chithra rajachidambaram- கருத்துகள்

ஏனோ தெரியவில்லை ,உங்கள் கவிதையை வாசிக்கும் பொது 'பொன் ஒன்று கண்டேன் பாட்டு மனதின் பின்புலத்தில்
ஒலிக்கிறது ! கவிதைக்கும் ,இது உங்கள் அனுபவமெனில் கவிதையான அந்த வாழ்க்கைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

பாராட்டுக்கு நன்றி

சத்குருவின் அருளாசியோடு இயற்கையுடன் நான் கழித்த ஓர் மௌனப்போழுதில் ,எனக்குக் கிடைத்த உண்மையின் தரிசனம் இது..வாழ்த்துக்கு நன்றி

உளமார்ந்த பாராட்டு வரிகள் உற்சாகம் அளிக்கின்றன .நன்றி .

நண்பரே ..சற்று முன் நான் பதிவு செய்த மேககுரு என்ற தலைப்பிலான என் கவிதை என் பக்கத்தில் இல்லை..பதிவானதா என்று எப்போது தெரியும் .

ஓட்டக்களத்தில் பந்தயக்குதிரைகளாய் ஓடிக் களைத்துக் கொண்டிருக்கிறார்கள் ..வெறும் கற்பனை சந்தோஷங்களில் காலம் தள்ளிக்கொண்டிருப்பவர்களுக்கு நிஜ சந்தோஷங்கள் சுத்தமாய் மறந்து விடுமோ என்று பயமாய்தான் இருக்கிறது ...அள்ளக் குறையாத மழலையின் சிரிப்பும் ,ஆபத் பாந்தவனாய் என்றும் துணை நிற்கும் பெரியோரின் அறிவுரையும் ..என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷங்கள் என்று உணரும் காலம் வருமா?

நினைவுகளின் அழகான பதிவு

போட்டி நிறைந்த உலகில் மன அழுத்தம் ,பொறாமை ,சுயநலம் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்டு விட்டது நேயம்

.நிஜம்தான் துன்பம் இன்பம் லாபம் நஷ்டம் எல்லாம் நம்மால் தோன்றியதுதான்.அற்புதமான கவிதை
paaratukkal

வாழ்க்கையை ரசித்து வாழ்வதும் ,மனம் விட்டுச் சிரிக்கத் தெரிந்திருப்பதும் மிகப் பெரிய வரம் பெண்ணே .உன் உற்சாகம் என்றும் தொடரட்டும்.வாழ்த்துக்கள்

பல வருடங்களுக்கு முன் தனது புதல்வர்களின் அகால மரணத்தினால் மனம் நொந்து பதினைந்து நாட்கள் உணவு நீர் அருந்தாமல் ,மருத்துவக் கண்காணிப்பையும் மீறி ,உயிர் நீத்த என் பாட்டியின் மனத் தகிப்பு எனக்குள்ளே பதிந்து விட்ட ஒன்று.இரும்பு போன்ற மனஉறுதியும் ,எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு சொல்லும் தீர்க்க அறிவும் கொண்ட பெண்மணியாய் வாழ்ந்த அவளையே வேரோடு சாய்த்து விட்டது விதி

நிஜம்தான் .இக்கவிதை எழுத்து இணையதள கவிஞர் பலரின் எண்ணப் பிரதிபலிப்பே .மனமார்ந்த வாழ்த்துக்கள்


chithra rajachidambaram கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே