மகேஸ்வரி வெள்ளிங்கிரி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகேஸ்வரி வெள்ளிங்கிரி |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 06-Apr-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-May-2014 |
பார்த்தவர்கள் | : 210 |
புள்ளி | : 23 |
கவிதை படிக்க மற்றும் எழுத ஆர்வம்
காலம் கொய்த மலர்க் கொத்து கலாம்....
சிந்தனை சிறகடித்து உலகினை
வலம் வந்த சிட்டுகுருவி நீ
துடிக்கவிட்டுப் பிரிந்தாயே
சிட்டுக் குருவி போன்றே நீ
எங்கள் கனவில் தான் இனி...!!
பசுமை இந்தியா உன் கனவுகள்
உன் பார்வை பட்ட இடமெல்லாம்
நடச் சொல்லியும் நட்டு வைத்தும்
கோடானு கோடி மரக் கன்றுகள்
இன்று வளர்ந்து விருட்சமாய்...!!
எங்களின் நிழலுக்கான
விருட்சமே நீதானே
வேரோடு சாய்ந்தாயே...
ஆரோடு சொல்லி அழ
நீ தேரேறி வந்த வீதியெல்லாம்
இன்று கண்ணீரேந்திய ஊர்வலங்கள்...!!
உனக்கீடாய் எவரைச் சொல்ல
இருபதும் இருபத்து ஓராம் நூற்றாண்டிலும்
புனிதனாய் வாழ்ந்த விவேகானந்தன் நீ
மனிதத்
இனிய இன்னிசை மெல்லிய பாடல்
இதமான இனிய இளந்தென்றல் !!
இன்ப ராகங்கள்
இதயத்தை தொடும் வரிகள்
சற்றே மலர்ந்திருந்த மல்லிகையின்
மனம் கவர்ந்த வாசனை!!!
வெள்ளித்தட்டு இல்லை இல்லை- அது
வெள்ளி வண்ண வெண்ணிலவு
நிசப்த்தமான வானிலை
நித்தம் இவையாவும் ரசிக்க -மொட்டைமாடியில்
ஒரு பெளர்ணமி போதாது
ஒரு கோடி பெளர்ணமி கிடைத்தாலும் தீராதது.....
நாளைய தேசத்தை வெற்றி கொள்ள
இன்றே திட்டமிடு !!!
நாளைய வானில் நட்சத்திரமாய் மின்ன
இன்றே சிறிய தளமிடு !!!
நாளைய கடலில் கப்பலாய் இருக்க
இன்றே கட்டுமரமாய் இரு !!!
நாளைய நாள் இனிதே அமைய
இன்றே நம்பிக்கையுடன் செயல்படு !!!
-----------------------------Mahe,VRG
இனிய இன்னிசை மெல்லிய பாடல்
இதமான இனிய இளந்தென்றல் !!
இன்ப ராகங்கள்
இதயத்தை தொடும் வரிகள்
சற்றே மலர்ந்திருந்த மல்லிகையின்
மனம் கவர்ந்த வாசனை!!!
வெள்ளித்தட்டு இல்லை இல்லை- அது
வெள்ளி வண்ண வெண்ணிலவு
நிசப்த்தமான வானிலை
நித்தம் இவையாவும் ரசிக்க -மொட்டைமாடியில்
ஒரு பெளர்ணமி போதாது
ஒரு கோடி பெளர்ணமி கிடைத்தாலும் தீராதது.....
இனிய இன்னிசை மெல்லிய பாடல்
இதமான இனிய இளந்தென்றல் !!
இன்ப ராகங்கள்
இதயத்தை தொடும் வரிகள்
சற்றே மலர்ந்திருந்த மல்லிகையின்
மனம் கவர்ந்த வாசனை!!!
வெள்ளித்தட்டு இல்லை இல்லை- அது
வெள்ளி வண்ண வெண்ணிலவு
நிசப்த்தமான வானிலை
நித்தம் இவையாவும் ரசிக்க -மொட்டைமாடியில்
ஒரு பெளர்ணமி போதாது
ஒரு கோடி பெளர்ணமி கிடைத்தாலும் தீராதது.....
வாழ்க்கை என்பது அமைவது அல்ல,
அமைத்துக் கொள்வது......!
வாழ்க்கை என்பது சோதனைக்காக அல்ல,
சாதனைக்காக........................!
வாழ்க்கை என்பது தோல்விக்காக அல்ல,
வெற்றிக்காக...........................!
==========================================
நீ உலகைத் தேடவும்
உலகம் உன்னைத் தேடவும் ஓர்
உலகமகா உறுப்பு
==========================================
அழைப்பை ஏற்பதும்
தவிர்ப்பதும் அழைத்தவன் கோணத்தில்
அதிர்ஷ்டமே
==========================================
கண்விழித்ததும்
கைதேடும் அழைப்பு வரலாறு
வரலாறு காணாதது
==========================================
ரூ.20000 கைபேசிக்கு
ரூ.20 ரீசார்ஜு செய்தால்
21-ம் நூற்றாண்டு இளைஞனவன்
==========================================
சாவு வீட்டிலோ நடு ரோட்டிலோ
சாவடிப்பாள் டெலி காலிங்
எமதேவதை
==========================================
புது மலர் கொண்ட மணம் போல்
உன் மன அன்பு மணக்கட்டும்
சீ...என்னும் வார்த்தைதனை
உன் மனம் வெறுக்கட்டும்
அனைத்திடுவார் உள்ளம் போல்
அன்பு மழை பொழியட்டும்
சினம் கொண்டு மொழிவதனை
அகமிருந்து ஒதுக்கட்டும்
மழலை முகம் பார்த்தது போல்
கனிந்து உளம் உருகட்டும்
கடிந்து வன் சொற் பேசுவதை
களைந்தே மனம் உவக்கட்டும்
உடன் பிறந்தார் பாசம் போல்
மற்றவரும் இருக்கட்டும்
வெறுத்து பிறர் ஒதுக்கும் வதை
நமை விட்டு ஒழியட்டும்
இணை பிரியா நண்பர் போல்
அன்போடு இருக்கட்டும்
ஈனச் செயலதனை
எழுந்திடாமல் இருக்கட்டும்
அகிலத்தில் எது பெரிதென்றிட்டால்
அன்பென்ற மூன்றெழுத்துச் சொல்லென்பார்
அது எங்கே என்றென்று தேட
உனது உன்னத பொக்கிசமும் சொத்தும்
உன் மனதே..
அதன் மகிழ்விற்க்குத்தானே
இத்தனை செயல்களும் போராட்டங்களும் –ஆனால்
மறந்துவிடுகிறாய் பலசமயம்
அடுத்தவரின் மனது அவருக்கு பொக்கிசமென்று..
மலர் தந்தாய் - அதற்குள் நல்ல
மணம் தந்தாய்! - துவண்டே
சடுதியாய் வாடவும் செய்தாய்!
சந்தமதை இழக்கவும் செய்தாய்!
உயிர் தந்தாய் - உளம் களிக்க
உரமும் தந்தாய்!
உடன் நோயும் தந்தாய்!
உறங்கிடும் இறப்பும் தந்தாய்!
இரு பால் படைப்பும் தந்தாய்!
இரண்டையும் சேரவும் செய்தாய்!
பிரிக்கவும் செய்தாய் - ஊடே
பிரிவுத் துயரும் தந்தாய்!
உணர்வைத் தந்தாய் - நல்ல
உயர் பண்பைத் தந்தாய் - ஊடே
உடன் சேரா பகைவனைப் படைத்தாய்!
உலகம் அழிக்கவும் செய்தாய்!
நல்லதும் செய்தாய்!
நன்றல்லாததும் செய்தாய்!
எதனால் இதனை
இப்படிச் செய்தாய்!
உன் செயல்கள் பலதை
உணரச் செய்வாய்!
உலகம் உவப்ப
கருணை பொழிவாய்!
உன் கோ
அன்பென்னும் பாலுட்டி !!
அறிவென்னும் உணவூட்டி !!
அறநெறியில் திகழ தாலாட்டி !!
அகிலம் போற்ற சீராட்டி !!
அன்றும் இன்றும் என்றும்
அயராது உழைத்து – எங்களுக்காக
அணுஅணுவாய் சிதைந்து, மக்கள்
அனைவரும் போற்ற வளர்த்தாயே !!
முரடனையும் முத்திரை பதிக்க செய்தவள் !!
முழுநிலவை காட்டி கற்பனை வளர்தவள் !!-எதிலும்
முதல்வனாக்க முழு மூச்சை தந்தவள் !!
முன்னேறிச்செல்ல முழுமுதற் கடவுளானவள் !!
அன்பில் அன்பிலும் அன்பாய் !!
அழகில் அழகிலும் அழகாய் !!
அறிவில் அறிவிலும் அறிவாய் !!
அதிசயத்தில் அதிசயத்திலும் அதிசயமாய்!!-காலத்தால்
அழியாத அதிசயத்தின் அதிசயமே அம்மா அம்மா !!!