மோசே- கருத்துகள்

நீண்ட நாட்களுக்கு... மன்னிக்கவும் காலத்திற்கு பிறகு இந்த தளத்திற்கு வந்துள்ளேன். இங்கேயும் கலாச்சார வன்முறை அல்லது வழக்கமான படையெடுப்பு நுழைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அன்பர் நிலா சூரியன் அவர்களின் கருத்தினை ஓராண்டுக்கு பின்னர் இன்று வழி மொழிவதை பெருமையன்று எண்ணுகிறேன்.

'தருவி'க்கென
'அருவி'யென
ஒரு கவிதை!

கவிதைத் தலைப்புகளில் இரண்டாவதான உளவு என்பது சரிதானா?

அரசியலுக்கான தளம் இது இல்லை என்று கருதுகிறேன்,திரு டோனி அவர்களே! கவிதை பற்றி அறிந்தவர்கள் மட்டும் கருத்திடுங்கள். திரு. டோனி அவர்களே உமக்கு கலைஞரின் எந்த்க்கவிதை தெரியும், சொல்லும். அல்லது நீர் பட்டியலிட்டுள்ள புலவர்களின் எந்தச் செய்யுள் உமக்கு தெரியும். பெயர்கள் தெரிந்து வைத்திருப்பதனாலேயே பெரிய அறிவாளி என்று அறியப்படமாட்டீர்கள். உங்கள் கருத்து அறிவுடைமையின் வெளிப்பாடல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

அருமை. என் அன்பு நண்பரே!
அன்பு தாயின் ஆசை முத்தங்கள்
உலகத்தின் எத்திசையில்
தேடித்திரிந்தாலும்
கிடைக்காத
திரவியம்.

அழகு! என் இதயம் கவர்ந்த படைப்பு. அகன் அய்யா.


தொடர்ந்து ஒலித்துகொண்டு இருக்கின்ற உங்கள் ஓலக்குரல் ஓரளவிற்கேனும் உலகத்தின் காதுகளில் எட்டி இருக்கிறதா தம்பி? இந்தியாவின் நேசக்கரம் துணைக்கு வரும் என்ற பசப்பு மொழி தோற்கும் என்ற என் சொல் இன்று உண்ண்மையாகிவிட்டது. உங்கள் துயரம் சிலருக்கு தமிழ் நாட்டு அரசியல். நீங்கள் மலடிகளின் மயக்குமொழிக்கு பலியாககூடாது. சொல் விற்க இது நேரமில்லை. சுதந்திரம் யாசகத்தால் விழையாது. வெற்றுக் கவிதைகள் வேதனைக்கு மருந்தில்லை. மன்னிக்கவும்.

அன்புள்ள சகோதரர் நிலா சூரியன் அவர்களுக்கு,
உங்கள் அன்பான உசாவலுக்கு நன்றி. நலம். நலமறிய விழைகிறேன்.

அருமையான படைப்பு. உணர்வைத் தொட்டது. உள்ளம் மகிழுது.

நன்றி நண்பரே! நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் வாழ்த்து கிடைத்துள்ளது.

நான் இந்த கவிதைக்காக பெருமைப்படுகிறேன்.

அற்புதம்! அருமை!
அறிவுக் கண் திறக்கட்டும்!
இந்த கருத்து குருடர்களுக்கு!

அருமையான வரிகள்! என் இதயத்தின் ஆழத்தில் விதையாய் விழுந்து ஒரு விருட்சத்தின் ஆணி வேறாய் இறங்கிய வரிகள். வெல்லும் உங்களின் ஒவ்வொரு தமிழ் சொல்லும்.

அன்புள்ள தோழரே அபி,

என்னுடைய "பாடம் தந்தாய்! இளைய தீபமே!" கவிதைக்கு தாங்கள் தந்த கருத்திற்கு நன்றி. என் கவிதை பக்கத்திலேயே பதிவு செய்யமுயன்றேன். என்ன கோளாறோ இயலவில்லை. எனவேதான் உங்கள் பக்கத்தில் பதிவு செய்கிறேன். கொல்லப்பட வேண்டியவர் என்று எவருமில்லை. திருத்தப்பட வேண்டியவர்கள் ஏராளம் உண்டு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். அவர்கள் சம்பாதிப்பதெல்லாம் பாவம் மட்டுமே. இறைவனின் கையாய் இயற்கையே ஒரு நாள் அவர்களை சூறையாடும்.
நாம் சாட்சிகளாய் இருப்போம்.


அன்புள்ள நண்பருக்கு,
என்னுடைய பாடம் தந்தாய்! இளைய தீபமே! கவிதைக்கு தாங்கள் தந்த கருத்திற்கு நன்றி. என் கவிதை பக்கத்திலேயே பதிவு செய்யமுயன்றேன். என்ன கோளாறோ இயலவில்லை. எனவேதான் உங்கள் பக்கத்தில் பதிவு செய்கிறேன். நன்றி.

வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
அன்புடன்
மோசே


மோசே கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே