யாழ் கண்ணன்- கருத்துகள்

மாற்றத்திலும் மாறாதது ...
------------------------------------------------------------------


எந்நொடியிலும்
எம்மாற்றமும் நிகழலாம்

நிரந்தர பணி
நீங்கி போகலாம்
நிதி நிலைமை
நிலை குலையலாம்

ஆடம்பரங்கள்
அடங்கி போகலாம்
அதுவே
அவமானமாய் தோன்றலாம்

அலங்கரித்த நகைகளை
அடகு வைக்க நேரலாம்

உள்ளுணர்வாய் தோன்றும்
எல்லா நேர்மறை எண்ணங்களோடும்
சிறு எதிர்மறை எண்ணமும்
கலந்தே இருக்கின்றது

விரைவில்
வீடு கட்டுவேன் என்பதும்
வாடகை வீட்டுக்கே
வழி இல்லாமல்
போய் விடுமோ என்பதும் போல !

எம்மாற்றமும்
எந்நொடியும் நிகழலாம்
என்ற போதும்
எண்ணத்து அளவிலும்
எதிர்மறை வந்ததில்லை ..

எனக்காக நீ இருப்பாய்
என்ற நேர்மறையில் மட்டும் ..!


- யாழ்





உங்கள் கருத்து என் அடுத்த கவிதைக்கு விதை

நன்றி


உன் காதல் இன்றி நானே இல்லை என்னிடம்

அருமை

உம் கருத்து என் அடுத்த கவிதைக்கு விதை ...

சுவாஸ் என்பது சுபாஸ் ஆனது ...

புத்தி நாசத்தாலே உடல்பலம் அழிந்து புற ஆயுதங்களை நாடும் கோழைகள்...

அருமை ஐயா ...


யாழ் கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே