naffla - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : naffla |
இடம் | : |
பிறந்த தேதி | : 06-Jul-2000 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 14 |
மௌனத்தை என் யௌவனம் முழுக்க நிழலாட வைத்திருப்பவனே மௌனத்துக்கு விடை கொடுத்து அதிலிருந்து விடை பெற என் மனம் ஏனோ மறுக்கிறது தெரியவில்லை
ஒரு கணம் என் மனதை ரணமாக்கி என்னை நடை பிணமாக்கி விட்டாயே
யாரிடமும் பேச மனமின்றிக் கிடக்கிறேன் உன்னையிழந்த வலியால்
தொலைந்தேன்
நான் அவளின்
புன்னகையால்........!
வசியத்தை
விசயத்துடன்
வன்முறை
செய்கிறாள்......!
பார்ப்பது
நான் அல்ல
எனது மனம்
தானே சொல்........!
மறவாத
முகம் எனது
உள்ளத்தில்
பதிந்தது........!
சிரிப்பை
சில்லரையாக
தொடுக்கிறாள்
வதைக்கிறாள்........!
சாவை
வெறுக்கிறேன்
உன்னை கண்டு
நான் உன்னோடு
வாழ..........!
உன்னை தேடி சென்றால்
பயணங்கள் முடிவதில்லை..
உன்னை நினைத்து கொண்டால்
நொடிகள் நகர்வதும் இல்லை..
வானும் , நிலவும்
சேர்ந்தால் அழகு..
என்னை நீ சேராமலே
ஏன் அவ்வளவு அழகு...
நதி கூட என்றோ ஒரு
நாள் கடல் சேரும்..
என் இதயமும்,காதலும்
என்றும் உன்னை சேரப்போவதில்லை..
இரு விரல்கள்
நேசிக்கும் காதலன்...!
இரு இதழ்கள்
வாசிக்கும் புல்லாங்குழல்...!
சிலருக்கு
ஏழாம் அறிவு...!
பலருக்கு
எமனின் உரு...!
புற்று நோயிற்கு
உற்ற நண்பன்...!
செயற்கை மேகங்களை
மனித உதடுகளால் பிரசவிக்கும்....!
செவ்விதழ்கள் நடத்தும்
தீமிதி திருவிழா...!
சிகப்பு விளக்கு
எரிவது தெரிந்தும்...
இதழ்களின் சாலையில்
தினமும் பயணிக்கிறது....!
(புகைப்பிடித்தல் உயிருக்கு ஆபத்து)
அடி பெண்ணே...!
உன் கெழுத்திக் கண்ணால்
என்னை கொளுத்திவிட்டுப் போகாதே...!
நாலடித் துப்பட்டாவால்
வானத்தைச் சுருட்டிய
புவியில் வந்த
நிலவோ நீ...?
நீ என்னை கடக்கும்
அந்த ஒரு நொடிக்குள்
எத்தனை பூகம்பம் நிகழும்
என் நாடிக்குள்....!
உன்னை படைத்த பிறகு
பிரம்மன் பதவி விலகிவிட்டனாமே...?
மானிடனாய் பிறப்பதற்கு....!
பிரம்மனையே...
கடலைப் போட வைத்த
காதலோ நீ...?
உன் மகிமையை
கேட்டுத்தான் என்னவோ....?
கடலில் அலை
அலையாய் ஆர்ப்பரிக்கிறது....?
கடற்கரைப் பக்கம்
நீ சென்றுவிடாதே...!
மீண்டும் ஓர்
சுனாமியைக் கிளப்ப...!
உன்னை பார்த்தவர்கள்
எல்லோரையுமே
இதய நோயாளிகளாய்
மாற்றி
உன்னைப்போல்
இந்த நிலவும்
நாளும் ஓர்
உருவாய்
தென்பட்டு
என் இரவை வேட்டையாடி
செல்கிறது
உன் நினைவோ
காற்றினில் படர்ந்து
என்னை
சுழட்டி வீசி போகிறது
பூக்களின் இதழ்கள்
உன் பெயரை சொல்ல
வாசம் யாவும்
என்னை கொளுதிபோடுகிறது
உன் ஞாபகதீயின்
தீண்டலில்
என் மனம்
உன் நிழலில் அமர
தன் பங்கிற்கு
அதுவும்
முள்ளாய் குத்த
எங்கே சென்று சேருவேன்
உன் மௌனங்கள்
உடைந்து
காதல் அங்கிகரிக்குமவரை?
கனவோடு களைந்து விடாதே கண்ணா நினைவோடு நிஜமாகிவிடு
இரவில் ஜன்னலோரம் சென்று பார்க்கையில் பௌர்ணமி நிலவினுள் எனக்கு உன் முகமே தெரிகிறது