சுமித்ரா- கருத்துகள்

அருமை கயல் .... மனதின் ஆதங்கம் வரிகளில் தெரிகிறது

எவனையோ எவளையோ
காதலித்துவிட்டு பின்பு
வேறு எந்த
புதியவள் உடனோ
புதியவன் உடனோ
செய்வது என்ன ?

திருமணமா ? விபச்சாரமா ?
இந்த கேள்விக்கு எங்கையும் பதில் கிடைக்காது சந்தோஷ் ........ நல்லா இருக்கு

சொல்வதற்கு வார்த்தைகள் எதுவுமற்று இதை வடிக்கிறேன் ... அருமை என்று சொல்ல என் மனம் முயலவில்லை காரணம் உங்கள் வலிகளின் முழுமை தெரியாவிட்டாலும் ஒரு பாதி தெரிந்தவள் .... இது வெறும் பயணமல்ல உணர்வுகளின் சங்கமமாய் தோன்றியது வடித்த கற்பனைகளில் சில நிஜமாய் மாறும் நேரம் வரும் .... முயற்சிக்கு முட்டுக்கட்டை இருக்கலாம் வெற்றி நிச்சயம் ... நான் பலநேரம் என்ன வாழ்க்கை என்று எதை எதையோ யோசித்து தடுமாறிய நேரங்கள் பல உண்டு ....ஆனால் அதை கடந்து வரும் போதெல்லாம் கசப்பையும் ரசிக்கும் பக்குவும் பெறுவேன் ... அதிலும் இப்படியான சில வரிகள் படிக்க முற்படும்போது போது தன்னம்பிக்கையும் உடன் சேர்ந்து பயணிக்கிறது ....
குயிலும் காக்கையும்
புது மெட்டுகளை யாசகமிடும்
மயிலும் மானும்
நளின நடனங்களை சொல்லித்தரும்
எல்லாமே ரசித்திடு...
எல்லாமே........எல்லாமே
எதையுமே எதையுமே
ரசித்திடு...
ஆனால் சொந்தமாக்கிக்கொள்ளாதே..!
அது உன் காதல் தேவதையே என்றாலும்..
ரசித்துக்கொள்.. ரசிக்க மட்டுமே செய்..
ஒருப்போதும் உறவாக்கி கொள்ளாதே.
உறவாக்க நினைத்து ஏமாற்றமடையாதே.
வாழ்த்துக்கள் சந்தோஷ் பயணம் அருமை

வரிகள் அதனையும் அருமை மிகவும் ரசித்தேன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ...பிரியா

இது எதன் மீதான கோபமென்று நான் அறியேன் .... அனால் ஏதோ ஒரு உணர்வு பூர்வமான சாடலாக இருக்குமோ என்றே தோன்றுகிறது .... அருமை தோழி

சாகப் பிறந்தேன் என்பது
நிஜம்தான் என்றாலும்
சாவிற்கும் வாழ்விற்குமிடையிலுள்ள
நாட்கள் சாதிக்கப்
பிறந்தவைகளே....
என் எழுதுகோலுக்கும்
காகிதத்திற்குமிடையில்
சிக்கித் தவிக்கின்றன
எழுத்துருவங்கள்............

சாராசரி எடைக்கல்லில்
நிறுத்தப் படாமல்
தராசுத் தட்டுகளின்
முள் நுனியில்
கூரிய முனையாய்
நிலை நிறுத்திக்கொள்வேன்
என் வாழ்வை
எனக்காக..........
அருமை தோழி ...

சிறப்பாக இருக்கிறது .... வாழ்த்துக்கள்

என்னவென்று சொல்வதம்மா ..... அத்தனை அருமை அம்மா ....

சிறப்பான கட்டுரை நண்பரே .....நகுலனையும் தாஸ்தாவெஸ்கியையும் நான் இதுவரை படித்தது இல்லை இந்த கட்டுரைக்கு பின் அவர்களையும் படிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது ....
கலக்கல் .. தொடருங்கள் வாழ்த்துக்கள்

முன்மொழிகிறேன் ... உண்மை

கவிதையின் அத்தனை வரிகளும் சிறப்பு .... ரசித்து படித்தேன் ....வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் ஐயா .... நீங்கள் இன்னும் சிறக்கவே எழுதிடுங்கள் இன்னும் பல படிக்கவே நாங்கள் இருக்கிறோம் ...

சிறப்பான வரிகள் ... சீரிய சிந்தனை .... அருமை

ஆடைகளை திறந்திருந்த கற்கால
ஆதி மனிதன் கூட இன்றைய தேதியில் இல்லை
ஆனாலும் அவன் மூர்க்க குணங்களை
மூட்டை கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
ஆடைகளை வசீகரித்த இக்கால
அறிவியல் மனிதனாக ஆழமான வரிகள்

உரையாடல் கற்பனைதான் என்றாலும்
உரைத்திட்டேன் உள்ளத்தில் எழுந்ததை !
உணவளிப்போம் நாம் பறவைகளுக்கு
உயிர்காப்போம் அவை வாழ்ந்திடவே !
இணைந்தே செயல் படுவோம் ...... ஐயா அருமையான படைப்பு

உண்மையே .... எத்தனைமுறை சுவைதிடினும் திகட்டாத இனிய நிகழ்வுகள் அவர்களின் செல்ல குறும்புகள்

ஜனநாயகத்தின் பம்பர் பரிசு.
தாலி வேண்டுமா வேண்டாமா?
விவாதிப்பதற்கு முன்னரே
அறுக்கப்பட்டது
கருத்துரிமையின் தாலி.
உண்மை உண்மை ....

சிறப்பான எழுத்தாளுமை மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ... படித்தேன் என்பதை விட ஒரு நிமிடம் உங்கள் வரிகளோடு வாழ்ந்து விட்டு வந்தேன் என்றே சொல்லாம் அத்தனை அற்புதம்... முக்குத்திக்காரி இந்த பெயர் படித்ததும் .. சற்றே என் பள்ளி நாட்களுக்குள் நான் பின்னோக்கி சென்றேன் ...
அவளின் பாரதி, கல்லூரி காலத்தில் நிறைய பாடினார்.... என் பாரதி... ஊமையாகிக் கிடந்தார்.... இன்று என் பாரதி முழங்கிக் கொண்டும்.. அவள் பாரதி... மௌனித்தும் கிடக்கிறார்கள். அருமையான வரிகள் ...


சுமித்ரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே