திலீபன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : திலீபன் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 22-Aug-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 26 |
தெம்பென்று தனியே எனக்கு வேண்டாம்...
என் நிழல் நீ போதும் சகோ!!!
கனவின் கருவில் தினம் புதைத்தேன் உனை தோழா!!!
மனதின் உருவில் உன் பிம்பம் எனைப் பிழைத்திடும் வாடா!!!
ஒருகாலம் உன் சிரம் தாழ்ந்தாலும் எதிரன் நரதேகம் எரியும்...
சவமாளும் காலன் வந்தாலும் ஒருநாலும் உனை பிரியேன்....
இம்மைக்கு உன் கை போதும்... மறுமைக்கு வாழ்க்கை மீளும்!!!!
சம்சார பெண்டிரே என் யோக்கியனைக் கண்டிரோ!!!
சாதிமல்லி தோடு செல்ல மாமனைத் தேடுவீரோ!!!
மாதங்கள் பல போயும் என் ஆண்டவனை காணலியே!!!
வாசம் இன்னும் தீரவில்லை என் மன்னன் சோகம் தாளவில்லை!!!
மணிமணியாய் உன் பேச்சு இல்லாது தூக்கம் போச்சு!!!
உன் மகன் கேட்டு கதறுகின்றான்... கண்மனியே வந்துவிடு!!!
காணாமல் ஏங்குகிறேன்... சீக்கிரம் காட்சி தந்துவிடு!!!
ஆவணி நாள் பாராது அரங்கணே நீ வந்துவிடு!!!
பாவி தனி யாகங் கிடக்க மீண்டு உயிர் சேர்ந்துவிடு!!!
மல்லிகப்பூ மேனிக்காரி... மாராப்பு ஜாலக்காரி...
கண்ணுக்குள்ள கத்தி வச்ச...
எம்மனச பொத்தி வச்ச...
சாமந்தி தான் உன் வாசம்...
தேனா தான் மணம் வீசும்...
ராசாத்தி உன் வார்த்த என் தேகத்தோட அனல் ஆச...
விளையாட்டா செஞ்சுபுட்டேன்...
என்மேல நொந்துகிட்டேன்...
எஞ்செல்ல பட்டுகுட்டி...
கவலையெல்லாம் ஓரங்கட்டி...
மணமணக்கும் பன்னீரே... என மயக்கும் செந்தீயே...
ரோசாவே ஏன் கோவம்... உன் ராசா தான் நான் பாவம்!???
ஏய் சிறு கள்ளி!!!
வா மணவள்ளி!!!
பனிபாயும் இலையே!!!
பண்ணோயா ரதியே!!!
உனை பார்த்த நேரம் இப்போது!!!
இனி ஜீவன் எங்கும் தப்பாது!!!
வாடாமல்லி பொட்டழகி!!!
சீவி மிடுக்கும் கட்டழகி!!!
ரஞ்சிதமே உன் தேகச்சூடு!!
வஞ்சியதே எனை படுத்தும் பாடு!!!
ராஜ்ஜியமே ஆண்டாலும்
பூஜ்ஜியந்தான் உன்முன்னே!!!
பிரம்மிப்பு பஞ்சமில்லை
என் உயிரும் மிச்சமில்லை!!!
பெயரென்ன எண்ணமில்லை
முகவரியும் கேட்கவில்லை!!!
முழுதாகும் நாள் தாரா!!!
சொல்லாதே என்றாரா????
தெருவோர வழிகாட்டிகள் எல்லாம் நீ நடக்கும் திசை மட்டுமே காட்ட....
அடங்காத களிறும் உன் கையில் விளையாட்டு பொம்மையாக...
பெருங்காற்றாய் வந்தாலும் உன் வீட்டில் மென்காற்றாய் வீசிப் போக...
பசி ஏதும் தோன்றவில்லை சதிகாரி குறும்பாக் சிரித்துப்போக...
காத்திருத்தலும் சுகம்தானே உன் கைப்பேசி கொஞ்சலுக்காக...
அரும்பான என் நெஞ்சை கிள்ளித்தான் போகின்றாய்...
பெற்றாளே உன் அன்னை அழகான மான்குட்டி...
உன் முகத்தை காணத்தான் வருகிறேன் ஊர்சுற்றி!!!!!!
------என்னவள்
பொறுமையற்ற மனிதரே தெரியும் உங்கள் சேதியே!!!
உழைத்தவாழ ஆசையே...
வேர்வை சிந்த யோசனை...
உண்மைப் பேச ஆசையே...
பொய்யை மறக்க யோசனை...
சுத்தம் செய்ய ஆசையே...
அழுக்குபடும் யோசனை...
அள்ளி பருக ஆசையே...
சிந்திவிடும் யோசனை....
வேகம் போக ஆசையே....
விழுந்துவிடும் யோசனை...
உதவி செய்ய ஆசையே...
நேரவிரயம் யோசனை...
காதலிக்க ஆசையே...
ஏமாற்றமே யோசனை...
சிகரம் ஏற ஆசையே...
சறுக்கிவிடும் யோசனை...
அவ்வளவும் ஆசையாய் இருப்பின் யோசனை தான் பெருகிடும்!!!
முடிவும் முயற்ச்சியும் தகுந்தனபின்!!!
காதலி சமைக்கும் போது வெந்நீரைக் கூட தேநீர் என்போம்... அம்மா செய்த மிளகு ரசம் கசாயம் என்போம்...காதலி போட்டுவிடும் ரிஸ்ட் பேண்ட் ஸ்டைல் என்போம்...அம்மா கட்டிவிடும் கயிறு பழம் என்போம்...
காதலியின் பேசினால் கூட குயில் என்போம்... அன்னை பாடும் பக்திபாட்டும் இரைச்சல் என்போம்...
காதலி வர சொன்னால் பத்து கி.மீ நடப்போம்... அம்மா கடைக்கு போகச்சொன்னால் இரண்டடி என்றாலும் மறுப்போம்...
காதலியிடம் ஒரு மணி வரை பேசுவோம்....
அம்மாவிடம் அரை நிமிடம் ஒதுக்க மாட்டோம்...
இப்படி அவள் தவங்கிடந்த பெற்ற உன்னை இவள் தரமுயர்த்தி விடுவாளோ!!!!
நிர்வான நிறமாய் அலைகடல் பின்னி வீசுகையில் என் பின்னலிடைக்காரி நினைவலைகள் பிம்பம்....
அகவும் மயிற்றோகை விரித்து ஆடுகையில் சின்னநடைக்காரி சினுங்கல்கள் பிம்பம்...
இறைவன் உலாபவனி வருகையில் தங்கரதக்காரி தோரனை பிம்பம்...
சில்வண்டு தேகம் கண்டால் செம்மேனிக்காரி செழித்த முகம் பிம்பம்...
இத்துணையின் இத்துனையும் பிம்பம் என போனபின் சொந்தம் என்று ஆவதோ!!!!!!
சம்பங்கி பூவெல்லாம் மந்தாரம் வீசுதடி...
என் வீட்டு ஜன்னல் எல்லாம் உனைப்பற்றி பேசுதடி...
சுவரொட்டி சித்திரமாய் உன் பிம்பம் ஒட்டுதடி...
சின்னஞ்சிறு சத்தமும் வாசல் நோக்க செய்யுதடி...
எதிர்வீட்டு காதலும் இம்சை பன்னுதடி...
வசந்தம் வீச காத்திருப்போம்
ஏங்காமல் இரு கண்ணே... மாமன் உனைத்தேடி வருகின்றேன்...
சம்பங்கி பூவெல்லாம் மந்தாரம் வீசுதடி...
என் வீட்டு ஜன்னல் எல்லாம் உனைப்பற்றி பேசுதடி...
சுவரொட்டி சித்திரமாய் உன் பிம்பம் ஒட்டுதடி...
சின்னஞ்சிறு சத்தமும் வாசல் நோக்க செய்யுதடி...
எதிர்வீட்டு காதலும் இம்சை பன்னுதடி...
வசந்தம் வீச காத்திருப்போம்
ஏங்காமல் இரு கண்ணே... மாமன் உனைத்தேடி வருகின்றேன்...
நிறமின்றி நீ வந்து
நரத்திரை கிழித்து விட்டாய்...
வெறும் நிழல்களாய் வாழ்ந்திருந்தோம்
நிஜம்தனை காட்டிவிட்டாய்...
உன்னிடத்தில் ஊர் வசித்தோம்...
இரக்கமின்றி விரட்டிவிட்டாய்...
விலையற்ற உயிர்களை
சொல்லாமல் சுருட்டிவிட்டாய்...
வந்தவழி நீ கொண்டாய்
சென்றவழி யார் கண்டார்...
நீ ஊரிணைக்க வரவில்லை
உள்ளம் இணைய காண்கின்றோம்...
அரவமின்றி ஊர் புகுந்தாய்
வாதமின்றி நீ வென்றாய்...
தவறேதோ எம்மிடத்தில் பாயும்
அப்பாவி பலிகள் எவ்வித்தில் நியாயம்...
ஏரியெனும் உன் வீட்டில் குடியேறி
திக்கின்றி தவிக்கின்றோம் தடுமாறி...
வேண்டுகிறோம் உன்