மு முருக பூபதி- கருத்துகள்

நன்றி கவின் சாரலன் அவர்களே.மூன்று ஆண்டுகளாக இந்த தளத்தின் பக்கம் நான் வராமலேயே இருந்து விட்டேன்.
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

தண்ணீரை கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு ,,,அதனை கொடுக்கும் கடமை அரசுக்கு உண்டு ....
இதனை மக்களும் அரசியல் வாதிகளும் மறந்ததன் விளைவை அனுபவித்து கொண்டுள்ளோம் ..

ஆண்களின்
அதிகாலை கனவுகளை
அதிகம் கலைத்தது
மனைவிகளின் அதிகார குரல்கள் தானே ...?

வேலைகளின் காத்திருப்பும்
விடியற் காலை சேவலாக
கனவுகளை களைத்து விடுகிறது....!

இனியாவது
லட்சிய குதிரைகளை
பகலில் ஓட்டிப்பார் ப்போம் ......!

சீடர்கள் காத்திருக்கும் போது ஒரு தலைவன் நிச்சயம் உதயமாவான் ,,,!
புதிய சமுதாய விழிப்புணர்வால் புத்துணர்ச்சி பெறட்டும் தமிழகம் ...!

தன்னையும் தான் இழந்த நீராதாரங்களையும் உழவன் உணரும் வரை வருத்தம் தான் வாய்க்காலாக ஓடிவரும் ...!

தமிழன் தானே திருந்தினால் தான் உண்டு ...! யாரை பார்த்தும் திருந்தும் குணம் இல்லை அய்யா ...!
மேற்க்கே வீணாகும் தண்ணீரை கிழக்கே திருப்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ,, மாணவ்ர்கள் மத்தியில் ..! தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா ..!

அடுத்த பொங்கலாவது
இனிக்கும் பொங்கலாக
உழவனுக்கு அமைய
இறைவனை பிராத்திப்போம் ...!

இவ்வாண்டு நானும் யாருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வில்லை .....

வாசிக்கப்படும் பொழுதுதான்
எழுத்துக்களும் வாசனை பெறுகிறது ....!
நேசிக்கப்படும் பொழுதுதான்
புத்தகமும் உயிர் பெறுகிறது ,,,,,!

குழந்தை சிரிப்பும்
கவி நடையும் அருமை

படத்துக்கு ஏற்ப கவி நன்று வாழ்த்துக்கள்

ஓட்டைக்குடிசையினுல்
நுழைந்து பார்த்த மழை
பாத்திரத்தில் நீராகி பசியாற்றியது.....!

தங்கள் கவி நன்று வாழ்த்துக்கள்

காதலை
ஆசை சல்லடையில் சலித்தால்
மீதம் இருப்பது ஏக்கம் தானே .....!

பூமித்தாயின்
பசுமை மடியில் விழவே
ஆசைப்படுகிறது மழைத்துளிகள் .....!

என்
செவிக்குகைகுள்
தியானமிருக்க
முயற்சித்து முயற்சித்து
தோல்வியை தழுவுகின்றன
உன் பாத கொலுசுகள் ....!

தங்கள் கவி நன்று பாராட்டுக்கள் ...!

இன்றும்
உதிர்ந்து தான் போகின்றன
என் வீடு கட்டும் கனவுகள்
குழந்தை பருவத்து
மணல் வீடுகள் போல .....!

பூக்களை
முத்தமிடும் பனி துளிகள் ..!

நன்று வாழ்த்துக்கள் ...!

படைப்பு கோபம் நன்று ...! சமுதாய சீரழிவுகளுக்கு சினிமாவே காரணம்...!


மு முருக பூபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே