நிழலின் குரல்- கருத்துகள்
நிழலின் குரல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [29]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
- மலர்91 [19]
டேய், என்ன டா சின்ன பையன் மாதிரி பீல் பண்ற, நீ பாட்டுக்கு எழுது. ஒவ்வொரு பார்ட் நீ போடும்போது இன்டெரெஸ்ட் அதிகமாக்கு. கண்டிப்பா எல்லாரும் ரசிப்பாங்க. இப்போ கூட எல்லாரும் ரசிச்சு படிச்சிட்டு தான் இருப்பாங்க.
முபாரக்...கதை பொறுமையாக போவது போல இருக்கிறது டா. அதுமட்டும் இல்லாமல் கதை யாரை சுற்றி செல்கிறது என்று யூகிக்க முடியாமல் போகிறது. கதாபாத்திரங்களை கோர்க்க இவ்வளவு காலம் தேவை இல்லை. கதைப்பயணத்தில் அவரவர்களாக சேர்வது போல இருக்க வேண்டும். பார், நிறைய பேர் படிக்காமல் இருக்கிறார்கள். தொய்வு இல்லாமல் கொண்டு போ.
டேய்....செம்மையான தொடக்கம். எடுத்த எடுப்பிலேயே சஸ்பென்ஸ் ஆரம்பிச்சுட்ட. நானும் என்னோட கதைல கிளைமாக்ஸ் சொல்லிட்டு தான் ப்லாஷ்பாக் போனேன். அதே ஸ்ட்ரைடெஜி. ஆனா ப்ளீஸ் உன்னோட ப்ரொபைல் பிச்சர மாத்து. எதுக்கு நீயும் நானும் சேந்து இருக்கற போட்டோ போட்டு இருக்க??? ஆரோ சொல்றமாதிரி தமிழ் ல எழுதினா நல்லா இருக்கும். முயற்சி பண்ணு டா.....
டேய்......சும்மா புகழ்ச்சி பாடாத.. நீ எழுத ஆரம்பி டா.
டேய்......என்ன டா....எனக்கு போட்டியா வந்துட்ட. ட்ரை பண்ணு டா. ஆங்கிலத்துல எழுதறத விட தமிழ்ல எழுது, ஆனால் இங்கே அனைவரும் ஆங்கிலத்தில் ஒரு தொடரை படிக்க விரும்புவார்களா என தெரியவில்லை. மேலும் நீ சொல்வது போல் எழுதினால் கண்டிப்பாக கடுப்பாகிவிடும். நானே எனது "என் உயிரினும் மேலான" தொடரில் யதார்த்த வார்த்தைகளை மற்றும் ஆங்கிலம் கலந்த தற்கால தமிழ் பேசும் முறையில் எழுத மிகவும் சிரமப்பட்டேன். நிறைய எழுத்துப்பிழைகளும் வந்தன. பார்த்து பொறுமையாக எழுது. எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய கமெண்ட்களும் நல்ல வாழ்த்துக்களும் கிடைத்தன. இப்போது அடுத்த தொடரையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். நேரமின்மை காரணமாக பொறுமையாக எழுதுகிறேன். இது ஒரு நல்ல தளம். நீயும் நன்றாக மனம் கவரும்படி எழுதி பல நல்ல ரசிகர் ரசிகைகளை பெற வாழ்த்துக்கள்.
இது என்ன காதல் நட்பு கலந்த திகில் கதையா, இல்லை சாதாரண கொலைகள் துப்பறியும் கதையா....
உங்களை கலங்க வைத்துவிட்டேன் என்று நினைக்கும்போது வருத்தம் அடைகிறேன்.என் எழுத்து இந்த அளவு உங்களை வசீகரித்திருக்கிறது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் தோழி.
உங்கள் மிகப்பெரும் பாராட்டுக்கும் அங்கீகாரத்திற்கு ஊக்குவிப்புக்கும் நன்றி சுஜி அவர்களே.....கதை முடிந்தாலும் இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரும் உங்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என நம்புகிறேன், வேறு எந்த கதையில் இந்த பெயர்கள் வந்தாலும் இந்த கதி உங்கள் நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன்.
ஓ, இவ்வளவு பெரிய பாராட்டா, மிகவும் மகிழ்ச்சி சார். அடுத்த கதை தொடங்கி இருக்கிறேன். படித்து தங்கள் கருத்தை சொல்லுங்கள்.
மிக்க நன்றி தோழி....இந்த கதை முடிந்தாலும் இதில் வந்த கதாப்பாத்திரங்கள், முக்கியமாக, முபாரக், பிரவீன், விஜி, ரியாஸ், விஜய், நர்கீஸ், லெனின், ரம்யா, காயத்ரி போன்ற பாத்திரங்கள் படித்தவர்கள் மனதில் என்றும் வாழும் என நம்புகிறேன், வேறு கதைகளில் இந்த பெயர்கள் படித்தாலும் இந்த கதையில் அவர்களின் பாத்திரம் உங்கள் நினைவுக்கு வரும் என நம்புகிறேன்....முழுதும் படித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. கருத்துக்களை சொல்லவும், அடுத்த கதையில் சந்திக்கிறேன்....
அய்யா. இன்னும் ஐந்தாறு பகுதிகளில் முடிவு வரப்போகிறது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது, பட் கரெக்ட் பண்ணிக்கறேன் சார்.
நன்றி சார், தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் வரவேற்புக்கு நன்றி.
இது எனது பாக்கியம்.
ரொம்ப நன்றி சார், உங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி.
ரொம்ப நன்றி சார், ரொம்ப லெந்தியா போகுதா? ப்ளீஸ் தொய்வு இருக்கா, எங்கயாவது சீக்வன்ஸ் மிஸ் ஆகுதா. சொல்லுங்க.
இவர்களின் நெருக்கமும் பிணைப்பும் நட்பின் கோர்ப்புகளுக்கும் இது அவசியமாகிறது. ஒவ்வொரு நபருக்கும் அவர் அவருக்காக கொடுக்கப்பட்டிருக்கும் அறிமுகத்தில் இருந்து முக்கிய நிகழ்வுகள் வரும் பகுதிகளில் வரும். அந்த சீக்வன்ஸ் க்காக இது அவசியமாகும். அந்த நேரத்தில் இவர்களின் பின்னணியை சொன்னால் கதைப்போக்கில் தொய்வு நேரும்.அதற்காகவே இந்த டீடைல்.
நன்றி....தொடர்ந்து படிக்கும் உங்களின் பொறுமைக்கும் உங்கள் மேலான கருத்துக்களுக்கும் நன்றிகள்
மிக்க நன்றி.தொடர்ந்து படித்து தங்கள் மேலான கருத்துக்களையும் கதைப்போக்கு பற்றி உங்கள் அறிவுரைகளும் வேண்டுகிறேன். ஏதேனும் தொய்வு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி சார்....நல்லா இருக்கா???
நன்றி பாய். கண்டிப்பாக தொடர்வேன்.