வழிப்போக்கன்- கருத்துகள்
வழிப்போக்கன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [17]
- hanisfathima [10]
- அன்புடன் மித்திரன் [7]
அதிக பசியில் இருப்பவனுக்கு அறுசுவை உணவு கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் கிடைக்குமோ அது போல ஒரு மகிழ்வை நீண்ட நாட்களுக்கு பிறகு தோழியின் கவிதை படிக்கும்போது உணருகிறேன்....புதிய சொற்கள் ..புதிய பரிணாமம் . மிளிரும் கவிதை ... இன்னும் இன்னும் எதிர்பார்கிறது மனம்..அழகான கவிதைகளை அள்ளி வழங்கும் அட்சயப்பாத்திரம் -கவியாழினி..... மிக அருமை தோழி
பொலிவான கவிதைக்கு பொருத்தமான படம்.. பாவும் நன்று படமும் நன்று .. தேங்கணை - மலரம்பு ,
பிரலாயிக்கும் - புலம்பும் ,
செண்டாடியது -நிலைகுலைந்தது ,
அந்தரங்கன் - அதிகம் விரும்பப்படுபவன்
இது எல்லாம் இப்போதுதான் கேள்வி படுகிறேன்..தொடரட்டும் யாழினி.. மிக அருமை
அடடா இந்த நிலவு கவிதை - ஜொலிக்கும் பௌர்ணமி... மேகம்தான் மழை பொழியும்..நிலா ஒன்று மழை பொழிவதை இப்போதுதான் பார்க்கிறேன்.. கவிதை மழை பொழியும் நிலா கவியாழினி .. அருமை ..
கண்கவர் குழந்தையின் கண் திருஷ்டிக்காக கன்னத்தில் வைக்கப்பட்ட கண்மை....(அழகாய்)கட்டிய வீட்டின் முன்னால் கருப்பு மை இட்டு கயிற்றில் தொங்க விடப்பட பூசணி.. மொத்தத்தில் இந்த ஞாபகமறதி - தோழி கவியாழினிக்கு கண்திருஷ்டி....
கவியாழினி னா கவியாழினி தான்.. கவிதைக்கு கவிதை கருத்து..மற்றவர்கள் துன்பத்தை உணர்ந்து எழுதும் பாங்கு..அருமையா இருக்கு தோழி..யோசிக்க தூண்டுது வரிகள் ஒவ்வொன்றும்..
நன்றி தோழியே
ம்ம் நன்று
எங்க ஊரு பாட்டு நல்லா இருக்குதுங்கோ
உங்கள் சிந்தனையை நினைத்து வியக்கிறேன்.. ஒவ்வொரு படைப்பிலும் சமுதாயம் சார்ந்த கருத்துகளை காண்கிறேன்..நாட்டின் வளர்ச்சிக்கு சறுக்கல்களாக அமையும் காரணிகளை கிறுக்கல்களாக கூறிய விதம் ரொம்ப அருமை... உங்கள் சிந்தனை சிந்திக்க தூண்டுகிறது..இது போல மிக நல்ல படைப்புகளை கொடுக்க என் மனமும் வேண்டுகிறது....
நல்ல தேடல்
நண்பனை தேடி பிடிங்க விடாதிங்க.. அழகான கவிதை..
அறியாத வயதில் புரியாமல செய்த காதலலால் தன் வாழ்க்கையினை தொலைத்த பெண்..தன் மகளுக்கு உரைக்கும் கூற்று மிக அருமை..சோகம் கவ்விய நிலையிலும் மகளை சுமையாக எண்ணாமல் சுகமா நினைத்து சொல்லும் பாங்கு கவிதையின் உயிரோட்டம்.. கருப்பு உலகில் வெள்ளை முத்து - அபலை பெண்கள் மனதில் நம்பிக்கை ஊட்டும் வித்து.. தொடரட்டும் தோழி கருத்துள்ள உங்கள் கவிதை எழுத்து..
கண்ணீர் குளத்தில்
மலர்ந்த வெண் தாமரை !!
நிர்வாணமாய் நான்
நின்றிருக்கையில் மானம்
காக்க வந்த ஆடை!!
நல்லா எழுதுறிங்க தோழி..உங்க கவிதை துவண்டு போன மனித பூக்களுக்கு தண்ணி ஊத்துற வாளி..கருத்து என்னும் முத்துக்கள் நிரம்பிய பேரலை இல்லாத ஆழி..உங்க சீர்திருத்த கவிதை என்றும் வாழி...
அருமை னு சொல்லி என் மனசு வெறுமைய போக்கிட்டிங்க.. நன்றி நன்றி
கிராமத்தில் பொறந்தவனுக்கு பாடுறது ஒரு பொழப்பா போச்சு அய்யா..கருது அறுக்கும்போது களைப்பு நீங்க ஒரு பாட்டு..காதல் பண்ணும்போது கவர்ந்து இழுக்க ஒரு பாட்டு ..இப்படி நெறைய இருக்கு .நன்றி அய்யா
ஒரு பக்கம் அடிக்கிறது உப்பு காத்து..மறுபக்கம் ஆடுறது அழகிய நாத்து..என்னை பாத்து .தூத்துக்குடி பக்கம்னு கேட்டிங்க நேத்து ..ஆமா அய்யா அந்த பக்கம்தான் :) சீதனம் வேண்டாம்னு சொல்லிட்டேன் சின்னபுள்ளய கட்டிக்க..கல்யாணம் பண்ணிப்பேன் கருத்தப்புள்ளய..கை நெறைய மொய் வச்சு காது குளிர வாழ்த்திடு போங்க ...நன்றி அய்யா
வருவா வருவான்னு நானும் காத்திருக்கேன் அவ வீட்டு வாசல பாத்துருக்கேன் ... வருவா ..கல்பனா சகோதரியே நன்றி
அழகான கவிதைதான் முத்தம்.படித்து மகிழ்கிறேன் நித்தம்.. முத்தம் - மா கோலம் வரைந்த அழகிய முற்றம்.. ..
நான் மழைல நனையல.நல்லா குளிச்சுட்டேன்..கொட்டும் மழைல குளிச்ச மாறி ஒரு உணர்வு உங்க கவிதை படிக்கும்போது.. உங்கள் கவிதை மழை தொடர்ந்து பொழியட்டும்..அதை படிக்கும் நெஞ்சில் சந்தோசம் வழியட்டும்...
மிட்டாய் ல கூட இனிப்பு,துவர்ப்பு,புளிப்புன்னு இருக்கு..எப்பவும் இனிக்கிற மிட்டாய் உங்க கவிதைதான் தோழி.மிட்டாய் மிட்டாய் இனிப்பு மிட்டாய் ..கவியாழினி கவிதை மிட்டாய்..தொட்டாய் தொட்டாய் மனசை தொட்டாய்..இனிய கவிதையால் ரசிகன் இதயம் தொட்டாய்... தொடரட்டும் தோழி