேர்க்கிறது. அருமை. கவி அரங்கம் முடிவதற்குள் ஏன் வெளியேறி விட்டீர்?? தமிழன் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றமைக்காக சான்றிதழ்கள் வழங்கினார்கள். உங்கள் பெயர் அறிவிக்கப் பட்டபோது நீங்கள் இல்லை. 15-Jun-2014 9:30 pm
மேலும்...
கருத்துகள்

மேலே