மீண்டும் அகரம்- கருத்துகள்

மின்னஞ்சலில் நான் பெற்றது இம்மட்டே ! இன்னமும் உண்டெனில் அனுப்பிட வேண்டுகிறேன் மரபு மா மணியே...

நட்பு சங்கிலி இப்படித்தான் இருக்க வேண்டும் பார்த்தி...நன்று...தொடர்க...

ஏண்டா அம்பி...அப்பிடி இப்படி பார்த்து பில்ளையாரிண்டயே அழிச்சாட்டியம் மன்னரிஎடா...இது தகுமோ.டா அம்பி.....

இக்கதை எழுதி வெளியிட்ட அகரம் என்ன பாடு பட்டது தெரியுமா தோழா..? மேற் சாதியின் தலித் பற்றி நான் எழுதியது தான் காரணம்..நிறைவுப்பகுதி
பதிந்துள்ளேன் தோழா..வாசிக்கவும்...பிறகு இன்னும் பேசுவோம்...

நன்றி....நிறைவுப்பகுதி பதிந்துள்ளேன்.வாசித்து பார்க்கவும்...

இந்த ஆலயங்களில் அர்ச்சனை என்ற பெயரில் மக்கள் செலவிடும் தொகை பாரியளவிலானது... -------------------------------
ஆமென் தோழா...என்னைக்கேட்டால் அனைத்து மத ஆலய சொத்துக்களையும் நாட்டுடைமையாக்கி,இந்த மக்களுக்கு வழிபாட்டு வரி என்று ஒன்று போடா வேண்டும்...இந்த நிதியை ஆளுங்கட்சி ஊழல் செய்து 'சுவாகா ' செய்யாமல் இருக்க அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இந்த நிதி மூலமே வழங்கவேண்டும்...இதனால் உபரி ஆகும் அரசு நிதிமூலம் அதிகாலை ஒன்றிணைக்க வேண்டும்...விவசாயி மகிழ்வான்...பிறகு அனைத்து மக்களுக்கும் சுகாதாரம் "உண்மையிலேயே "உறுதிப்படுத்த வேண்டும்..கல்வியின் உயர் நிலைவரை பெண்களுக்கு இலவசமாக கட்டாயமாக்க வேண்டும்...ஆண்கள் கண்டிப்பாக ராணுவ பயிற்சி பெற ஆலய நிதியை பயன்படுத்த வேண்டும்...மருந்து கல்வி தவிர அனைத்து இலவசங்களையும் ஒழித்திட வேண்டும்...ஆலயங்களில் வழிபாடு காலம் போக எஞ்சியுள்ள காலங்களில் கல்விக்கூடங்களாக ஆலயங்கள் செயல்பட வேண்டும்...எந்த பிரிவினரும் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும்...
எல்லோரும் எல்லாமும் பெற்றிட வழி செய்ய வேண்டும்...

இக்கதை 1995 ல் எழுதப்பட்டது...!!! பலத்த விமர்சனத்திற்கு உள்ளான கதை இது...!! அகரத்தில் வெளியானது...!! இக்கதை வாசித்துவிட்டு சிலர் என் மீது காழ்ப்பு அடைந்தனர்-மொழி நடை வைத்து , என்னை பிராமணன் என நினைத்து....!!!

சில பாகங்களில் முடியும் இது....

பசிக்குப் சுசி தருவது கவிதை
புசிக்க சுசி தருவது கவிதை
ருசிக்க சுசி தருவது கவிதை
ரசிக்க சுசி தருவது கவிதை
கசியும் கவலை அழிப்பது சுசியின் கவிதை
நிசியிலும் எனக்குப் பிடித்தது சுசியின் கவிதை...
அசையும் சீரும் சுசியிடம் கெஞ்சும்
இசையும் இலக்கணமும் சுசியிடம் அஞ்சும்
விசையும் வேகமும் சுசியிடம் தஞ்சம்
வசையில்லா வரிகள் சுசியிடம் கொஞ்சும்...

என்ன சுசி ...எப்பூடி...இது உண்மை வரிகள் தோழா..உனது படைப்புகள் எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிடிக்கும்..!!

இருப்போம் என்ற நமது நம்பிக்கையும் எனக்கு அதிசயம்தான்....

அருமையான் படைப்பு...

மெட்டுக்கான கானா நல்ல பாடல்...வாழ்த்துக்கள்...

சால ,தவ ,நனி , கூர் , கழி ,.....முயற்சி..!

" அவனுக்கு துணை ஒன்றும் அவசியமில்லை. அவன் எப்போதும் ப்ரியங்களைப் போர்த்திக் கொண்டிருப்பது தன்னை யாரென்று அறிவித்துக் கொள்ள அல்ல...அவனின் உடலில் வாழ்க்கை கொடுத்த வடுக்களை மறைத்துக் கொள்ள; அவன் தனித்தவன். அவனுக்கான பெரும் பாடலை எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கிறது காலம். வாழ்க்கை சக்கரத்துக்குள் நின்று --கொண்டு கடமைகளைப் பேசி இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமற்று...நகரும் அவன் பொழுதுகளை யாருமே வரையறுக்க முடியாது.
---------------------------------------அருமை...வாலிப இலக்கணம்-பிலாக்கணம் இன்றி...!!
அருமை தோழா..

சரியை சார்ந்து இருப்பதும்
தவறு என்பதை தண்டித்து அழிப்பதும்
அறிவு வளர்ச்சியின் அடையாளங்கள்..-ஈரோடு தமிழன்பன்...

தோழா நல்ல படைப்பு...ரெளத்திரம் பழக பொய்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்-உண்மையை அறியவும் கூட...

ஒரு கவிதை ஒரு கட்டுரை என உமது நோக்கில் ஆகச்சிறந்தவைகளை மீண்டும் அகரத்திற்கு அனுப்பவும் ...!
நான் குழுவிற்கு அளிக்கிறேன்...

வந்தே ஏமாற்றியவனை வந்தே மாதரம் விரட்டியது...
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்...

அருமையான உணர்வு வெளிப்பாடு...வாழ்த்துக்கள்...


மீண்டும் அகரம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே