புதுவை மலர் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : புதுவை மலர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 5 |
தன் வழியென்றும்
பிறழாமல் சுற்றி வரும்
பூமி போல்
தடைகள் நூறு
கடந்தாலும் ஆழி சேரும்
ஆறு போல்
துளி யொன்று
வீழ்ந்தாலும் துளிர்த்து விடும்
விதைகள் போல்
தோய் வொன்று
கண்டாலும் வளர்ந்து வரும்
நிலவை போல்
நம் பாதை கண்டு
தடைகள் வென்று
மமதை விட்டு
கொடைகள் கொண்டு
மனிதம் போற்றி நின்றிடுவோம்
பார்வையிலே அன்பூற்றி
சிந்தை சலவை செய்துவிட்டு
நேர்மையெனும் கரம் பற்றி
விந்தை பல புரிந்திடுவோம்
எதிர்மறை எண்ணங்களை
புதிர் கொண்ட நிகழ்வுகளை
புறம் ஒதுக்கி தள்ளிடுவோம்
அறம் போற்றி வாழ்ந்திடுவோம்!!!!
கோடு போட்ட
வெள்ளை நிற சட்டை..
கட்டம் போட்ட
கருப்பு நிற கால் சட்டை...
இது உங்களுக்கு வேண்டுமானால்
சாதாரணமாக இருக்கலாம்
ஆனால் அதுவே
காணாமல் போன தன் பிள்ளை
கடைசியாக அணிந்திருந்தது இதுதான்
என்று தவிக்கும் பெற்றோர்களுக்கு
எப்படி இருக்கும் தெரியுமா?
ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம்
ஒரு குடையின் கீழ் இணைந்த போது
விவரம் தெரிந்தவர்களை
@"ஒன்றும் தெரியாதவர்கள்" என்று
ஏளனமாய்க் கடிந்தார்களாம்.
இனம் இனத்தொடு சேரும்போது
குணம் மாறிப் போகுமென்று
எவர் சொல்லக் கூடும்?
@Birds of a feather flock together
அழகிய ரோஜாக்கள்
பரிசாய் விலையுயர்ந்தவை
கண்கள் மின்னிடும்
வைரங்களின் ஜொலிப்பில்
நடந்தால் சிவப்பு கம்பளம்
விரிந்தால் விமானம்
வெளிநாட்டுக் குளிர்காற்று
விலை போகா வெப்பத் தொடுகை
சிம்லா மறந்த
நெரிசலில்
அவசர நாழியின்
அரை மணித் தாமதத்திற்கு
"உனக்கெல்லாம் ........."
ஆசைகள் வசவான
அந்த அரை நொடியில்
சரி பார்க்கப்படுகிறது
எம் தந்தையன்பு!!
சதையாய் வந்திடும் மனிதா நீ
சாம்பலாய் போகிறாய் இறுதியில் !
உணர்வாய் உண்மையை நீயும்
உயர்வாய் உள்ளத்தில் நிச்சயம் !
கைக்குழந்தை தானே ஆரம்பத்தில்
கைப்பிடி சாம்பலே முடிவினில் !
கையில் அடங்கிடும் நம்இதயம்
கைவிடும் நம்மையும் நிச்சயம் !
கருவறை முதல் கல்லறைவரை
கருத்தாய் வாழ்பவர்கள் மிகசிலரே !
கருணையே இல்லாத மனிதர்கள்
கரங்கள் இருந்தாலும் முடவர்களே !
உள்ளவரை நம்ஆட்டமும் பாட்டமும்
உடலானால் நடைபெறும் நம்முன்னே !
உள்ளவரை அழைப்பர் பெயர்சொல்லி
உயிர்நீத்தால் நம்பெயரும் உடலன்றோ !
சுற்றங்கள் நம்மை சிலநாள் நினைக்கும்
உற்றநட்பும் சிலநேரங்களில் நினைக்க
"கற்றோரும் மற்றோரும் "
*************************************
கற்றோர் என்றொருவரிலை கற்றபடி எவருமிலை
கற்றோர்க்கு அரியவகை கல்லாதார் அறிந்தவகை
கற்றும் புரியாதன கல்லாதார் அறிவாரே
கற்றுப் புரிந்ததுவும் கல்லாதோர் அறிந்ததுவே !
கற்றோதும் செயலன்றி கற்றதில் பயனேது ?
கற்றது தேங்கிவிட கல்லாதார் ஏங்கிநிற்க
கற்றோரும் மற்றோரும் துலாக்கோலின் சமநிலையில்
கற்றோரும் கல்லாதார் கல்லாதார் கல்லாதரே
ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம்
ஒரு குடையின் கீழ் இணைந்த போது
விவரம் தெரிந்தவர்களை
@"ஒன்றும் தெரியாதவர்கள்" என்று
ஏளனமாய்க் கடிந்தார்களாம்.
இனம் இனத்தொடு சேரும்போது
குணம் மாறிப் போகுமென்று
எவர் சொல்லக் கூடும்?
@Birds of a feather flock together
நண்பர்கள் (6)
![ஜின்னா](https://eluthu.com/images/userthumbs/f2/muqzr_26763.jpg)
ஜின்னா
கடலூர் - பெங்களூர்
![வே புனிதா வேளாங்கண்ணி](https://eluthu.com/images/userthumbs/b/bkifj_17177.jpg)
வே புனிதா வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு
![கார்த்திகா](https://eluthu.com/images/userthumbs/f2/kiqep_20109.jpg)
கார்த்திகா
தமிழ்நாடு
![உமாமகேஸ்வரி ச க](https://eluthu.com/images/userthumbs/f2/pnaje_22741.jpg)
உமாமகேஸ்வரி ச க
THIRUVANNAMALAI
![பழனி குமார்](https://eluthu.com/images/userthumbs/f1/whnmv_13288.jpg)