தமிழ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 20 |
மொழி புரியாத ஒரு பார்வை
மௌனத்தில் ஆயிரம் பேசுகிற கண்கள்
கட்டி வைத்தாலும்
என்னை தொட்டிடத்தான் எண்ணுகிறது
உன் கூந்தல்
அதை மீண்டும் சிறை பிடிக்கிற
உன் கைவிரல்கள்
காற்றோடு உன் தாவணி பேசும்
கால்கள் கூட தடுமாறும்
என் பார்வை படும் போது
வெக்கங்களை உள்ளடக்க தெரியாத
உன் முகத்தில்
வெடிக்கத்தான் செய்கிறது
உன் சிரிப்பு என்னும் மத்தாப்பூகளால்
அவள்ளோடு பேசுவதாக எண்ணி
உள்ளுக்குள் என்னை பற்றியே பேசுகிறாய்
பார்த்து பார்த்து
சிரி
என் உயிரை விட உன் உயிரை உருகி உருகி
காதலித்தேனடி, பல வருடங்களாக!
ஆனால் என் காதலை விட ,உனக்குள்
ஒருவனை உருகி உருகி காதலித்தது
தெரியாமல் போய் விட்டதடி எனக்கு!!!
அது தெரிந்த பின்பும் கேட்கவில்லை என் மனம் ,
எனக்கு நீ தான் என் உயிர் என்று துடிக்கிரதடி !!
இதில் இருவர் காதலும் ஒன்றுதான்
ஆனால் காதல் செய்யும் விதம் தான் வேரடி!!
இறுதியில் வெல்வது காதலாக இருந்தால்
அது உன் காதலாக இருக்கட்டும் !!
எந்தன் ஒரு தலை ராகம் உந்தன்
நினைவுகளோடு செல்லட்டும்!!!
காதல் படும் வேதனையை உணர்ந்தேனடி உன்னால் !!
உன்னோடும் என்னோடும் இருபது உணர்வுகள்தான்
அவை நிழல் தெரியாத இரு இதயத்தின் ஒரு வாசல் கதவு
அதில் வாசிக்க படுவது நம் முகங்கள் மட்டும் தான்
நமக்காக எத்தனை கனவுகள் வரிசை கட்டி நிக்கிறது
அவைகள் நாம் கண் சிமட்ட மறுத்தாலும்
நம்மை கட்டி வைத்தாவது காண்பிக்கிறது நிழல் தெரியாத ஒளிபடங்கள்
அங்கு பார்க்க படுவதும் நாம்தான் நடிக்கபடுவதும் நாம்தான்
கரடு முரடான பாதைகள் இருந்தாலும்
அதில் நம் பாதங்கள் படும் பொழுது
நீர் சொட்டும் தாமரையே நமக்காக பாதையில் மலர்கிறது
நம் பதங்களின் இறுதி பயண வரை
விற்க முடியாத நம் ச
கேள்விகள் ஆயிரம் பாக்கிறேன்
தேர்வறையில் எழுதும் மாணவனாக
அதற்கு விடைகள் இருந்தும்
என்னால் தேரிட முடியவில்லை
அழைக்கும் குரல் கைக்குள்
கேட்க நினைக்கும்போது
கேட்டார் ஆயிரம் ரூபாய்
கடனாக வாங்கிய தொலைபேசிக்கு
உன் மீது விழாத வருத்தத்தில்
நீ விரித்த குடையோடு
போரிட்டுக் கொண்டிருந்தன
மழைத் துளிகள்...
நகம் வெட்டினாள்
வீடு முழுக்க
பிறை நிலாக்கள்!...
ஒவ்வொரு வரிகளும் நீண்டு செல்கிறது
ஒவ்வொருவரையும் நினைக்கும் போது
தொலைந்து விட்டது என்று நினைத்தால்
தொடுவானத்தில் நிக்கிறது காதல்
அறிமுகமானவர்கள் சிலர்
அன்பாக இருக்கும் போது
அருகில் இருந்தவர்களை
சில நேரம் மறக்கிறோம்
அறிமுகமானவர்கள் பலர்
நம்மை வெறுக்கும் போதுதான்
அருகில் இருந்தவர்களின் அன்பு
நம் கண்கள்வழியே கண்ணீராக தோன்றுகின்றனர்
சில நேரம் அழுகிறோம்
சில நேரம் சிரிக்கிறோம்
சில நேரம் நம்மையே கூட மறக்கிறோம்
வாழ்க்கை எங்கு சென்றாலும்
சிலருக்காகவே நாம் திரும்பிபார்க்கிறோம்.....
அது நட்பாகாகவும் ,காதல்க்காகவும் ,
அன்புக்கா