பைத்தியக்காரன்- கருத்துகள்

thousands of Iranian women are taking off their veils and publishing pictures of themselves online, igniting a debate about the freedom to wear or not wear the hijab.

"Iran's state television is only showing one side of society, only the people with hijab. It gives no airtime to people who have a different voice, who have a different lifestyle."

Would Iranians vote against the forced hijab had they been able to participate in a referendum about the issue today? "I can't predict but freedom to have hijab is a basic right, not one to put on a referendum."

She said: "I want to live in a country where both me, who doesn't have hijab, and my sister, who prefers hijab, can live along each other."

In the 40C heat of an Iranian summer, many women in the country push the boundaries, wearing loose hijab or sporting clothing and haircuts the authorities deem "un-Islamic". At the same time, the religious police are often deployed on the streets, cracking down on those with "bad hijab" or arresting those who defy the rules. (Excerpts from The Guardian article on 12th may 2014)

மிக்கேல் ஹார்ட்டின் The 100 most influential people நூலிலிருந்து மொழிபெயர்த்திருக்கிறீர்கள். நன்று. தாங்கள் அந்நூலை தனித்தனிக்கட்டுரையாக மொழிபெயர்க்காமல், வரிசைப்படி மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் எனக்கருதுகிறேன். வாழ்த்துக்கள்.

வணக்கம், தங்களுடன் எனக்கு நேரடித் தொடர்பு இல்லை. இருந்தாலும் என் மீது அக்கறை கொண்டு எழுதியதற்கு நன்றி. மூன்று நாட்களாக இடைநீக்கத்தில் இருந்ததால் எழுதுவதற்கான மனநிலை எனக்கு இல்லை. நான் எனது உண்மைப் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதை முதலிலேயே கூறி விடுகிறேன். படைப்புகளுக்கும், படைப்பாளியின் இன, மத, மொழி, பாலினம், பெயர் முதலியவற்றுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்ற கருத்தினைக் கொண்டவன் நான். இருப்பினும் என்னைப் பற்றிய சில மேலோட்டமான விஷயங்களைச் சொல்லி விடுகிறேன். நான் விமானப்பொறியியல் துறையில் இரண்டாமாண்டில் படித்துக் கொண்டிருக்கிறேன். குமரி மாவட்டத்தைச் சோந்தவன்.
எனது படைப்புகளைப் பற்றி நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். நன்று. தமிழொளிப்புதல்வனின் விமர்சனத்தை நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். நன்று. தமிழொளிப்புதல்வனும் நான் தான், பைத்தியக்காரனும் நான் தான். இது உங்களுக்கு ஒரு வேளை ஆச்சரியமாக இருக்கலாம். அதற்கான காரணம் மிக எளிமையானது. தோல்வியில் ஒரு கடிதம் என்ற எனது படைப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னால், அதாவது நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் போது எழுதப்பட்டது. தமிழொளிப்புதல்வன் என்ற பெயரை இந்த சோதனை முயற்சியில் உபயோகித்து அதிகமாகக் குழப்ப வேண்டாம் என்றே நான் விரும்பினேன்.
எனது படைப்புகளின் காலவரிசையை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். சிதையும் திராவிடம், காதலும் காமமும், நான் என் பயணத்தைத் தொடர்கிறேன் ஆகிய படைப்புகள் எட்டு மாதங்களுக்கு முன் எழுதப்பட்டன. இயேசு என்னும் மனிதர், சிறையிலிருந்து சில கிறுக்கல்கள் ஆகிய படைப்புகள் சமீபத்தில் எழுதப்பட்டவை. மொழிபெயர்ப்புகளைப் பற்றி நான் கூற விரும்பவில்லை. தோல்வியில் ஒரு கடிதம் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. உண்மையைச் சொல்லப் போனால அது ஒரு தற்கொலைக் கடிதம் தான். அவ்வெண்ணம் மனதில் எழுந்த பின்பு தான் நான் அக்கடிதத்தை எழுதினேன். என்னைப் பற்றி என்னை விட வேறு யாரும் நன்றாக அறிந்திருக்க முடியாது அல்லவா?
தாங்கள் என் மீது கொண்டுள்ள அக்கறையைத் தங்கள் எழுத்தில் இருந்து அறிகிறேன். இருந்தாலும் நீங்கள் இந்த அளவு எடுத்துக்காட்டுகளோடு எழுதியிருக்க வேண்டியதில்லை. எடுத்துக்காட்டுகளை நானே போதுமான அளவில் அறிந்திருக்கிறேன்.
நீங்கள் என்னைப் பற்றி அவ்வளவாகக் கவலை கொள்ளத் தேவையில்லை. நான் எனது வாழ்க்கையை ஒரு திரைப்படத்தைப் போல், நாடகத்தைப் போல் இரசிக்க விரும்புகிறேன். ஒரு துறவியின் மனநிலையுடன். துறவியாக அல்ல.......
தங்கள் அன்புக்கு நன்றி.

_

எங்களூரிலிருந்து நூலகம் 4 கி.மீ தூரத்தில் இருக்கிறது. ஆனால் மதுக்கடை 1 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் மதுவை ஒழிக்கப் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
1. ஒரு மாவட்டத்துக்கு ஒரு மதுக்கடைக்கு மேல் இருக்கக் கூடாது. அதிலும் ஆயிரம் ரூபாய்க்கு மேலுள்ள மதுவகைகளையே, அதுவும் மதுவருந்த அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கே விற்பனை செய்ய வேண்டும். (இந்த அனுமதிச்சீட்டு பெறுவது மிகவும் சிரமமான விஷயமாக இருக்க வேண்டும்.)
2. கள்ளச்சாராயம் இந்த சமயத்தில் தலைதூக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நிச்சயமாக நஷ்டம் வரும். ஆனால் மக்களின் மூளை மழுங்கலை லாபமாகக் கொண்டு மக்களாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்துவது தேவையற்றது.

எல்லா விஷயங்களையும் அவங்களே பண்ணனும்னு சொன்னா எப்படி ஐயா? நீங்களும் களத்தில் இறங்குங்களேன்.

நான் தங்களின் கருத்துக்கு என் கட்டுரை மூலம் பதில் அளித்துவிட்டேன். தங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

தங்கள் கட்டுரைக்கு எனது கட்டுரை மூலம் பதில் அளித்துள்ளேன். முடிந்தால் படித்துப்பார்த்து தங்கள் பதிலைப் பதிவு செய்யவும்.

தோழரே, உங்கள் கட்டுரைக்கு நான் பதிலளிக்கும் முன் நீங்கள் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

1. ஆரியர் திராவிடர் என இரண்டு வேறுபட்ட இனக்குழுக்கள் இருந்தது என்பது உங்கள் கருத்தா?
2. திராவிடக் கருத்தியல் தமிழர்களை ஏமாற்றுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
3. ராபர்ட் கால்டுவெல் இந்தியாவில் பிளவு ஏற்படுத்த திராவிட - ஆரிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நிச்சயமாக எழுதுகிறேன், நேரம் கிடைக்கும்போது.

முன் குறிப்பு:இந்தக் கட்டுரையாசிரியர் மீது எனக்குத் தனிப்பட்ட விரோதமா, குரோதமோ இல்லை.

இந்தக் கட்டுரையாசிரியர் இக்கட்டுரையை (இதைக் கட்டுரை என்று சொல்ல முடியவில்லை) எழுதுவதற்குத் தகுதியற்றவர் என்று நான் கருதுவதற்கான காரணங்கள்:
1. தமிழில் எழுத்துப்பிழையில்லாமல் பொறுமையுடன் தட்டச்சு செய்யக் கூட இவரால் முடியவில்லை.
2. காடுவேல்ஸ் என்று இவர் குறிப்பிடும் கால்டுவெல் பாதிரியார் எழுதிய Comparative Grammar of Dravidian Languages என்ற நூலைக் கூட இவர் படித்ததில்லை.
3. திராவிடம் என்ற கருத்தியலைப் பற்றி, அக்கருத்தியல் எதனால் எழுந்தது என்பதைப் பற்றி இவர் அறியவில்லை.
4. சிந்து சமவெளி நாகரிகம் எதனால் அழிந்தது என்பதைப் பற்றிய தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. பல கருதுகோள்களே எழுந்துள்ளன.

(இத்தகைய கட்டுரை தேர்வுப்புள்ளிகளாக ஐந்து புள்ளிகளைப் பெற்றது ஆச்சரியமளிக்கிறது)

இருந்தாலும், இக்கட்டுரையை வெளியிடுவதில் அவருக்கு இருக்கும் சுதந்திரத்தை நான் தடை செய்ய விரும்பவில்லை. அவர் இன்னும் எழுதட்டும்.


அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடாது. நீங்க சொல்றதென்னவோ உண்மை தான். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பை நான் பார்த்ததில்லை. அதனால் தான் இந்தக் கருத்துகளைச் சொல்கிறேன். நீங்கள் மறுப்பாக சான்றாதாரங்களுடன் ஒரு கட்டுரை எழுதலாம், நீங்கள் அனுபவித்த எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பைப் பற்றி.......

சத்தியமாக நான் இன்னும் உலகத்தில் தான் இருக்கிறேன். கோவையில் ஒரு சிற்றூரில் தான் இருக்கிறேன். அதில் தங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். என்னால் முடிந்த விஷயங்களை, எனது திறனுக்குட்பட்ட விஷயங்களை நான் இன்னும் செய்துகொண்டு தான் இருக்கிறேன். நிச்சயமாக இந்த அரசியல் முறைகள், சமூக பொருளாதார முறைகள் மாற வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவன் நான். அதற்கான கருத்தியல் போரையே நான் மேற்கொண்டு இருக்கிறேன். நிச்சயமாக இப்போரில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன்.

நிச்சயமாக நான் பிரிவினையை ஏற்படுத்த முயலவில்லை. மதங்கள் அந்த வேலையை மிக சிறப்பாகவே செய்து கொண்டிருக்கின்றன. எனக்கு எந்த மதத்தின் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை. நான் சிறு வயதிலிருந்து இறைமறுப்பாளனாக மாறும் வரை கிறிஸ்தவ மதத்தில் தீவிர பற்று கொண்டவனாக வாழ்ந்தவன். அதனால் நான் கிறிஸ்தவ மதத்தின் மீது தனிப்பட்ட துவேஷங் கொண்டவன் என்று நீங்கள் நினைக்கத் தேவையில்லை. எல்லா மதங்களின் மீதுமான எனது பார்வை இது தான். "உங்கள் ஆலயங்கள் அழகானவை, மதிப்பு மிக்கவை, உங்கள் இசை சிறந்தது, பீடங்கள் சிறந்தவை, உங்கள் பாடல்கள் அழகானவை, உங்கள் பிரார்த்தனை உருக வைக்கக் கூடியது, சாம்பிராணிகள், மணிகள், பூக்கள், தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் அழகானவை, உங்கள் தத்துவங்கள் புரிந்து கொள்ள இயலாதவை, உங்கள் போதகர்கள் பேச்சுத்திறன் கொண்டவர்கள், ஆனால் உங்கள் மதத்தில் ஒரு குறை உண்டு, அது உண்மையானது அல்ல."

தோழரே, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. மனித இயல்புகளையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி பேசுகிறேன். பிறர்நலம் கருதி வாழ்க்கை நடத்தியவர்கள் என்று அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் கூட தங்கள் சுய அனுபவங்களால், சுய நலன்களைக் காக்க செயல்பட்டவர்கள் தான். சுயநலவாதிகள் ஒரு சிலர் தான் என்று நீங்கள் எதை வைத்துக் கூறுகிறீர்கள்? அனைத்து மனிதர்களுமே சுயநலவாதிகள் தான். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி எண்ணிப் பார்ப்பீர்களானால் இது புரியும்.

ஏதோ தமிழ் சினிமா கதை மாதிரியே இருக்குய்யா. இதெல்லாம் போதாது சார்.

கதை நன்றாகவே இருக்கிறது. நடையில் கொஞ்சம் கவனத்தை செலுத்துங்கள்.

என்னய்யா? குடும்பமலர் டைப்புல எழுதுறீங்க? அதுக்கு நெறய பேரு இருக்காங்க. நாம வித்தியாசமா ட்ரை பண்ணுவோமே.

இன்றும் தொடரும் இந்நிலையைப் பார்க்கும் போது, "வெள்ளைக்காரன் போய் ஐம்பது வருடமாகியும் என்ன கிழித்தீர்கள்?" என்று கேட்கத் தோன்றுகிறது.

கதையில் நெகிழ வைக்கக் கூடிய ஒரு தன்மை இருக்கிறது. வெகு இயல்பான நடை.

சிறுகதைக்கு தேவையான செயற்கைத்தனம் இல்லாத நடை இருக்கிறது. வாழ்த்துக்கள்.


பைத்தியக்காரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே