சீனிவாசன்- கருத்துகள்

வரம்பு மீறாமல் வரம்பு மீறிய கவித்திறன் !
வேறென்ன சொல்ல ?

உண்மை நிரோசன்..
உங்களை வழி மொழிகிறேன் !

அப்பட்டமான உண்மை..இதற்கு மேலும் ஒரு படைப்பு தேவையே இல்லை இந்த அசிங்கங்களை உலகிற்கு எடுத்துக் காட்ட..பெண்ணடிமைத் தனம் என்பது எங்கே உருவானது என்பதை இதை விட துல்லியமாக சொல்ல ஒரு படைப்பு இல்லை என்பேன்.

திருமதி மங்காத்தா அவர்களே தங்களுடைய இந்த கருத்து மிகவும் அநாகரிகமாகத் தெரிகிறது.கருத்துச் சொல்வதாயின் படைப்பிற்கு சொல்ல வேண்டும் ஆனால் நீங்க கூறிய கருத்தைப் பார்த்தால் படைப்புக்குச் சொன்னதுபோல் விளங்கவில்லையே __ எதற்கிந்த நாகரீகமற்ற செயல் ??


இமயம் நோக்கி
நகர்ந்துக் கொண்டிருக்கும் - என்
தேர் சில்லுகளில்
சிராய்க்கும் சிறு கல்லுகள்
எதை சாதித்து விடும் ? ____கலை தங்களின் நிலைப்பாட்டுத் தெளிவுக்கு நிச்சயம் இந்த வரிகளே போதுமானது.

சோளத்தின் சுயசரிதையை சுறு சுறுப்பா எழுதி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் தம்பி.

எட்டா பழம் கண்டு கொட்டாவி விட்டுக்கொண்டே சீ.. சீ.. இந்தப்பழம் புளிக்குமென்று மனதைதேத்திக்கொண்டு நடந்தவன் தான் நானும் என் மனதோடு புதைந்துபோன ஆசைகளின் வடுக்களை நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்த கவிதை.ஒவ்வொரு மனிதனும் இப்படி தனது எத்தனையோ கனவுகளை இயலாமை கருதி கருணைக்கொலை செய்தே பயணிக்கிறான்.நல்ல ஞாபகப்படுத்தல்.

அருமை கே.எஸ்.கலை

தேவையான பகிர்வு
இன்னும் பலரின்
அறிமுகம்
தரவேண்டுமென
ஆசைபடுகிறேன் !
நன்றி .

நன்றி நண்பரே ..தொடர்ந்து எழுத ஆசை முயற்சிக்கிறேன் !

இன்றைய உழவனின் வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி போன்ற வரிகள் !
வாழ்த்துக்கள் தோழனே !

நல்லதொரு கவிதை தவறான கண்ணோட்டங்களால் நகர்த்தப்பட்டுக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது.சரியான புரிதல்கள் இல்லாமல் இந்த கவிதை பற்றி தவறான விமர்சனங்கள் எழுந்துள்ளது என்பது என்னால் சரியாக புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இங்கு இந்த கவிதை ஒரு சாராருக்கு மட்டுமானது.ஆதாவது ஒழுக்க விழுமியங்களை மீறி நடக்கும் ஒரு பகுதி பெண்களுக்கான அறிவுரையாக இந்த கவிதை என் பார்வைக்குப் புலப்படுகிறது.
பெண்கள் ஒழுக்கத்தோடு சரியாக நடந்தாலும் சரி , ஒழுக்கக் கேடாக நடந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்த வண்ணம் தான் உள்ளது.அது வேறு விடயம்.
ஆனாலும் ஒரு சில பகுதி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அவர்களின் ஒழுக்கக் கேடான நடத்தைகளால் தான் இடம் பெறுகிறது.அது யாவராலும் மறுக்க முடியாத உண்மை.அந்த உண்மையை வெளிப்படுத்துவதாயும் , அவர்களில் மாற்றத்தை ஏற்படுத்த தூண்டுவதாயும் உள்ள இந்தக் கவிதை ஒரு அருமையான படைப்பு.

கொண்டனையே மாய்த்துவிடும் "சா- தீ "

வருடம் மாறுகிறது
வாழ்வும் மாறட்டும்
இரவு விடிகிறது
இன்னல்கள் மடியட்டும்
பொழுது புலர்கிறது
இன்பம் மலரட்டும்
மனங்கள் தெளியட்டும் ,
மகிழ்ச்சி பொங்கட்டும்
ஒற்றுமை ஓங்கட்டும்
வேற்றுமை களையட்டும்
மதவெறி அழியட்டும்
சாதிகள் ஒழியட்டும்
சலனங்கள் நீங்கட்டும்
சச்சரவுகள் மறையட்டும்
அன்பே பரவட்டும்
பண்புகள் வளரட்டும்
பகையுணர்வு மங்கட்டும்
நட்புணர்வு தேங்கட்டும்
கொலைவெறி எரியட்டும்
பணவெறி அடங்கட்டும்
நட்புவட்டம் விரியட்டும்
நல்லிணக்கம் மலரட்டும்
உள்ளங்கள் இணையட்டும்
இல்லங்கள் மிளிரட்டும் !
ம்ம்ம் வரவேற்போம் புது வருடத்தை ...

கலை சொல்லி இருக்கும கருத்து ரொம்ப சரியானது/ ஆனால் அதை சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாம இந்த கவிதை படைசச்சவர்
பேசுறார்.....
நீங்களும் எதோ கிரிகேட்டு பத்தி சொல்றிங்க ஒன்னுமே புரியல...


சீனிவாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே